முஸ்லிம் பெண்மணி..

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா?

Posted: June 3, 2013

முஸ்லிம் பெண்கள் ]நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் ! யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர்? (Al Quran 5: 8. )

கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.

• பத்திரிகையாளர்கள்

o எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் தங்கள் பத்திரிகையின் முன்பக்கம், நடுப்பக்கம், கடைசிப்பக்கத்தில் கவர்ச்சி படங்களை இட்டு காசாக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

• தொலைகாட்சியாளர்கள்

o எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் சினிமா, சீரியல், தலுக்கு குலுக்கு நடணங்கள், மானாட மயிலாடப் போன்ற ( மயிர் கூச்செரியும்) இன்னும்பிற நிகழ்ச்சிகள் வரை ஆபாசங்களையும், அந்தரங்க சமாச்சாரங்களையும் அரங்கேற்றுவதற்கு கோடம்பாக்கம் வெறிச்சோடிப்போய் விட்டால் தங்களது தொலைகாட்சிகளை இயக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

• அழகிப் போட்டி நடத்தும் சேடிஷ்டுகள்.

o எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் அழகிப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் தேர்தெடுக்கப்படும் அழகி(?)களை விளம்பரங்களில் நடிக்கவைத்தும், அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சப்ளை செய்து கோடிகளை உண்டாக்க முடியாத நிலை ஏற்படும்.

• நட்சத்திர ஹோட்டல் குபேரர்கள்

o எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காக வருகை தரும் விஐபி, மற்றும் தொழில் அதிபர்களுக்கு மஸாஜ் செய்து விட்டும், பார்களில் ஊற்றிக் கொடுத்தும், பிரம்மாண்டமான அரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்வித்து கத்தை கத்தையாக கரன்சிகளை கரக்கச் செய்வதற்கு பெண்கள் கிடைக்கா விட்டால் நட்சத்திர அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும்.

அவ்வாறான ஒரு நிலை உருவானால் பெண்களை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களது கேளிக்கை நிருவனங்களை அவர்களது குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தூக்கி நிருத்த முன் வர மாட்டார்கள். இந்த சேடிஷ்டுகள் ஊரான் பெற்றப்பிள்ளைகளைக் கொண்டு தான் அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் கடைவிரித்து காசு பண்ணுவார்கள்.

அதனால் மேற்காணும் சதை வியாபாரிகளே அதிகபட்சம் பெண்களின் பாதுகாப்பு பர்தா சம்மந்தமான சர்ச்சைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகைவதைக் கண்டால் வீறு கொண்டெழுந்து அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.

அதில் ஒன்று தான் சமீபத்திய விஜய் டிவி புர்கா அணிந்து பெண்கள் வெளியில் செல்வதை கொச்சைப் படுத்தும் விதமாக நடத்தவிருந்த நீயா? நானா? போட்டி சரியான தருணத்தில் தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவித்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.

இன்னும் சில கடவுள் மறுப்பாளர்களும், இஸ்லாமிய விரோதிகளும் நடத்தும் ஊடகத்திலும், இனையத்திலும் பர்தா சம்மந்தமான சர்ச்சைகைள் எழும்போது இதுப்போன்ற போட்டோக்களை மட்டும் இட்டு மதவெறியையும், கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்தி குதூகலம் அடைவார்கள் ஹிஜாப் எங்கள் உரிமை எனறு வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருக்கிறது. இதுப் போன்ற போட்டோக்கள் எல்லாம் அவர்களுடைய மதவெறிப் பார்வையில் படாது உலகம் முழுவதிலும் முஸ்லிம் பெண்கள் இது மாதிரியே நடப்பதுப் போன்றும் சித்திரிப்பார்கள். குறுகிய வட்டத்திற்குள் முடங்கி கிடக்கும் குறுமதியாளர்கள்.

• ஃபிரான்ஸில் நடந்தது என்ன?

ஃபிரான்ஸில் ஒருக் கல்லூரி நிர்வாகம் முகத்தை மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம் பெண்களுக்கு தடை விதித்தார்கள். இதே புர்கா அணிந்து கொண்டு வரக் கூடாது என்ற தடையை விதித்திருந்தால் இது போன்ற பல தடைகளை அதே ஃபிரான்ஸிலும், இன்னும் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டில் இயங்கும் சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் போராடி உடைத்தெறிந்திருக்கின்றன அதேப் போன்று இதையும் உடைத்தெறிய ஃப்ரான்ஸில் இயங்கும் முஸ்லீம் அமைப்புகள் போதுமானது.

பல சமுதாயத்தவர்களும் இணைந்துப் போராடி சுதந்திரம் பெற்ற இந்திய ஜனநாயக நாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதுமாதிரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மதம் சார்ந்த பிரச்சனைகள் எழும்போது அதில் நியாய, அநியாய அடிப்படையில் தங்களது ஊடகங்களில் பதிய வேண்டும், இல்லை என்றால் கோடம்பாக்கத்தையே உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.

• கற்பழிப்புக்கான காரணம்?

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான காதல் அதிசயம் என்றான் சினிமாக் கவிஞன்.

கல் தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான கற்பழிப்பு அதிசயம் என்பதே உண்மை.

இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் 1929ல் எட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டமியிற்றினார்கள் எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களை கற்பழிப்பது குற்றமில்லை எனும் அளவுக்கு தொன்மை வாய்ந்தது இந்தியாவின் கற்பழிப்பு நிகழ்வுகள்.

சமீபத்தில் தலைநகர் டெல்லியை குலுக்கும் தொடர் கற்பழிப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனால் மற்ற மாநிலங்களில் கற்பழிப்புகள் இல்லை என்றோ, அல்லது குறைவு என்றோ கருதிடக்கூடாது. இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்தப் படுகிறாள் என்றும், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப் படுகிறாள் என்றும் போலீஸ் தகவல் அறிக்கைக் கூறுகிறது. பாராளுமன்றம் இயங்கும் தலைநகரில் லட்சனம் பாரீர் எனும் தொனியில் தலைப்புக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டது அவ்வளவு தான்.

மேல்படி அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.

இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.

மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா?

• புர்காவே பாதுகாப்பு

ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். ( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )

மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதால் அழகலங்காரத்தை முதலில் தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவேச் செய்தன இறுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுக்கமான உடைகள் அணிந்து வருவதே சக ஆண் ஊழியர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அறிந்தவர்கள் உடம்பை மறைக்கும் புர்கா அணிந்து வர சட்டமியற்றினர்.

சிறகடித்துப் பறக்கும் பருவத்தில் அதன் சிறகொடித்து பூட்டியக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பறவைப் போல் படித்துக் கொண்டிருக்க கூடிய 17 வயது பிஞ்சுப் பருவத்து இளம் மொட்டொன்று சமீபத்தில் காமுகன் ஒருவனால் கசக்கிப் பிழிந்து முதியோர் காப்பகத்தில் வீசி எறியப்பட்டதற்கு எது காரணம் ?

கீழ்காணுமாறு புர்கா அணிந்து கொண்டு கண்ணியமாக அமர்ந்து பாடம் படித்திருந்தால் காமுக ஆசிரியர்களின் பார்வை கண்ட இடங்களிலும் பட்டு இந்நிலை உருவாகி இருக்குமா?

பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.

o பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று தினமனி கதிரில் (4-2009-ல்) பெருமூச்சு விட்டிருந்தார் ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.

ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது.

o 24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300

மேற்காணும் திருமறைக் குர்ஆனில் பெண்களுக்கு சொல்லப்பட்ட ரத்தின சுருக்கமான கட்டளைகளை அவர்கள் பேணிக் கொண்டால் கற்பழிப்புகள், மற்றும் கள்ளக்காதல்களின் வாசல் கதவுகள் நிரந்தரமாக இழுத்து தாழிடப்படும்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதுவே எங்களுக்கு பாதுகாப்பு அதனால் புர்கா அணிந்து கொண்டே வெளியில் செல்வோம், புர்கா அணிந்து கொண்டே கல்லூரிக்கு செல்வோம் எங்கள் உரிமையில் கை வைக்காதே என்று புர்கா அணியச் செய்வது முஸ்லீம் பெண்களின் மீது இழைக்கப்படும் அநீதி என்று ஓநாய்கள் அழுத பொழுது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் முஸ்லீம் பெண்கள்.

இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் கற்பழிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியாதக் காரணத்தால் இறுதியாக அத்வானி அவர்கள் கற்பழிப்புகளுக்கு ( இஸ்லாமிய ) மரண தண்டனையே சரியானத் தீர்வு என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கற்பழிப்புகள்.

கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக்கிய இஸ்லாம் கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.

பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்.

ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா ? அவர்கள் மனித இனமா ? என்ற ஆய்வை ஆணினம் மேற்கொண்ட பொழுது உனது ஆய்வை நிருத்திக்கொள் அவர்களும் உன்னைப் போன்ற மனித இனமே உன்னிலிருந்தே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றுக் கூறி அவர்களுடைய ஆய்விற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். 49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

படைப்பாளன் அல்லாஹ்வே என்பதற்கு அல்லாஹ்வின் வாக்குகள் அடங்கிய ஆண் பென் இரு சாராருக்கும் மத்தியில் பாரபட்சம் காட்டாத மேற்காணும் திருமறைக்குர்ஆனின்; வசங்கள் மிகப் பெரிய ஆதாரம்.

”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்”. (5: .

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104

”Jazaakallaahu kairan” அதிரை எக்ஸ்பிரஸ்

[ Anñisa | முஸ்லிம் பெண்கள் ]

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்….

Posted: January 19, 2013

முஸ்லிம் பெண்மணி(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்…கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:
(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.
(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.
(4) ஆணாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது.

(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)
Anñisa | முஸ்லிம் பெண்கள்

ஹலோ! மங்கையர்களே உங்களைதான்…!!

Posted: January 23, 2013

முஸ்லிம் பெண்மணிநம் பெண்கள் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்…. கல்வியிலும் அலுவலகங்களிலும் தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள். நாம் வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு…இப்படிதான் இருங்கள் என்று சொல்லவில்லை, இப்படியும் முயன்று பாருங்களேன்… வேறு மாற்று வழிகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்…….. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்’. (அல்குர்ஆன் 24: 31)

01. உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும்.ரொம்ப ‘டைட்டா’கவும் இல்லாமல் அதிக ‘லூசா’கவும் இல்லாமல்,கண்களை உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்….

02. உடலை முழுக்க மூடும் ‘புர்கா’ அல்லது ‘அப்பாயா’ போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும்.அப்படியில்லையென்றால்,முழுக்கை ‘சல்வார்’ அல்லது முழுக்கை ‘குர்தா’ போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்…..

03. அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்….

04. ஆண்களிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை.ஆனால், அது ஒரு கண்ணியமிக்க நட்பாக மட்டுமே இருக்கட்டும்.மாறாக,தேவையில்லாத ‘வெட்டி’ அரட்டைகளுக்கும் ‘வழிசல்’களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்….

05. யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால், அவர்களிடம் கடுமையாக நடக்க தயங்காதீர்கள்….

06. புன்னகை முகமாக இருங்கள். ஆனால்,தேவையில்லாமல் சிரிக்கும்,வரையில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம்….

07. நன்பர்களைப் பற்றி பெற்றோரிடம் எந்த ஒளிவுமறைவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஆண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்.அது உங்கள் நன்பர்களை உங்களுடன் வரைமுறையோடு பழகச் செய்யும்…..

8. ‘late night’ போன்களையும் ‘sms’ களையும் தவிருங்கள்……

09. தற்போது batch party,batch tour போன்றவை சகஜம்.அச்சமயங்களில் முடிந்தளவு பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்ளுங்கள்.

10. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக தங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்…..

11. பிரச்சனைகளை பொறுமையுடன் கையாள்பவராக இருங்கள்…..

மொத்தத்தில், பிறரின் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர பேதை பெண்ணாக அல்ல……

Anñisa | முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம்பெண்மணி- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்…

Posted: January 2, 2013

முஸ்லிம் பெண்மணிபெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தாஅணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.பர்தா தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் .

-islam

Anñisa | முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம் பெண்- பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

Posted: December 22, 2012

முஸ்லிம் பெண்மணிஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும். 1. முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.
2. உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.
3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.
4. ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.பர்தா-01
5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.
6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் – இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்).
7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும்.
அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:- பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.“நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்-33:59)பர்தா-02இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது.மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள்.(அல்குர்ஆன் 24:31)நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ – 1167)
எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும்.பர்தா-03 பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:-ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.சில வருடங்களுக்கு முன்பு ஷரீகா ஷா என்கிற கல்லூரி மாணவியை ஆட்டோவில் சென்ற ரவுடிகள் அவளை பிடித்து இழுத்து ஆட்டோவின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பெண் தெருவில் இழுபட்டு மரணித்ததை அவ்வளவு விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சரிவர உடலை மறைத்து உடை உடுத்தாததினால் தான் பெண்களுக்கு இப்படியான சம்பவங்கள் நேருகிறது என்று காவல் அதிகாரிகளால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள்.
ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. (ஆதாரம் – தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு) பர்தா-4தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார். (ஆதாரம் – தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு)
பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்:பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு.
உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார். கேரள முஸ்லிம் மக்களிடையே பர்தா கலாச்சாரம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒன்றுக்கு 50 பர்தாக்கள் விற்ற கடைகளில் இப்பொழுது 200 பர்தாக்கள் வரை விற்பதாக ஒரு கடைக்காரர் கூறுகிறார். (ஆதாரம்: http://us.rediff.com/news/2004/sep/15igi.htm)பர்தா-5மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார். (ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002)லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள்.
ஆதாரங்கள்: http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/965693.stm, http://www.islamfortoday.com/police.htm, http://www.islamfortoday.com/women.htmபர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான்.

நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி “சிகாகோ டிரிபியூன்” என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார். ஆதாரம்: (http://www.oprah.com/tows/pastshows/towns_past_20011005_g.jhtml)

ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள். (ஆதாரம்: http://www.islamfortoday.com/hijabcanada.htm)
இந்த பெண்களின் மூலம் பர்தாவின் அவசியத்தை மேலைநாட்டவரும் உணர்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

பர்தாவை பிற்போக்குத்தனம் என கூறுபவர்களின் நோக்கம்:

மேற்கத்திய மக்கள் பெருவாரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாத்தின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக யூதர்கள் பல வழிகளில் முயல்கின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாத்தை பிற்போக்குவாத மதம் என்றும், தீவிரவாத மதம் என்றும், காட்டுமிராண்டிதனமான மதம் என்றும், பெண்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய மதம் என்றும் பலவாறாக சித்தரித்து மக்களை திசைதிருப்ப முயல்கின்றனர். இதில் ஒரு முக்கிய ஆயுதமாக பர்தாவையும் கையில் எடுத்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்கிற ரீதியில் பர்தா பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரவச் செய்கின்றனர்.

உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் பர்தா அணிவதை தடை செய்துள்ளார்கள். இதன் உள்நோக்கம் கிறிஸ்தவ பாரம்பரியத்தை காப்பாற்றுவது தான். மேலும், சமீபத்தில் நடந்த ஐக்கிய ஐரோப்பிய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் இஸ்லாம் தளைத்தோங்குவதை தடுக்கும் எண்ணத்துடன் பர்தா அணிவது பெண்களை பிற்போக்கு படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற சர்ச்சையை ஏற்படுத்தி பர்தாவை தடை செய்துள்ளனர். இதே தடையை ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாண்ட், ஆகிய நாடுகளிலும் அமல்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
(ஆதாரம்: http://www.freep.com/new/nw/islam/8_20040308.htm)

முஸ்லிம் நாடான துருக்கியை ஐக்கிய ஐரோப்பிய அமைப்பில் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் கொள்கையை அடகு வைக்க கூறுகின்றனர். இதன் காரணமாக அங்கேயும் பர்தாவை தடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பிளிட்ஸ் பியாஸ் என்ற கல்லூரி மாணவி பர்தா அணிந்து பல்கலைகழகத்திற்குள் நுழையும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டாள்.(ஆதாரம்: http://www.inminds.co.uk/hijab-ban/personal.html)

நாகரீகம், படிப்பு, சுயகட்டுப்பாடு இவையே சிறந்த தற்காப்பு. இவையிருந்தாலே போதும்; பர்தாவின் அவசியம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மேலைநாடுகளில் ஒன்றான கனடா நாட்டில், அந்நாட்டுப் பெண்கள் ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் வீதம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். (ஆதாரம்: http://www.forumhub/expr/13422.20393.00.27.24.hg/)

இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவ மிஷனரியிலிருந்து பண உதவிகள் பெறுவதற்காக இலங்கையின் விடுதலைப்புலி அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் விதமாக பர்தாவையும் ஒரு பகடைக் காயாக பயன்படுத்துகின்றனர். (ஆதாரம்: http://www.Muslimedia.com/archives/world99/sri-hijab.htm)

அல்லாஹு எல்லா பெண்களையும் பேரழகுடன் படைத்திருக்கிறான். பர்தாவினுள் இருக்கும் அவ்வழகை ரசிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் காமவெறி பிடித்த கயவர்கள் பர்தாவை பிற்போக்குத் தனம் என கூறுகிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் தருகிறோம். மேலை நாடுகளைப் போல நம் நாட்டையும் நவீனமாக்குகிறோம் எனக் கூறி அழகிப் பேட்டி, மாடலிங், மற்றும் விளம்பரப் படங்கள் போன்ற கலாச்சார சீரழிவை விளம்பர முதலாளி வர்க்கத்தினர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்துகிறார்கள். கணவர் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை எல்லோரும் பார்க்க வரும்படி விளம்பரப்படுத்தி நுழைவுச் சீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பர்தாவை ஆதரித்தால் எங்கே இது மாதிரி அரைகுறை ஆடைகளுடன் பெண்களை நடக்கவிட்டு அவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் பர்தாவை பிற்போக்குத்தனம் என்றும் கூறுகிறார்கள்.

இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாமல் பர்தா அணிவதற்கு எதிரான வாதங்களை மாற்றுமதத்தினர் வாதிட்டாலும் அதே தரப்பினரில் இஸ்லாத்தின் மேன்மையையும் பர்தாவின் முக்கியத்தையும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவி கொண்டே தான் இருக்கிறார்கள்.

பெண்கள் பர்தா அணிவது எந்தவிதத்திலும் அவர்கள் சுதந்திரத்தை பாதிக்கவில்லை, அவர்கள் முன்னேற்றத்திகு எந்த தடையாகவும் இல்லை எனபதை மேலே தொகுத்தளித்திருக்கும் கருத்துக்கள் தெளிவாக விளக்குகின்றன.

எனவே எல்லா பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவர்கள் மரணம் வரை பர்தாவைப் பேணி தன்னை அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து காத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவின் பொருத்தத்தை தேடி கொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்!

Posted: December 15, 2012

முஸ்லிம் பெண்மணிஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7:26) மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும். ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமதுதந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமதுசகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்கவேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24 : 31)பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தால் கூட அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களின் நிலை அவ்வாறன்று. அதனால் தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப்படியாக விதித்துள்ளான்.ஆனால் நம் பெண்களோ மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக்கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளனர். இறையச்சத்தை விட, தனது மானத்தை விட இவ்வுலக அலங்காரத்தையும் அந்நியவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது.
நமது பெண்கள் “தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத் ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். இது தான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.Photo: இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்! ( @Anñisa | முஸ்லிம் பெண்கள் )ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7:26) மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும். ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமதுதந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமதுசகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்கவேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 24 : 31) பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தால் கூட அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களின் நிலை அவ்வாறன்று. அதனால் தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப்படியாக விதித்துள்ளான். ஆனால் நம் பெண்களோ மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக்கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளனர். இறையச்சத்தை விட, தனது மானத்தை விட இவ்வுலக அலங்காரத்தையும் அந்நியவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது.நமது பெண்கள் "தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத் ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். இது தான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம் இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம். ஆனாலும் அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய விஷயங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அந்நிய ஆண்களின் முன்னிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் ஆடை விடயத்தில் தலைகீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை. இன்று நம் பெண்களை வீதிகளில் காணும் போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாத அளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றது. இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம். ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன ஃபேஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage) மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும் சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை அறிய வேண்டாமா? ஏன் இந்த ஆடைகளை ஒழுக்கமான முறையில், உடலமைப்பைக் காட்டாத முறையில், அலங்காரத்தை வெளிப்படுத்தாமல், தளர்த்தியாக அணிய முடியாது?! இவ்வுலக அலங்காரமும், மோகமும், மற்றவர்களின் திருப்தியுமே எமக்கு அழகாக தோற்றமளிக்கின்றது. ஆனால் ஈருலகிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்ற அல்லாஹ்வின் திருப்தி மட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்கின்றது. ஆடைக்குறைப்பினாலும், முறையாக அணிந்தும் இறுக்கமாக அணிவதாலும் ஏற்படும் விபரீதங்களை பெண்களாகிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் படைத்தவனாகிய அல்லாஹ் அதற்காக பாதுகாக்கும் கவசமாக ஆடையை வழங்கி அதற்கான வரையறைகளையும் வகுத்து நமக்கு அருள் புரிந்துள்ளான். கவர்ச்சி காட்டுவதை அறியாமைக்கால (ஜாஹிலியாக்கால) பண்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான். உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள்நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். (அறிவிப்பவர் ; அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 3971) O பெண்களின் ஆடை எவ்வாறு அமைதல் வேண்டும்?பெண்களின் ஆடையானது இறுக்கமில்லாமல் அணிந்தும் அணியாதவாறு இல்லாமல் அதாவது மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியக் கூடியவாறு மெல்லியதாக இல்லாமல் அலங்காரங்களை வெளியே காட்டாத வகையிலும் இருத்தல் வேண்டும். ஆனால் கணவன் முன்நிலையில் மட்டும் எந்தவித வரையறையும் இன்றி மேற்கூறிய தடைகளின்றி ஆடையலங்காரங்களை அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முஸ்லிம் பெண்களின் ஆடையானது ஹபாயாவாக, கறுப்பு நிற ஆடையாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. எந்த நிறத்திலும் ஆடை அணிய மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. இஸ்லாம் மார்க்கமானது பெண்களின் ஆடை அமைய வேண்டிய ஒழுங்கு முறைகளைத் தான் வரையறுத்து நிர்ணயித்துள்ளது. O அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?" எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு,நூல் : முஸ்லிம் 131 O பெண்களுக்கான பாதுகாப்புநபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்றஅன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 59) Jazakallahu Hairan - Shahinaa ShaafiAnñisa | முஸ்லிம் பெண்கள்ஆம் இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம். ஆனாலும் அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய விஷயங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?அந்நிய ஆண்களின் முன்னிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் ஆடை விடயத்தில் தலைகீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை. இன்று நம் பெண்களை வீதிகளில் காணும் போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாத அளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றது. இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம்.ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர்.ஹபாயா என்பது கூட நவீன ஃபேஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage) மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும் சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை அறிய வேண்டாமா? ஏன் இந்த ஆடைகளை ஒழுக்கமான முறையில், உடலமைப்பைக் காட்டாத முறையில், அலங்காரத்தை வெளிப்படுத்தாமல், தளர்த்தியாக அணிய முடியாது?! இவ்வுலக அலங்காரமும், மோகமும், மற்றவர்களின் திருப்தியுமே எமக்கு அழகாக தோற்றமளிக்கின்றது.ஆனால் ஈருலகிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்ற அல்லாஹ்வின் திருப்தி மட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்கின்றது. ஆடைக்குறைப்பினாலும், முறையாக அணிந்தும் இறுக்கமாக அணிவதாலும் ஏற்படும் விபரீதங்களை பெண்களாகிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் படைத்தவனாகிய அல்லாஹ் அதற்காக பாதுகாக்கும் கவசமாக ஆடையை வழங்கி அதற்கான வரையறைகளையும் வகுத்து நமக்கு அருள் புரிந்துள்ளான். கவர்ச்சி காட்டுவதை அறியாமைக்கால (ஜாஹிலியாக்கால) பண்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான்.உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள்நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். (அறிவிப்பவர் ; அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 3971)

O பெண்களின் ஆடை எவ்வாறு அமைதல் வேண்டும்?
பெண்களின் ஆடையானது இறுக்கமில்லாமல் அணிந்தும் அணியாதவாறு இல்லாமல் அதாவது மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியக் கூடியவாறு மெல்லியதாக இல்லாமல் அலங்காரங்களை வெளியே காட்டாத வகையிலும் இருத்தல் வேண்டும். ஆனால் கணவன் முன்நிலையில் மட்டும் எந்தவித வரையறையும் இன்றி மேற்கூறிய தடைகளின்றி ஆடையலங்காரங்களை அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் ஆடையானது ஹபாயாவாக, கறுப்பு நிற ஆடையாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. எந்த நிறத்திலும் ஆடை அணிய மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. இஸ்லாம் மார்க்கமானது பெண்களின் ஆடை அமைய வேண்டிய ஒழுங்கு முறைகளைத் தான் வரையறுத்து நிர்ணயித்துள்ளது.

O அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு,
நூல் : முஸ்லிம் 131

O பெண்களுக்கான பாதுகாப்பு
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்றஅன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 59)

Jazakallahu Hairan – Shahinaa Shaafi
Anñisa | முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம்பெண்மணி- குழந்தை வளர்ப்பு ஒரு இஸ்லாமிய பார்வை..

Posted: December 9, 2012

முஸ்லிம் பெண்மணிஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்….

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்… அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை…..
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும் மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.
குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது…..
இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்….
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ…
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம். சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்….
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது…..
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும். அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும் பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.
எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401

இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு ’’தஸ் புஸ்’’ என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்??? நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???
அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவது
குழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.
ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் –
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223
நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி
கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது….
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்.புகாரி-5997
முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.
நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்….?
தோளில் தட்டி கொடுக்கிறோம்…?
தலையை வருடிக் கொடுக்கிறோம்…..?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்…?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்…?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்…. இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல… தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)

அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.
அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்…
குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்…
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்….?
7 வயது வரை…..!!!!
நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின் சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???
அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!
அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்….. அப்பொழுதுதான் இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.

பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.

அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்…
பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்….
இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை….
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி
தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952

இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.

தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும். பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும் 100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும் ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்…
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும் சம்பாதித்து இருப்பார்.

உங்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.

குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது… அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.
ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது….
ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்…
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்….
நான்காவது இடம் யாருக்கு…..?
ஐந்தாவது இடம் யாருக்கு….?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு……
மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்…. இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்….
இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம். உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…

Posted: November 18, 2012

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.

எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 4320

இறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்’ எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் “அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி),

நூல்: அஹ்மத் 16944

ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் “ஹகம்” (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் “தீர்ப்பு” உள்ளது. நீர் ஏன் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், “என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “இது அழகானதல்ல” எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி “அபு ஷுரைஹ்” (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.

நூல்: அபூதாவூத் 4304

நபியவர்களின் புனைப் பெயர்

நபியவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்’ ஆவேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: முஸ்லிம் 4323

ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அஹ்மத் 9226

மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் “அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) “நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள்.

நூல்: புகாரி 2120

இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது.எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.

ஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.

என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) “சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்) முரட்டுத்தனம் நீடித்தது.

அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி),

நூல்: புகாரி 6190
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆஸியா’ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 4332

இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.

அலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களின் பெயராகும்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ “சுர்ஆ” (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்)

அறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் (ரலி),

நூல்: அபூதாவூத் 4303

மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மக்கா வெற்றி நாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள் செவியேற்றார்கள்: (நபியவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை “(முதீவு)” தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.

அவரின் பெயர் “ஆஸி” (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “முதீவு” (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள்.

நூல்: அஹ்மத் 15446

பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர்: பஷீர் (ரலி),

நூல்: அஹ்மத் 20950

தன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 4335

நான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருக்கு “ஸைனப்’ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 4337

சில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 4334
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்

நூல்: முஸ்லிம் 4328

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).

இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை விடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி),

நூல்: முஸ்லிம் 4330

நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.

அறிவிப்பவர்: ஸலாமா (ரலி),

நூல்: அஹ்மத் 16542

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 4331

நம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.

ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.

மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

ஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது தவறாகும்.

-Bro.shukry mohamed-

முஸ்லிம் பெண்மணி- கணவன் விரும்பாத பண்புகள்…

Posted: November 11, 2012

குடும்ப வாழ்க்கை என்பது கணவன், மனைவி இருவருக்கு மிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது. இப்புரிந்துணர்வு அற்றுப் போகும்போது உறவிலே பாதிப்புகள் ஏற்படும். ஒரு மனைவி கொண்டிருக்க வேண்டிய பண்புகளை அவள் கொண்டிராதபோது கணவன் வெறுப்படைகின்றான். அதேபோன்று ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை அவன் கொண்டிராதபோது மனைவி வெறுப்படைகிறாள். இந்நிலைமைகைளினால் குடும்ப வாழ்வு சீர்குலைந்துவிடுகிறது.

ஒரு மனைவியிடம் இருக்கக் கூடாத சில பண்புகளை நோக்குவோம். இப்பண்புகளை எந்தவொரு கணவனும் விரும்பமாட்டான். இப்பண்புகளை கொண்டிருக்கின்ற மனைவிமார்கள் தம்மை சுயவிசாரணை செய்து கொள்ளட்டும்.

1. அதிகாரம் செலுத்தும் மனைவி:
இவள் கணவன் இருக்கின்றான் என்பதையே பொருட்படுத்தமாட்டாள். குடும்ப விடயங்களிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ அவனது ஆலோசனையைக் கேட்கமாட்டாள். தனது விருப்பப்படி செயற்படுவாள். இத்தகைய பெண் மீது கணவன் வெறுப்படைவான்.

2. பொய் சொல்லும் மனைவி:
சில பெண்கள் இயல்பாக பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், குடும்ப வாழ்வின் அடிப்படை உண்மையை பேசுவதாகும். குறிப்பாக கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பொய் கலந்துவிடக்கூடாது. குடும்ப வாழ்வின் மகிழ்ச்சி உண்மை பேசுவதிலே தங்கியிருக்கின்றது. எனவே, பொய் பேசும் பழக்கமுடைய பெண்கள் அதனை விட்டுவிடுவது குடும்ப வாழ்வின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்.

3. பிடிவாதமுள்ள மனைவி:
இவள் எப்பொழுதும் எந்த விடயத்திலும் பிடிவாதம் கொண்டவளாக இருப்பாள். அவளது கருத்து பிழையாக இருந்தாலும் கூட அவள் தனது பிடிவாதத்தைக் கைவிடமாட்டாள். இதனால், கணவனுக்கு அவளின்மீது வெறுப்பு ஏற்படும். இவள் எத்தகைய நல்ல விடயங்களை செய்தாலும் கணவனிடத்தில் அவற்றுக்கு பெறுமதி இருக்காது.

4. தனித்து போகும் மனைவி:
இவள் எல்லாவிடயங்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பாள். தனது பணிகளை மாத்திரம் செய்து கொள்வாள். தனிமையில் இருப்பது அவளுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இது சில வேளை, மனநோயாகக் கூட இருக்கலாம்.

5. உறவாடத்தெரியாத மனைவி:
இவள் கணவனுடனும் ஏனையவர்களுடனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியாதிருப்பாள். இவளால் அடிக்கடி குடும்பத்திற்குள்ளால் முரண்பாடுகள் ஏற்படும். இவள் அதிகமான பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பாள்.

6. எதிர்மறை சிந்தனையுள்ள மனைவி:
இவள் எப்பொழுதும் எந்த விடயத்தையும் எதிராகவே பார்க் கக் கூடியவளாக இருப்பாள். இதனால் சில நல்ல விடயங்கள் கூட நிகழாது போகலாம்.

குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்கு கணவன் மனைவி இருவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது முரண்பாடுகள் ஏற்படுவதும் அது விவாகரத்துவரை சென்று விடுவதும் தவிர்க்க முடியாததாகும். எனவே, கணவன் மனைவி இருவரும் தமது செயற்பாடு களை, நடத்தைகளை மீள்பரி சோதனை செய்துகொள்ள வேண்டும்…

முஸ்லிம்பெண்மணி – யார் மணப்பெண் ?

Posted: November 3, 2012

மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை.

தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.

அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஒரு முஸ்லிம் இறைவனை வழிபடுவதைக் காரணம் காட்டிக் கூட திருமணத்தைப் புறக்கணிக்க இயலாது.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்-க்கொண்டனர். அவர்கüல் ஒருவர், “(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
புகாரி 5063

ஒரு நபித்தோழர் முழுக்க முழுக்க இறைவனை வணங்கி வழிபடுவதற்காக திருமணம் செய்யவே மாட்டேன் என்கிறார். இதைக் கண்ட நபியவர்கள் ஆஹா… பேஷ்… பேஷ் என்று பாராட்டாமல் இதை கண்டிக்கின்றார்கள். தான் திருமணம் செய்துள்ளதாகவும் தனது வழிமுறையை புறக்கணிப்பவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்து திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றார்கள்.

இறை வணக்கத்தில் ஈடுபடுவதை காரணம் காட்டிக்கூட திருமணத்தை புறக்கணிக்க இயலாது எனும் போது வேறெந்த காரணத்திற்காகவும் திருமணத்தை புறக்கணிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அறியலாம்.

*திருமணம் ஓர் கேடயம்..

குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத்,
நூல் : புகாரி 5066

திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.

*திருமணம் ஓர் மன அமைதி..

பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான்.
“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189

ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம்.

திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது.
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?

இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்?
எவரைத் திருமணம் செய்தாலும் இறைவன் வாக்களித்தது கிடைத்து விடாது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என இறைவன் அறிவுறுத்தியுள்ளானோ அப்பெண்ணை மணந்தால் தான் இறைவன் வாக்களித்த மன அமைதியை, கட்டுப்பாட்டைப் பெற முடியும். அது சரி.

*யாரந்த மணப் பெண்?

மார்க்கப்பற்றும் மறுமை வெற்றியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி 5090

மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என நபிகளார் கூறுவதோடு அவள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் இந்த செய்தியில் தெரிவிக்கின்றார்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, கருத்து வேறுபாடுகளுக்கு மணப்பெண்ணை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியே அடிப்படை காரணமாக திகழ்கின்றது. மேற்கண்ட புலம்பலுக்கும் தவிப்புக்குமான காரணம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்யாததே என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

நல்ல பெண்ணே சிறந்த செல்வம்.

இஸ்லாம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மணந்து கொள்ள சொல்வதின் காரணம் ஒழுக்கமுள்ள பெண்ணுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி அவளை கண்ணியம் செய்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் செல்வங்களில் நல்ல பெண்ணே சிறந்த செல்வம் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
முஸ்லிம் (2911)

ஒரு மனிதன் உலகில் திரட்டும் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷம், பொற்புதையல் நல்ல பெண்ணே.

ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள். அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று நபியவர்கள் உமரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் (1417)

நல்லொழுக்கமுள்ள பெண்ணிற்கு இவ்வுளவு உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்குவதாலே மணப்பெண்ணை தேர்வு செய்வதில் ஒழுக்கத்திற்கும், மார்க்கத்திற்கும் முதலிடம் ஒதுக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுகிறது.

ஒருவர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதினால் அவரது வாழ்வில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கிறார். அவரது நிம்மதியான வாழ்விற்கு பல வகையில் ஒழுக்கமுள்ள பெண் அடித்தளமாக திகழ்கிறாள்.

குடும்ப நலனில் அக்கறை

நல்லொழுக்கமுள்ள பெண் தனது கணவனின் வீட்டாருக்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, பணிகளை அறிந்து, அது தொடர்பாக மார்க்கம் கூறும் பின்வரும் போதனையை எப்போதும் நினைவில் நிறுத்துக் கொள்கிறாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாüயாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), புகாரி 2554

என் கணவனின் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்ற கடமையுணர்வு மார்க்கப்பற்றுள்ள பெண்ணிடத்திலேயே இருக்கும். ஆதலால் அவள் தனது கடமைகளை செம்மையாக நிறைவேற்றுவாள்.

குடும்பத்தில் செய்ய வேண்டிய இதர வேலைகளை மாமியார் (பிறர்) சொல்லி செய்யப்படும் நிலை இருக்காது. தானே மனமுவந்து குடும்ப வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் குடும்ப உறுப்பினர்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவளாக மாறிவிடுவாள்.
எனவே கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லும் நிகழ்வுகளுக்கு இடமில்லாது போவதால் கணவனின் உளரீதியான பல பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். இந்த ரீதியில் கணவனுக்கு பெருமளவு நிம்மதி ஏற்படும் என்பது உறுதி.

*ஒழுக்க ரீதியாக…

நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்வதால் நமது குடும்பமும் ஒழுக்கமுள்ளவர்களாக, ஓரளவு மார்க்கப்பற்றுள்ளவர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

ஜாபிர் (ரலி அவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது தங்கள் சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களை பராமரிக்கும் பண்புள்ள, ஒழுக்கமுள்ள பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸிலிருந்து அறிகிறோம்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) “நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள்.அதற்கு நான்,”வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்…அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலüத்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (2967)

மார்க்கப்பற்றுள்ளவளை மனைவியாக தேர்வு செய்வதாலே நமது குடும்பம் சொர்க்கப்பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என்பதை நினைவில் கொள்க.

*குழந்தை வளர்ப்பில் அக்கறை..

நல்லொழுக்கமுள்ள பெண் கணவனின் குடும்ப நலனில் பொறுப்போடு நடந்து கொள்வது போல் தங்களின் குழந்தை வளர்ப்பிலும் கடமையுணர்வோடு நடந்து கொள்வாள்.

. பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
புகாரி (2554)

இன்று பலரும் தீயவர்களாக, இறைவனின் வெறுப்பிற்குரியவர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே.

குழந்தைகளை எப்போது கண்டிக்க வேண்டும்? எந்த இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இடம் பொருள் தெரியாமல் தங்கள் குழந்தைகள் தறுதலைகளாக மாறுவதற்கு ஒரு விதத்தில் பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றார்கள்.
தீமையான காரியங்களில் ஈடுபட பணம் கேட்டாமல் மறுப்பேதுமின்றி வழங்குவது, தீய நண்பர்களோடு சகவாசம், தொழுகையை புறக்கணித்து உறக்கம், தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல் போன்ற காரியங்களில் குழந்தைகள் ஈடுபடும் போது தக்க அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் வழங்க பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது போன்ற குறைகள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதால் வேறோடு பிடுங்கி, களையெடுக்கப்படும். அவளது அன்பு கலந்த கண்டிப்பினால் நமது குழந்தைகள் நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறுவார்கள்.

*கணவனுக்கு நல்ல துணையாக.

யாருக்கேனும் சிரம் பணிய வேண்டும் என ஒருவருக்கு நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு சிரம்பணிய வேண்டும் என பெண்ணுக்கு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி 1079

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : புகாரி (3237)

குறிப்பாக நல்லொழுக்கமுள்ள பெண் இது போன்ற கணவனுக்கு கட்டுப்படுவதின் அவசியத்தை உணர்ந்து, அவனுக்கு செய்ய வேண்டிய கடமையறிந்து செயல்படுபவளாக இருப்பாள்.

கணவன் கவலையில் வாடும்போது ஆறுதல் கூறுபவளாக, வறுமையில் உழலும் போது இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்ளும் தாராள மனப்பான்மையுடையவளாக, கணவனின் நெளிவு சுளிவுகளை அறிந்து நடப்பவளாக இருப்பாள். இப்படி நல்லொழுக்கமுள்ள பெண்ணிண் மூலம் ஒரு ஆண் அடையும் நன்மைகள் பற்பல.

ஒரு சில தம்பதிகள் சிறுசிறு விஷயங்களுக்காக எழுத சகிக்காத வார்த்தைகளால் சதா ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமகளாக தேர்வு செய்வது இது போன்ற பலபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்கும். ஒருவரையொருவர் புரிந்து நடக்கும் சூழல் கனியும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அனுபவித்தே உணரமுடியும். அவைகளை எழுத்தில் வடித்திட முடியாது.

ஆகவே திருமணத்திற்கு பிறகு நமது வாழ்க்கை இனிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது அழகு, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒழுக்கம் மார்க்கப்பற்று ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுவே நிம்மதியான, கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அச்சாரமாய் அமையும் என்பதை இறுதியாக நினைவூட்டிக் கொள்கிறேன்.
(குறிப்பு ; மேற்கூறப்பட்ட விஷயங்கள் யாவும் பெண்கள் மணமகனை தேர்வு செய்வதற்கும் பொருந்தக்கூடியதே)

அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

முஸ்லிம் பெண்மணி குழந்தை வளர்ப்பு – ஒரு இஸ்லாமிய பார்வை,,,

Posted: October 21, 2012

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்….

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்… அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை…..

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும் மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.
குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது…..
இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்….

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!

இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ…
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம். சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்….
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது…..

தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்

க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும் பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.

எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401

இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு ’’தஸ் புஸ்’’ என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்???

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???

அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவது
குழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.
ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் –
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223
நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி
கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது….
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்.புகாரி-5997
முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.
நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்….?
தோளில் தட்டி கொடுக்கிறோம்…?
தலையை வருடிக் கொடுக்கிறோம்…..?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்…?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்…?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்…. இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல… தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)

அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.
அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்…
குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்…
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்….?
7 வயது வரை…..!!!!
நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின் சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???
அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!
அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்….. அப்பொழுதுதான் இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.

பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.

அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்…
பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்….
இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை….
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி
தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952

இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.

தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும். பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும் 100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும் ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்…
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும் சம்பாதித்து இருப்பார்.

உங்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.

குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது… அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.
ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது….
ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்…
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்….
நான்காவது இடம் யாருக்கு…..?
ஐந்தாவது இடம் யாருக்கு….?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு……
மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்…. இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்….
இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம். உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

முஸ்லிம் பெண்மனி- இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு.

Posted: October 15, 2012

ஜூஹைனிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மனி விபச்சாரத்தில் ஈடுபட்டதின் காரணமாக கர்ப்பினியாகி விட்டார். அப்பெண்மனி அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் ”ஹத்து” எனும் கடும் தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விட்டேன். என் மீது தண்டiயை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்.(அதனைத் தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினரை அழைத்து இப்பெண்ணுக்கு உபகாரம் செய்வீராக! இப்பெண்மனி குழந்தையைப் பெற்றெடுத்ததும் என்னிடம் வருவீராக! எனக் கூறினார்கள்.

அவரும் அதேப்போன்று செய்தார்.(அதனைத்தொடர்ந்து)அப்பெண்ணிற்குரிய தண்டனையை நிறைவேற்றக் கட்டளையிட்டார்கள். அப்பெண்ணின் ஆடைகள் அப்பெண்ணின் மீது கட்டப்பட்டு ”ஹத்து” நிறைவேற்றப்பட்டது. பின்னர் அண்ணலார் அப்பெண்மனிக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்பெண்மனிக்காத் தொழ வைக்கிறீர்கள்? இப்பெண்மனி விபச்சாரம் செய்தவராயிற்றே! எனக்கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மனி மாபெரும் தவ்பா செய்துவிட்டார். அது எத்தகைதென்றால், அது மதீனா வாசிகளில் எழுபதுபேர்களுக்கு பங்கிடப்பட்டாலும் விஸ்தீரணமானதாக இருக்கும் அப்பெண்மனி தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்காக பரிசுத்தப் படுத்தியதை விட சிறந்த அமலை நீர் காண்பீரா? என்றார்கள். அபூ நுஜய்து இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்.முஸ்லிம். இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன் அரபுலகில் விபச்சாரம், கற்பழிப்பு போன்ற தீயச் செயல்கள் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக உலகிற்கு வருகை தந்தப்பின் குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டன. குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தையும் துடைத்தெறியப்பட்டதற்கு எது காரணமாக இருந்தது? தீமையில் மூழ்கிக் கிடந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்களால் ஆழமாக வேரூன்றச் செய்த மறுமை சிந்தனை!

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (திருக்குர்ஆன்)
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா? பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா? இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம். பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். உங்களை அற்பமான நீரிரிருந்து நாம் படைக்கவில்லையா? குறிப்பிட்ட காலம் வரை அதை பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா? நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள். பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். (திருக்குர்ஆன்)

உலக வாழ்வு நிரந்தரமல்ல, மறுஉலக வாழ்வே நிரந்தரமானது, நிரந்தரமான மறுஉலக வாழ்வில் நிம்மதியான வாழ்வை அடைந்து கொள்ள வேண்டுமெனில் அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப் பெறவேண்டும். அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப்பெற்றால் மட்டுமே சொர்க்கத்தில் நிம்தியாக வாழமுடியும், விசாரணையில் தோல்வியடைந்தால் நரகில் தள்ளப்பட்டு நிரந்தரமாக வேதனையை அனுபவிக்க நேரிடும். மறுமை வாழ்வை பொய்யென நினைத்து உலகில் தவறான வழியில் சுகம் அனுபவித்தால் இறுதித் தீர்ப்பு நாளில் கேடு தான். என்ற இறைவனின் சத்தியச் செய்தியை அந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்கள் ஆழமாக விதைத்த காரணத்தால் அதில் நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களுடைய குற்றச் செயலிலிருந்து முழுமையாக விடுபட்டனர். முழுமையாக விடுபட்டப்பின்னரும் சிலநேரங்களில், சிலர் ஷைத்தானுடைய தூண்டுதலால் இறைவனால் தடுக்கப்பட்ட சிலக் குற்றங்களை செய்து விட்டால் அதற்காக இறைவனிடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு, அல்லது அதற்கான குற்றவியல் தண்டனையை உலகிலேயே பெற்று தங்களை பரிசுத்தப் படுத்திக்கொண்டு மறுஉலக விசாரணையில் இலகுவாக வெற்றிப் பெறுவதற்காக முணைவார்கள். அப்படிப்பட்ட ஒரு தியாக சம்பவம் தான் மேற்கானும் சம்பவம்.

சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் அவர்களுடைய இஸ்லாமிய நீதிமன்றத்தில் கதவுகளைத் தட்டிய வித்தியாசமான வழக்கது. நாம் வாழுகின்ற இந்த உலகில் யாராவது ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தாமாக வந்து காவல் நிலையத்தில், அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்தால் அதில் பல சுயநலக் காரணங்கள் இருக்கும், பொதுநலக் காரணங்கள் இருக்காது. குற்றம் கண்டுப் பிடிக்கப்பட்டு தலைமறைவாகி காவலர்களால் தொடர்நது தேடப்பட்டு வரும் வேளையில் காவலர்களுடைய மரண அடியிலிருந்து தப்பித்துக கொள்வதற்காக சரணடைவார், அல்லது கொலை செய்து விட்டு இரத்தம் சொட்டும் அரிவாளுடன் தண்டனைய குறைப்பதற்காக காவல் நிலையத்தில் சரணடைவார்.
இதுப்போன்ற இன்னும் பல சுயநலக் காரணங்களுக்காக குற்றவாளிகள் தாமாக சரணடைவதைக காண்கிறோம் இது அந்தக் காலத்திலும் நடந்தது, இந்தக் காலத்திலும் நடந்து கொண்டிருககிறது. இன்று தங்களை தக்வாதாரி (இறையச்சமுடையயோர்) என்று காட்டடிக்கொள்ளக்கூடிய எத்தனையோப் பேர் தங்களுடைய குற்றங்களை வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து செய்கின்றனர் மாட்டிக் கொண்டால் கூட வாதத் திறமையால் மறைத்து விடுகின்றனர், அதையும் மீறி வழக்காடு மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் வாதத் திறமையுடன் வாதிடுகின்ற வக்கீலை வைத்து செயலிழக்கச் செய்து விடுகின்றனர். இன்னும் எத்தனையோ வழிமுறைகளில் கையும், களவுமாக கண்டுப் பிடிக்கப்பட்டக் குற்றங்களைக்கூட ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு தங்களை நிரபராதிகள் என்று மக்களிடம் அறிவிக்கச் செய்து விடுகின்றனர். இவர் மட்டும் ஏன் தாமாக சரணடைந்தார்? அதுவும் பொதுமக்கள் முன் கேவலப்பட்டு, சரீரம் முழுவதும் கடுமையான கல்லெறித தாக்குதலுக்குட் படுத்தப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட மரணத்தைத் தழுவும் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கு எதனால் முன் வந்தார்?

நமக்கேத் தெரியாமல் நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாப் பதிகின்ற பதிவேடு (Flash memory) நமக்குள் இருப்பதைக் கூறும் இறைச்செய்தி இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்தப் பெண்மனி வாழ்ந்தார்கள். பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ”இந்த ஏட்டுக்கு என்ன வந்தது ? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். திருக்குர்ஆன். 18:49

இறைவனால் மனிதகுலத்திற்கு தடைசெய்யப்பட்ட மொத்த சமுதாயத்திற்கும் தீங்கு இழைக்கக்கூடிய தீமையாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டதை வேறுயாரும் பார்க்கவில்லை என்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதுடன் தன்னிடம் இருக்கும் பதிவேட்டிலும் (Flash memory) பதிந்திருக்கும் அதை நாமே எடுத்து வாசிக்கும் நிலை மறுமையில் ஏற்படும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். திருக்குர்ஆன் 17:13. உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்). திருக்குர்ஆன் 17:14
உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாளில் நிகழவிருக்கும் விசாரணை மற்றும் இன்னப்பிற விஷயங்கள் பற்றியும்,, யாரும், யாருக்கும் சிபாரிசு செய்ய முடியாத நிலைப் பற்றியும், உலகத்தின் அதிபதியாகிய இறைவனுடைய வல்லமை மட்டும் மேலோங்கி நிற்கும் நிலை பற்றியும் துல்லியமாக இறைத்தூதர் வாயிலாக அப்பெண்மனி அறிந்திருந்த காரணத்தால் இவ்வுலகில் ஊர் மக்கள் முன்னிலையில் நிருத்தப்பட்டு கேவலப் படவிருப்பதைப் பற்றியோ, இவ்வுலகில் கல்லெறி மூலமாக தனது உடல் சுக்கு நூராகப் பிய்த்தெறியப்பட்டு வேதனையை அனுவபிக்கவிருப்பது பற்றியோ, கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் மறுஉலக நிரந்தர வாழ்வுக்காக உலகின் அற்ப வாழ்வை துச்சமாக்கினார். தன்னுடைய உயிரையும் அர்ப்பனம் செய்யத் துணிந்தார் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பெரிய ஓர் எடுத்துக் காட்டாகும். அவர்களில் ஒரு சிலரை மற்றும் சிலரை விட எவ்வாறு சிறப்பித்துள்ளோம்” என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப்பெரிய தகுதிகளும், மிகப்பெரிய சிறப்புக்களும் கொண்டது. திருக்குர்ஆன் 17:21
அன்று மதீனத்து மக்களே உலகின் பிற மக்களுக்கு இறைநம்பிக்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் அந்த முன்மாதிரி இறைநம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கையை விட 70 மடங்குக்கு இவருடைய நம்பிக்கை அதிகமானது என்று இறைத்தூதர் அவர்களே சிலாஹித்துக் கூறி அப்பெண்மணியுடைய ஜனாஸாவுக்கு தொழவைக்கவும் செய்தார்கள் என்றால் கருணைக் கடலாம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய கருணைக்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
ஓட்டக ஓட்டிகள், காட்டரபிகள், குற்றப் பரம்பரையினர் என்று பிற சமுதாயத்தவர்களால் தூற்றப்பட்ட சமுதாயத்தினரை குற்றமற்றவர்களாக, நேர்மையாளர்களாக நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் நன்மக்களாக வெறும் 23 வருடங்களில் (அதிலும் 10 வருட மக்கா வழ்க்கையில் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு முடக்கப்பட்டிருந்தனர்) மாற்றிக் காட்டிய வரலாறு பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிற உலகில் வேறெவருக்கும் இல்லை.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான். திருக்குர்ஆன் 47:2
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104….

இன்றைய இளம்பெண்கள்.(கட்டாயம்வாசிங்க..).

Posted: October 14, 2012

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

நன்றி-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

முஸ்லிம்பெண்மனி- இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’ ??!!

Posted: October 6, 2012 in muhasabanet..

நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை. திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் – நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.” (திருக் குர்’ஆன் 64:14-15)

இறைவன் நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..
அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை வலியுறுத்தியிருகிறது . என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.
இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.

என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 14:40

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக 14:41

என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் 21:89

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் 59:10

இந்த வசனங்களை கவனிச்சீங்களா? முதலில் தனக்கு கேட்ட பின் தான் மற்றவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கு இல்லையா? பொதுவாக சுயனலமற்றவர்களாக, எப்போதும் பிறர் நலம் கருதியே வாழ வேண்டும் எனும் கோட்பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.

அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் தனக்காக முதலில் கேட்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவ்வாறு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இது பற்றி சற்று சிந்தித்தால், இதில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நாம் இறைவனிடம் ஒரு விஷயம் வேண்டுவது, மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின் அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம் .

இதனை பலர் புரிந்து கொள்ளாமல் “சுயநலமற்ற மேதாவிகளாக” இருப்பதாகக் கருதிக் கொண்டு ” நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும், என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்” என்று சொல்கிறார்கள். இது உண்மையா?? நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.

இறைவன் ஏற்படுத்தியிருக்கின்ற சுயநலம் நமக்கு அவசியமானது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது .மாறாக ,நம்மை இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் இரண்டிலுமே வெற்றி பெறச் செய்யும், மற்றவர்களையும் நம்மோடு சுவனத்துக்கு இழுத்துச் செல்லும் சுயநலம்.

சுயநலமா இருங்கன்னு சொல்லியாச்சு. அப்ப பிறர் நலம் பத்தி யோசிக்காமல் இருந்தால் அது தப்பு இல்லையா? அது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்கப்போவதில்லை.

ஒருபுறம் நாம் சுயநலத்தை இஸ்லாமிய ரீதியாக நோக்கும் அதேவேளையில், இதன் மறுபுறமான “பிறர்நலம் கருதுவோம்” என்று கூறும் மனிதன் தாமும் பாவத்தில் விழுந்து அடுத்தவரையும் பாவம் செய்ய தூண்டுகிறான். மனிதன் எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டு தனக்காகவும் ,மற்றவர்களுக்காகவும் பாடுபடுகிறான் என்பதை அன்றாடம் நாம் காண்கிறோம். மற்றவர்களுக்காக அதிகமாய் சம்பாதிக்க வேண்டி அவன் எத்தகைய குறுக்கு வழிகளில் செல்கிறான்? இதில் எத்தனையோ பேர் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பொய், களவு, மோசடி, வட்டி, இவை எல்லாம் எதற்காக? நாம் எந்தளவு சம்பாதித்தாலும் ஒருவேளை வயிற்றுக்குதான். ஒருசில ஆடைகளைத்தான் அணியப் போகிறோம்.

