ஊடகத்துறை பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்..

image

-பாறூக் ஷிஹான்-

காட்டுக்குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அல்ல ஊடக சுதந்திரம் என்பது, எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை உள்ளது. அதனால் அது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். பொறுப்பற்ற விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட கூடாது.

நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிப்பது, பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது, பரபரப்புக்காக தலைப்புக்களை போட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

நான் கூறாத விடயங்கள் கூட மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும்.ஊடகங்கள் அதன் பொறுப்பு உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். என தெரிவித்தார்.

Advertisements
%d bloggers like this: