தீனுல் இஸ்லாம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்) சகோதர்களே!

நண்பர்களே! இஸ்லாம் பற்றிய விடயங்கயை பிற சகோதரனுக்குச் சொல்வதும் கடைமையான விடயமே..மற்றவர்களுக்குச் எடுத்துச் சொல்வதன் முலம் நன்மையை ஏவி தீமையை தடுக்க முடியும்.இதன் முலம் மறுமையில் இறைவனிடம் நற்கூலியையும் பெற்றுக்கொள்ளலாம்.ஆகவே உங்களிடம் உள்ள.நீங்கள் அறிந்த விடயங்களை எமது தீனுல் இஸ்லாம் பகுதிக்கு அனுப்பவேன்டியமுகவரி- muhasabanet@gmail.com ஜஸாகல்லாஹீகைரன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

Posted: June 23, 2013

126328_455886304482682_552681991_n) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்…

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

தீனுல்இஸ்லாம்ஆண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.

ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.புகை பழக்கம்..

புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.

* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.

* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.

* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.

* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.

* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.

* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.

* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.

* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.

* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.

* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.

இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]

மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.

பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா?

சிந்திக்க வேண்டும்.புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.

jasakallah-Balaluwewa Thawheedh Jamath

தீனுல்இஸ்லாம்- ஜும்ஆவின் சிறப்பு…

Posted: December 21, 2012

தீனுல்இஸ்லாம்ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)

மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள்.

”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள். அதற்கு, ”நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கிறார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)” என்று பதில் சொன்னேன்.
குறைக்கப்பட்டு ”உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்”. (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ)

எனவே எந்தப்பள்ளி வாயிலுக்குள் நுழைந்தாலும் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்காருவது கூடாது.

வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்..

தீனுல்.இஸ்லாம்..- சொர்க்கப் பாதைகள்.

Posted: December 20, 2012

தீனுல்இஸ்லாம்அழிந்துவிடும் அற்ப உலகம், இந்திரியத் துளியால் உருவான உடல், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இரவல் உயிர், நிரந்தரமற்ற வாழ்நாள், இவைகளுடன் மனிதன் தன் வாழ்க்கை படகை மரணத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றான்.

பிறப்புதான் வாழ்வின் ஆரம்பம் இறப்புதான் அதன் முடிவு என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களான நாம், மரணம் என்பது மறுமை வாழ்வின் வாயில். அதில் நுழைந்த பிறகுதான் அழியாத பெருவாழ்வு உள்ளது என்று மறுமை வாழ்வை மிக உறுதியாக நம்பியுள்ளோம். ஆனால் அவ்வாழ்வில் வெற்றிபெற நாம் சேமித்து வைத்தது என்ன?

சொர்க்கம் செல்பவர்களும் நரகம் செல்பவர்களும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள், அப்படியானால் சொர்க்கப் பாதையும் நரகப் பாதையும் நிச்சயமாக ஒரே பாதையாக இருக்க முடியாது. எனவே நிரந்தர இன்பமான சொர்க்கத்தை அடைய விரும்பும் நாம் அதற்குரிய பாதையில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளவேண்டும். எனவே நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.

1- ஏகத்துவமும் தூதுத்துவமும் :

அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)

2- அல்குர்ஆன்:

அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)

குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அஹ்மத்)

3- அஸ்மாவுல் ஹுஸ்னா:

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99 அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

4- திக்ருகள்:

ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : திர்மிதீ)

உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பி வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம்)

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)

5- பிரார்த்தனை:

சொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ)

6- கல்வி:

யாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

7- வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்:

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ்-ரலி, நூல் : திர்மிதீ)

8- பள்ளிவாயில் கட்டுதல்:

காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னுமாஜா)

9- அறப்போர்:

சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : இப்னு அபீ அவ்ஃபா -ரலி, நூல் : புகாரீ)

10- தர்மம்:

அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத்)

11- இரக்க சிந்தனை:

ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)

12- அநாதைகளுக்கு ஆதரவு:

தன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)

13- பெண் பிள்ளைகள்:

இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ)

14- இறையச்சமும் நற்குணமும்:

எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ)

15- கோபம் கொள்ளாமை:

தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அபூதாவூத்)

16- பெற்றோரைப் பேணல்:

முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

17- மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்:

யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார் களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)

18– குழந்தைகளை இழந்தவர்கள்:

மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)

19- சோதனையில் பொறுமை:

ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா)

20- பெருமையும் கடனும் வேண்டாம்:

பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூல் : திர்மிதீ)

21- ஈமானுடன் மரணம்:

யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)

கிறிஸ்மஸ்ஸும் புதின அல் குர்-ஆனும் (Merry Chirstmas and Holy Qur-an)

Posted: December 18, 2012

கிறிஸ்மஸ்நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வியாபாரம் களைகட்டிவிடும். டிசம்பர் 25 நெருங்க நெருங்க மக்கள் நேரம் இல்லாமல் ஒரே சுறுசுறுப்பாக ஓடித்திரிவார்கள். அடிக்கடி காதில் விழும் செய்தி பரிசு பொருட்கள் (presents) வாங்கியாகிவிட்டதோ, என்ன பரிசு , அவை பக்குவமாக சுற்றப்பட்டு 24ம் திகதி வரை ஒழித்து வைக்கப் பட்டுள்ளதோ; இவை போன்றவைகளே. ஏனெனில் இன்று உலகில் கொண்டாடப்படும் சமய பெருநாட்களில் மிக அதிகமாக பரிசு பொருட்கள் கைமாறலுடன் கொண்டாடப்படும் பெருநாள் இந்த கிறிஸ்மஸ்தான் என்றால் அது மிகையாகாது. கிறிஸ்தவர் அல்லாதவர் கூட இத்தினத்தை கொண்டாடுவதால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இச் சந்தர்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தினதும் அதனோடு தொடர்புடைய சில நடைமுறைகளையும் பற்றிய ஒரு சிறிய அலசல் வாசகர்களுக்கு பல புதிய விடயங்களை கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.

கிறிஸ்தவத்தின் புனித நூலாக கருதப்படுவது விவிலியம் அல்லது பைபிள் (Bible)என்பது யாவரும் அறிந்ததே. இதில் ஏசு நாதரின் ( நபி ஈஸா-Jesus)அதிசயப் பிறப்பும், சிலுவை மரணமும்(Crucificton)(?) முக்கிய இடம் பெறுவது மாத்திரம் அல்லாமல் முழு மனித இனத்தின் விடிவுக்காகவே ஏசு உயிர் நீர்த்தார், அப்படி உயிர் நீர்ப்பதற்கே அவர் அதிசயமாக பிறந்தார் என்பது பைபிளின் அடிப்படைகளாக அமைந்துள்ளன.

Christmas_Decorationஆகவே கிறிஸ்தவத்தின் இந்த இரண்டு அதி முக்கிய நிகழ்வுகளில் ஏசுவின் பிறப்பு கிறிஸ்மஸ் பண்டிகையாகவும், மரணத்தின் பின்னான மீள் எழுகை நடைபெற்ற நாளாக “உயிர்த்த ஞாயிறு”(Easter Sunday)ஆகவும் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஏசு நாதர் மார்கழி(December) 25ல் பிறந்தார் என்றும் எனவே கிறிஸ்மஸ் என்பது மார்கழி 25 என்ற திகதியை முக்கியப் படுத்தியும், உயிர்த்த ஞாயிறு “ஞாயிறு” என்ற நாளை முக்கியப்படுத்தியும் கொண்டாடப்படுகின்றது.

ஆப்பிரஹாமின்(நபி இப்ராஹிம்) ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் ஈடேற்றத்துக்காக இறைவனால் அளிக்கப்பட்ட யூத வேதம்(Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்ற சமயங்களும், உலகின் அடுத்த பெரிய சமயங்களான இந்து சமயம்(சைவம், வைணவம்), பெளத்தம் ஆகியன தத்தமது சமய நடவடிக்கைகள், கொண்டாட்டங்களுக்கான நாள் கணிப்பீட்டை சந்திர அசைவினை (lunar motion) அடியொட்டியே கணித்தனர் என அறியப்படுகின்றது.

இந்த அடிப்படையில் இரண்டு முதல்(தலை) பிறை (1st moon அல்லது crescent) களுக்கிடையே வரும் 29.53079 நாட்களை ஒரு சந்திர மாதமாகக் கணித்தனர். எனவே ஒரு சந்திர வருடம் (lunar year) 354.36706 நாட்களைக் கொண்டுதாக காணப்படுகின்றது. இதே நேரத்தில் பூமி தன்னை தானே சுற்ற 24 மணித்தியாலங்கள், 3 நிமிடம், 56.55 வினாடிகள் என அறிகின்றோம். இந்த அடிப்படையில் பூமி சூரியனை சுற்றிவர 365.242199 நாட்கள் எடுப்பதையும் நம்மில் மறுப்பதற்கு யாரும் இல்லை, இதை சூரிய வருடம் (solar year) என்கின்றோம். இந்த சந்திரன் பூமியுடன் சேர்ந்து சூரியனை சுற்றுவதால் பூமியை விட குறைவான காலத்துக்குள் சூரியனை சுற்றி முடிக்கின்றது. அதாவது ஏற்கனவே கூறியது போல் சந்திரனுக்கு தேவைப்படுவது 354.36706 நாட்களே. ஆகவே சூரிய வருடத்துக்கும், சந்திர வருடத்துக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 11 நாட்கள்.