நாம் யாராக இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனிதனாகிய நமக்கு அடிப்படை தேவைகள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் வாழப்போவதும் கொஞ்ச காலம் தான்.. நாம் சேர்க்கும் செல்வத்தை வேற யாரோ அனுபவிக்க போறாங்க.. அதற்காக நாம் தப்பான வழியில் அதை சேர்த்து வைத்து பாவம் செய்ய வேணுமா? நிச்சயம் தேவை இல்லை.

நாம் ஹலாலான(நேர்மையான) முறையில் சம்பாதித்து அன்றாட தேவைகள் போக மீதமானதை நமக்காக சேர்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவுக்கு நேர்மையாக, உண்மையாக, நீதியுடன் நடந்து செல்வம் ஈட்ட வேண்டும் .இப்படி செய்வது மற்றவர்களுக்கும் நன்மை செய்தது போல் அமையும். நம்மையும் சொர்க்கத்துக்கு இழுத்துச்செல்லும் இல்லையா?.

நாம் இவ்விடத்தில் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம் .மற்றவர்களின் தேவை இல்லாத விடயங்களில் தலையிட்டு அவர்களின் குற்றம் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து,,…. புறம் சொல்லி நம் நேரத்தை செலவு செய்கிறோம். கேட்டால் சமுதாய நன்மை என சொல்கிறோம். இதில் என்ன இலாபம் நமக்கு? மற்றவர்கள்களின் குறைகளை பற்றியே புறம்பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறது என, கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தால் புறம் பேசாமல் இருப்பது நமக்கு நன்மை என்பது எளிதில் புரியும். மாறாக அதை தொடர்ந்தால் மறுமையில் மற்றவர்களுடைய தீமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நம்மீது சுமத்தப்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோமா? அநீதி இளைக்கப்பட்டவன் அல்லாஹ்விடம் முறையிட்டால், நம்மை நோக்கி குற்றம் சாட்டினால், படைத்தவனிடம் நீதி கேட்டால்??!! என்ன செய்வோம் நாம்?

அதற்கு அல்லாஹ் குற்றப்பரிகாரம் கொடுக்குமாறு நம்மை பணித்தால்… சொத்தோ, பொருளோ உதவிடாத அந்நாளில் நமது நன்மைகள் அவர்கள் மீது சாட்டப்பட்டு அவர்களின் தீமைகள் நம்மீது திணிக்கப்படும். (இந்த நிலைமையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்)அதற்கு நாம் சுயநலத்தையும், பிறர் நலத்தையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சில உதாரணம் பார்க்கலாம்:

எந்த மனிதரும் தாம் உயிரோடு இருக்கும் போது தன்சொத்து முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தான் இறுதிகாலம் வரை அனுபவித்து பின்னர் தான் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற கூறுகிறது. இதில் சுயநலம் இருப்பது போல் தெரியும்… ஆனால் இது ஒரு அற்புதமான சட்டம்.. பாருங்கள்….

இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின் போது தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.( பாகப் பிரிவினை இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது வேறு விடயம் ) பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து சொத்துடன் போய்விடுகிறார்கள்…. அதன் பிறகு இவர்களின் நிலை என்ன? மாற்றானிடம் கை நீட்டி பிச்சை கேட்கிற நிலை ஏற்படும் .தம் பிள்ளையிடமே கை நீட்டி கேக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் ,இதன் காரணமாக பெற்றோரை மதிக்காத பிள்ளைகளால் பெற்றோர்க்கு நிகழும் சங்கடங்கள் எத்தனை எத்தனை? ஒருவேளை கணவன் மரணித்தால் மனைவி எந்த வசதியும் இன்றி தவிர்க்க நேரிடும். இதற்குத்தான் இஸ்லாம் யாராலும் இயற்ற முடியாத சட்டங்களை கொண்டிருகின்றது. இந்த விஷயத்தில் சுயநலம் மிகுந்த நன்மையை தருகிறது… இல்லையா?

அதேநேரம் மரணத் தருவாயில் செய்யும் மரண சாசனத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தானம் செய்ய தடை செய்துள்ளது இஸ்லாம். காரணம் குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டுச்செல்லாமல் இருக்கவும், அவர்களிடம் மேலதிகமாக சொத்துக்கள் இருந்தால் இலகுவாக இருக்கும் என்பதற்க்குமே! சட்டமியற்றுவதில் அல்லாஹ்வை விட சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

அடுத்ததாக:

ஒரு தாய் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்க வழிசெய்கிறாள் என்றால், அது அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மட்டுமல்ல. ‘தாய்’ என்ற தனது கடமையைச் சரியாகச் செய்வதன்மூலம் இரண்டு பலன்கள் அவளுக்கு: ஒன்று, ஒருவருக்கு நற்கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம், அவளது அக்கவுண்டில் நன்மை கூடுகிறது. இரண்டாவது, இறைவனிடம் மறுமைநாளில் தன் கடமையைச் சரியாகச் செய்துவிட்டாயா என்ற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லி, நரகத்திலிருந்து தப்பிக்கவும் முடிகிறது. ஆக சுயநலமுடன் பிறர் நலமும் பேணப்பட்டு சமுதாயத்தில் சமமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதாவது இப்படி ஒரே கல்லிலே ரெண்டு, இல்லையில்லை மூணு மாங்காய் அடிக்க முடியுது…

நமது பிராத்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படவேண்டும்.. அதற்கு நம்மை நாமே தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். நம் துவாக்களில் உடல் நலத்தை மட்டுமன்றி வறுமை, கடன், சோம்பல் இவை அனைத்தையும் விட்டும் பாதுகாப்பு கேட்க வேண்டும்.. அப்போதுதான் நம்மை படைத்தவனை வணங்கவும் ,பிறருக்கு உதவவும் இலகுவாக இருக்கும்.இதன் மூலம் சொர்க்கம் செல்ல பாக்கியம் கிடைத்தால்.. எமது சகோதர்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்றாட சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லவா? நாம் சிந்திப்போம் ,செயல்படுவோம் .

உண்மையில் இஸ்லாம் விதித்துள்ள பல கோட்பாடுகள் பற்றி சற்று அழுத்தமாக சிந்திக்கும் போது ,எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும். அல்லாஹ் அக்பர் ;அவன் மிகப் பெரியவன்.

இஸ்லாம் சொல்லி கொடுக்கும் சுயநலத்தில் பிறர் நலமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலமும் காண முடிகிறது இல்லையா? ஆகவே இஸ்லாம் கூறியபடி சுயநலனோடு சிந்தித்து பிறர் நலனையும், சமுதாய நலனையும் பேணுவோம்.


உங்கள் சகோதரி
Fathimah Muslimah Muslimah

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?

Posted: September 30, 2012 in muhasabanet

என்னடா இது? இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரும்பி போயிடாதீங்க. இந்த பதிவு, ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி! ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்…. என்னன்னா, பொலம்பினது தன் தம்பிக்கிட்ட! அவன் உடனே “அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ்! இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்”!! அப்படின்னான்! மவனே! வந்துச்சு பாருங்க கோவம்!

ஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! “உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே” என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்!

ஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறீங்க சொல்லுங்க? வீட்டுக்கு வந்தவுடன், “நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத”ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம்! குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?

வீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது.

ஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.

இவ்வாறு கடினப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது இந்த ஒரு பொறுப்பை பெரும்பாலானவர்கள் எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு பார்ப்போம்.

நம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லது இல்லையா?

பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா? வீட்டிலுள்ள ஆண்கள் நபிவழி பேணி தாடி வைக்கிறாங்களோ இல்லையோ, வேளா வேளைக்கு பள்ளி சென்று தொழுகிறார்களோ இல்லையோ பெண்கள் அபாயா போடக்கூடியவர்களாக இருக்காங்க. தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு ஒரே புடியா புடிப்பாங்க. என்ன காரணம்னு கேட்டா: “ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு ஒண்ணுன்னா ஊரு தப்பா பேசும்”னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.

ஸுப்ஹானல்லாஹ்! இதுவா அல்லாஹ் நமக்கிட்ட கட்டளை? இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா? நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம்? நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும்? இங்கே ஊர் தப்பா பேசும், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா?

ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே “ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு?”ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா? பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ்? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா?

“நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்” (அந்நூர், 24:30)

இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?
இஸ்லாத்தில கடன்படுவது என்பது அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று, அதிலிருந்து நமது நபி ஸல் அவர்கள் பாதுகாவல் தேடி அல்லாஹ்விடம் துவா செஞ்சாங்க. ஆனா இதை நம்மாளுங்க கிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்க?
‘சும்மாதானே கிடைக்குது’, ‘ஆத்திர அவசரத்துக்கு உதவும்’, ‘வட்டி போட முன்னாடி கட்டிடுவேன்’ இப்படி எத்தனையோ சப்பகட்டு கட்டுவாங்க. க்ரெடிட் கார்ட கொண்டு ஐ ஃபோனும், ஐ பேடும், ‘சும்மா கிடைக்கிற’ வங்கி கடனில் சொகுசு காரும் உங்களுக்கு தேவைதானா? க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, அது தெரிஞ்சிருந்தும் நம்ம சகோதரர்கள் அதில் சென்று விழுவது பெரிய வேதனை. கடன் என்பது நாம் மிகவும் முடியாத நேரத்தில் வாங்குவது, கடன் கொடுப்பதோ ஒரு தர்மச்செயல் போன்றது. நல்ல நிலையில் இருக்கும் நாம், பிறரிடம் தர்மம் வாங்குவதை விரும்பமாட்டோம், அப்படி இருக்கும்போது ஏன் இந்த க்ரெடிட் கார்ட் பின்னாடி ஓடனும்?

