காத்தான்குடி நகர சபையின் 8 வது அமர்வு தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கை..

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி நகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் மாதாந்த அமர்வு தொடர்பில் 8வது அமர்வு கடந்த 30.08.18 வியாழக்கிழமை அன்று நகரசபை தவிசாளரின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில் இடம் பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இவ்வமர்வில் நகரசபை உறுப்பினர்களுடன் ,நகரசபை செயலாளரும் கலந்து கொண்டிருந்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அஷ்ஷெய்க்MBM.பிர்தௌஸ் நளீமி,சகோதரர் இல்மி அஹமட் லெப்பை,சகோதரி ரிபாயா அன்வர்,சகோதரி றகீபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கூட்டத்தொடரினை ஆரம்பித்து உரையாற்றிய தவிசாளர், காத்தான்குடி பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் அதற்காக முன்னெடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது கருத்துக்களை தெரிவித்தார். பள்ளிவாயில் பயான்கள், பாடசாலை காலைக்கூட்டங்கள் போன்றவற்றில் இது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை போதிய பலனை அளிக்கவில்லை. இது தொடர்பில் பெற்றோர்களுக்கான தொடர்விழிப்புணர்வுகளை துறைசார் நீதிபதி ஒருவரின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் இப்போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பொலீசாரின் போதுமான ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் சந்தேக நபர்களை இனங்காட்டுகின்ற போதிலும் பொலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் அசிரத்தையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் இச்சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் மருந்தகங்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இம்முயற்சிகளுக்கு சகல நகரசபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக காத்தான்குடி பிரதான வீதியில் பாதசாரி நடைபாதையில் பொருட்களை வைத்து விற்பனை செய்த வியாபாரிகளின் பொருட்கள் நகர சபையினால் அகற்றப்பட்டது தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார். இதுகுறித்த எந்த அறிவித்தல்களுமின்றி பொருட்களை அகற்றுவதற்கான அதிகாரம் நகர சபைக்கு இருந்த போதிலும் தான் சுமார் ஆறு வழிகளில் வியாபாரிகளுக்கு முன்னறிவித்தல் செய்ததன் பின்னரே பொருட்களை அகற்றியதாகவும் தெரிவித்தார். இவ்வாறே வீதி ஒழுங்குகளுக்கு புறம்பான முறையில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களையும் வீதிகளிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அடுத்து ஜுலை மாத நகரசபை மக்கள் பிரதிநிதிகளுக்கான ; 7வது அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன், கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு என்பவற்றின் உறுப்பினர்களான MBM.பிர்தௌஸ் நளீமி, இல்மி அஹமட்லெப்பை மற்றும் சிப்லி பாறூக் போன்றவர்களினால் பல சந்தேகங்கள் வினவப்பட்டன. குறிப்பாக சிறுவர்பூங்கா, மற்றும் சபைக்கான இன்டர்நெட் பாவனைக்கட்டணம், வாகன தரிப்பிடக்கட்டண வரவு தொடர்பில் சகோதரர் இல்மி அஹமட்லெப்பை கேள்விகளை எழுப்பினார்.சில விடயங்களுக்கான ஆவணங்கள் எடுத்துவரப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. எனினும் இது சபை அமர்வின் நேரத்தினை வீணடிப்பதாகவும் இதற்காகவே கணக்கறிக்கையினை ஒரு வார காலத்திற்கு முன்பாக உறுப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவ்வாறு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய விடயங்கள் இருப்பின் சபை அமர்விக்கு முன்னர் நகரசபைக்கு உறுப்பினர்கள் வருகை தந்து அவற்றினை கணக்காய்வுப் பிரிவில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தவிசாளர் கேட்டுக்கொண்டார். எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் MBM.பிர்தௌஸ் நளீமி அதனை ஆட்சேபித்து சபை அமர்வுகளில் கணக்காய்விற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார். எனினும் தவிசாளரினால் அவ்வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட போதும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தவிசாளரின் கருத்திற்கு உடன்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் பிரதிநிதிகளாக சபைக்கு வந்துள்ள நாம் நேரத்தைக்காரணம் காட்டி இவற்றை பரிசீலிக்காமல் அங்கீகரிக்க முடியாது என பிர்தௌஸ் நளீமி மீண்டும் சுட்டிக்காட்டியதையடுத்து நகரசபை கணக்குவிபரங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்றினை நகரசபை கணக்காளர் பிரிவினர்களுடன் ஏற்பாடு செய்து தருவதாக தவிசாளரினால் உறுதி வழங்கப்பட்டது.

அடுத்தாக கடந்தவாரம் யாழ்ப்பாணம், மொரட்டுவை, கொழும்பு பகுதியிலுள்ள பொது நூலகங்களைப் பார்வையிடுவதற்கான
23 பேர் அடங்கிய குழுசென்றதற்கான கொடுப்பனவாக ரூபா ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து ஆறினை சபை நிதியிலிருந்து வழங்குவதற்கான அனுமதியை அளிக்குமாறு கோரப்பட்டது.இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் MBM.பிர்தௌஸ் நளிமி அவர்களினால் இவ்வாறான கள விஜயங்களின்போது துறை சார்ந்தவர்களையும் மக்கள் பிரதிநிதிகளில் பொருத்தமானவர்களையும் கட்சி பாகுபாடுகளுக்கு அப்பால் உள்வாங்குமாறு வேண்டிக்கொண்டார்.

அதன் பின்னர் சபை அமர்வு குழுக்கலந்துரையாடலுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் காத்தான்குடிப் பிரதேசத்தினை நகரசபை அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின்கீழ் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தல் தொடர்பில் மட்டக்களப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் AM.. நாசர்அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் குழுக்கலந்துரையாடல் இடம்பெற்றது. குழுக்கலந்துரையாடல் இடம்பெற்ற போது இவ்விடயத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் உறுப்பினர்களினால் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் MBM. பிர்தௌஸ் நளீமி இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களுடன்ஒரு கலந்துரையாடலுக்கான நேரத்தினைப் பெற்று இது தொடர்பிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அடுத்த சபை அமர்வில் தீர்மானத்திற்கு வருவது சிறந்தது எனும் ஆலோசனையை முன்வைத்தார்.இந்த ஆலோசனை தவிசாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இன்னும் ஒரு மாத கால இடைவெளியில் காத்தான்குடி நகர சபை மாநகர சபையாக தரமுயர்த்தப்படவுள்ளதாகவும் அப்பொழுது இயல்பாகவே நகர திட்டமிடல் அதிகார சபையின் கீழ் எமது நகரம் வந்துவிடும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

அடுத்து காத்தான்குடி எல்லை நிர்ணயம் சம்பந்தமான சில விடயங்கள் நகர சபை உறுப்பினர் மாஹிர் ஹாஜியாரினால் முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பான முன்னெடுப்பு ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருவதாகவும் அது தொடர்பில் அவசர கவனம் செலுத்தும்படியும் சில உறுப்பினர்களால் கோரப்பட்டது. அது தொடர்பில் சாதகமான சில விடயங்கள் நடந்திருப்பதாகவும் தொடர்ந்தும் தான் அதில் கவனம் செலுத்துவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு, அனர்த்த நிலமைகளைக் கவனத்தில் கொண்டு 600 லீற்றர் மேலதிக டீசலினை நகர சபையில் சேமித்து வைப்பதற்கான அனுமதி கோரப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் இல்மி அஹமட் லெப்பை அவர்களினால் 600 லீற்றர் டீசல் சேமிப்பின் அவசியப்பாடு தொடர்பில் வினவப்பட்டது. எனினும் அதற்கான அவசியப்பாட்டினை தவிசாளர் தெளிவு படுத்திய பின்னர் அதற்கான அனுமதி சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது..அத்துடன் நகரசபை வாகனங்களின் வாடகை பணமும் குறித்த தொகையினால் அதிகரிக்கப்பட்டது.

இறுதியாக சபைக்கு அனுப்பப்பட்டிருந்த சில கடிதங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது..தேசிய வாசிப்பு மாதம்,நூலக அபிவிருத்தி,ஆசியா பௌன்டேசன் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள கடற்கரை அபிவிருத்தி, தற்பொழுது நடைபெற்று வருகின்ற வடிகான் சுத்தமிடப்பட்டு மூடியிடப்படுகின்ற திட்டம், வறுமைக்கோட்டின் கீழ் வாடுகின்ற மக்களின் மையித்துகளை ஏற்றிச்செல்வதற்கான வாகன வசதி ஒன்றினை நகர சபையால் நியமித்தல்,
ஆற்றங்கரை அபிவிருத்தி,கலாச்சார மண்டபம்,பழைய மடுவம், சிறுவர்பூங்கா ஆகியவற்றிற்கான வெளிப்படுத்தல் உறுதியினை உறுதிப்படுத்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு சபை 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

ஊடகவியலாளர் மீதான கொலை அச்சுறுத்தலை கண்டித்தது காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்..

(எம்.பஹ்த் ஜுனைட்)

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெறிவிக்கும் வகையிலும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், போதைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோசம் எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள், காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை தெறிவித்தமை குறிப்பிடத்தக்கது..

ஊடகவியலாளர் சஜி மீதான கொலை அச்சுறுத்தலை கண்டித்து காத்தான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் .

பிராந்திய ஊடகவியலாளர் சஜி மீதான கொலை அச்சுறுத்தலை கண்டித்தும் கொலை அச்சுறுத்தலை செய்த நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி மீடியா போரம் திங்கட்கிழமை (27.08.2018) பிற்பகள் 4மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை செய்யவுள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காத்தான்குடியிலுள்ள ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதி நிதிகள் முக்கியஸ்தர்களை கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி மீடியா போரம் அன்புடன் அழைக்கின்றது.

மீடியா போரம்
காத்தான்குடி
26.08.2018

பெண்களுக்கான கருத்துரை நிகழ்வு..

ஜீலான் மத்திய கல்லூரியின் வகுப்பறை முன் சைட் பிலேட் இடிந்து விழுந்தது..

-Moulavi Kattankudy Fouz-

நேற்றிவு 10 மணிக்குட்பட்ட நேரத்தில் பாணந்துறை திக்கல வீதியில் அமைந்துள்ள ஜீலான் மத்திய கல்லூரியின் வகுப்பறையின் முன் சைட் பிலேட் பாரிய சப்தத்துடன் இடிந்து விழந்தது.
இது பழைமை வாய்ந்த பில்டிங் இரவு நேர மாகையால் எந்த உயிர் சேதமுமில்லை.

ஊடகத்துறை பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்..

image

-பாறூக் ஷிஹான்-

காட்டுக்குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அல்ல ஊடக சுதந்திரம் என்பது, எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார்.

Continue reading

இன்று சர்வதேச தாதியர் தினம்!

image

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. Continue reading

பெண்களின் பாலியல் பிரச்சினைகளுக்கு கவர்ச்சிகர ஆடையே முக்கிய காரணம் -பிரேசில் ஆய்வில் கண்டறிவு..

image

பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்களின் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு அவர்களின் உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டப்பட்டுள்ளது.

Continue reading

இஸ்லாம் விடுக்கும், மே தினச் செய்தி…

image

-அன்வர் (ஸலபி)-

உலகளவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகள், சம்பள உயர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், அவலங்கள் என்பவற்றை முதலாளி வர்க்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைகிறது. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் அன்றைய தினம் கடந்தவுடன் தொழிலாளிகளின் எந்த கோரிக்கைகளையும் முதலாளி வர்க்கம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனவேதான் இச்சந்தர்ப்பத்தில் உலக வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளிகளின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியமாகும். Continue reading

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது காலமானார்.

image

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத்  கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

Continue reading