இது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள். கல்யாணத்துக்குன்னு வரன் தேடும்போது தான் தெரியுது, நம் சமூகத்தவர்கள் வட்டியை எவ்வளவு தவறாக புரிந்துக்கொள்கிறார்கள் என்று. “வட்டி என்பது கந்து வட்டியைத்தான் குறிக்கும், சாதரணமா வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டலைன்னா அவன் எப்படி வங்கியை நடத்துவான்? இப்பல்லாம் வட்டியில்லாம வியாபரம் செய்யவே முடியாது’ன்னு சொல்றவங்களை பார்ப்பது நம் சமூகத்தில் ஒன்றும் அரிதல்ல.

யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன் 2:275)

இதையெல்லாத்தையும் விட மிகவும் வேதனையான விஷயம் நம்முடைய வீடுகள்ல பெரும்பாலான ஆண்கள் தொழுவ பள்ளிக்கே போவதில்லை! தொழுவாதவங்களை தொழுங்க, தொழுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் பாங்கு சொல்லி முடிஞ்சதும் நைசா முசல்லாவை எடுத்துப்போட்டு வீட்டுலேயே தொழுது கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்குறாங்க.

சுப்ஹானல்லாஹ்! சகோதரர்களே, நீங்கள் செய்யும் தவறை இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள்! நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என! உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.

இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கிணங்க பெண்களாகிய நாம் திருமணத்துக்கு முன் நம் வலீயாகிய தகப்பனாருக்கு பணிந்து நடக்கிறோம். அதுபோல திருமணத்துக்கு பின் நம் கணவருக்கு பணிகிறோம். ஏனெனில் அவர்களை அல்லாஹ் நமக்கு பொறுப்பாளர்களாக்கியிருக்கிறான். இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உங்கள் சகோதரி
நாஸியா

முஸ்லிம்பெண்மனி- ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்..

Posted: September 23, 2012 in muhasabanetwork..

அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹிஜாப். முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர்.


இப்படி ஒரு புறம் இருக்க, பெரும்பாலும் ஒரு விஷயத்திற்காக சமுதாயத்தில் போராட்டங்களோ, எதிர்ப்புக்குரலோ கிளம்பும் போது எதிர்ப்புக்குள்ளான விஷயம் படிப்படியாக மறைந்தோ தடைசெய்யப்பட்டோ விடும். அதனால் தான் சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் போது தங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுகிறார்கள். இது இயல்பு.

ஆனால் இந்த இயல்புக்குநேர் எதிர் விளைவாக

எதிர்ப்புகள் அதிகம் வர வரத்தான் ஹிஜாப்பின் மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அனைவரிடத்திலும் பரவுகிறது. உதாரணத்திற்கு
ஹிஜாப்பிற்கு என்று அதிகமாக எதிர்குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் இஸ்லாமியர்களிடையே ஹிஜாப் வேகமாக பரவிவருகிறது. இஸ்லாம் வலியுறுத்திய கன்னிய உடை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. முன்பு அணியாதவர்கள் கூட ஹிஜாப் பேண ஆரம்பித்தனர். தலை மட்டும் மூடியிருந்தால் போதும் என்ற நிலை மாறி முழுமையான உடை அணிய ஆரம்பித்தனர். முன்பு ஊர்களில் கருப்பு ஹிஜாப் போட்ட பெண்களை பார்க்கவே முடியாது.

மாஷா அல்லாஹ்… இன்று நிலைமையே தலைகீழ். வெறும் தலையை மட்டும் மறைத்து வரும் பெண்களை காண்பது அரிதாகிவிட்டது . எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம் என்பது இது தானோ என்னவோ?

அந்த வரிசையில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி….

வரும் ஜூலையில் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் UAE பழுதூக்கும் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க சர்வதேச weightlifting கழகம் (IWF) அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு ஹிஜாப்பிற்கு weightlifting பிரிவில் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒலிம்பிக் சரித்திரத்தில் இது தான் முதல் முறை.


இதற்காக IWF விதிமுறைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவத….



1.முஸ்லீம் பெண்கள் தலையை மறைத்தவாறு பங்குபெறலாம். (முகத்தை அல்ல)
2.இதற்கு முன் காலர் இல்லாத முட்டிக்கை வரையில் தெரியும்படியான மேல் சட்டையும், கால் முட்டி தெரியும் படியான கீழ் ஆடையும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் முஸ்லீம் பெண்கள் இஸ்லாம் பரிந்துரைத்த முழுமையான உடையான ஹிஜாப் அணியலாம் என்று விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


சரி ஏன் இந்த திடீர் விதிமாற்றம் என்ற கேள்வி எழும் இல்லையா?


அமெரிக்காவை சேர்ந்த முஸ்லீம் பெண் ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதென்று தடுக்கப்பட்டார். அவர் அந்த தடையை எதிர்த்து போராடினார். அந்த தாக்கத்தின் தொடர்ச்சியாக ஹிஜாப் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்கோ தனியொரு நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை கூட எந்தளவுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கே நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கு பாத்தீங்களா? போன ஒலிம்பிக்கில் பல பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி பங்குபெற்றதும் பலரை திரும்பிபார்க்க வைத்திருக்கும்.


இந்த விதிமுறை கட்டாயமில்லை எனவும் விரும்பியவர்கள் பழைய விதிமுறைகள் படியே ஆடை அணியலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.


இந்த விதிமுறை மாற்றத்தின் காரணமாக இன்னும் நிறைய மக்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அருமையானதொரு வாய்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஒலிம்பிக்கின் போது ஹிஜாப் அணிந்து விளையாட ஏற்கனவே ரக்பி விளையாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு படிப்படியாக இனிவரும் காலங்களில் ஒலிம்பிக்கில் ஹிஜாப் முக்கிய இடம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


2008-ன் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் படகுபோட்டி, வில்வித்தை போட்டி மற்றும் இன்ன பிற போட்டிகளிலும் ஹிஜாப் அணிந்தபடியே பங்கெடுத்தார்கள். ஹிஜாப் அணிந்த விளையாட்டு வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தார்கள். இதன் மூலம் ஹிஜாப் அணிவது வெற்றியை துளி அளவும் தடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் கேள்வி என்னவென்றால்

1. IWF கழகம் ஆணாதிக்கம் நிறைந்தவர்களா இருப்பாங்களோ?


2. ஹிஜாப் என்னும் மூட நம்பிக்கையை ஆதரிப்பதால் ஒலிம்பிக் அமைப்பும் மூடநம்பிக்கைவாதிகளின் அமைப்பாக இருக்குமோ?


3. ஹிஜாப்பை அனுமதிக்கும் அவர்கள் கூட பிற்போக்குவாதிகளா இருப்பாங்களோ?


4. ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் என்றும், பெண்களை போகப்பொருளாகவும் முஸ்லீம்கள் சித்தரிக்கிறார்கள் என்றும் கூறுபவர்களே!, ஒலிம்பிக் அமைப்பும் அப்படி தான் நினைக்கிறதோ?


கூறுங்கள்….பதில் அறிய ஆவல்


எதார்த்தம் என்னவென்றால் ஹிஜாப் என்றும், எப்போதும் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான உடை!


சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயம் படிப்பினை உண்டு …
சொல்லின் அர்த்தம்: ஹிஜாப்- இஸ்லாம் அனுமதித்த கன்னியமான உடை. முகம், உள்ளங்கை, கால் தவிர அனைத்து உறுப்புக்களையும் மறைக்கும் படியான தளர்வான உடை.
நன்றி : Onislam

முஸ்லிம் பெண்மணி- பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!

Posted: September 16, 2012 in Uncategorized

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க.
ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்.
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல் வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!

அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,

முஸ்லீமல்லாத பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்-ம் சரி போ!

முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க

ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்… பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க… எப்பதான் திருந்த போறாங்களோ………

இதுதான் இன்றைய நிலை!!!

இஸ்லாமிய பெண் என்றாலே அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு… ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!!

எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க…. அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:
ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும் இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது! 2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது. அதுக்கு முன்னாடிலாம் “சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம் எம்மவனுக்குத்தேன்”ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது. எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை! இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)
திருமண சம்மதம் :
மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான் முதல் முக்கியமான விஷயம்.

விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) – ஆதார நூல்: புகாரி)

பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை நசுக்கும் மதமாகவோ இருந்தா இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம் “எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை”ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் “இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்!

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்… எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு!
மறுமண உரிமை :
விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க… சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி, மூலையில் உக்கார வைத்தபோது மதம் தான் “நீ நீயாகவே இரு”ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது!
பெண்கல்வி :
அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்! அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே…

கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)

பெண்களை கொடுமைபடுத்துகிறதா?
பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்…

இதோ சில உதாரணங்கள் :

உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (திர்மிதி)

அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)

எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க.

உங்கள் சகோதரி
-ஆமினா முஹம்மத்-

Leave a comment