1இப்போது நமது கரிசனை சந்திர வருட கணக்கை சூரிய வருட கணக்கோடு ஒப்பிடும் போது ஏற்படும் பிரச்சனைகளே. அதாவது இந்த 11 நாள் வித்தியாசம் என்பதே. நாம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு போகமுன் சந்திர வருட கணக்குப் படி கொண்டாடப்படும் இஸ்லாமிய பெருநாட்களை சற்று நோக்குவது பொருத்தமாகும். உதாரணமாக 2010க்கான முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் செப்டம்பர் 10ல் கொண்டாடப்பட , அது 2009ல் செப்டம்பர் 21ம் திகதி கொண்டாடப்பட்டது. அதேபோல் 2011ல் ஓகஸ்ட் 30லும், 2012ல் அது ஓகஸ்ட் 19லும் கொண்டாப்படும். அதாவது இன்றைய சூரிய வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் 11நாட்கள் முன்னே சென்று கொண்டிருக்கும்.

ஆனால் சந்திர வருட கணிப்பை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய கிறிஸ்தவத்தின் இரண்டு பெருநாட்களில் கிறிஸ்மஸ் மார்கழி 25ல் நிலையாகவும், உயிர்த்த ஞாயிறு திகதி அடிப்படையில் அசைவையும், நாள் அடிப்படையில் “ஞாயிறு” என்று நிலையாகவும் அமைந்துள்ளதை அவதானிக்கலாம். கூடவே இஸ்லாமியரின் பெருநாள் போன்று சூரிய வருடங்களின் அனைத்து மாதங்களிலும் ஆகக் குறைந்தது இரண்டு முறைகளாவது வந்து போவது போலன்றி இந்த உயிர்த்த ஞாயிறு பண்டிகை பங்குனி(March) இறுதியில் இருந்து வைகாசி(May) முதல் கிழமைக்குள் மாறி மாறி அசைவதையும் காணலாம். உதாரணமாக 2010ன் உயிர்த்த ஞாயிறு சித்திரை(April)4லும், 2009 ல் அது சித்திரை 19ம் திகதிலும், 2011ல் இது சித்திரை 24லும், 2012ல் இது சித்திரை 15ம் திகதியிலும் வரும். இப்படியே 2005ல் இது பங்குனி 25ல் கொண்டாடப்பட்டது. இதில் இந்த 11 நாள் வித்தியாசம் காணப்படாமலும், அதே நேரம் இந்த “ஞாயிறு” என்ற நாளை நோக்கிய முன்னும் பின்னுமான அசைவாகவே, அதாவது பங்குனி- வைகாசி காலப் பகுதியில் நடந்தேறும் ஒரு நிகழ்வாகவே இருகின்றது. ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகை மாத்திரம் அது ஆரம்பிக்கப் பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25ல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. எமது தலைப்பு கிறிஸ்மஸ் என்பதால் இந்த உயிர்த்த ஞாயிறு பற்றிய அல்சல் இத்துடன் நிறுத்தப்படுகிறது.

bibleபைபிளில் ஏசு நாதரின் அதிசய பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும் இன்று வரை ஏசு நாதர் எப்போது பிறந்தார் என்பதற்கு சந்தேகத்துக் கிடமின்றி நிரூபிக்கும் எந்த அத்தாட்சியும்( ஜெஹோவாவின் சாட்சிகளின் படி ஏசு சித்திரை- April- 14ல் பிறந்திருப்பதற்கான சாத்தியம் உண்டாம்) யாரிடமும் இல்லை. ஆனாலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஏசு நாதர் அதிசயமாக பிறந்தார் என்பதில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு மிடையே எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் இருப்பதே,( ஏசு என்பர் அதிசயமாக பிறப்பிக்கப்பட்டார், அவர் கடவுளின் ஒரு தூதர் என்ற விடயத்தை ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்பதும், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்பட்டார் என்பதை நம்புவது அவரை முஸ்லிம் என்ற நிலையில் இருந்து மாற்றிவிடும் என்பதும் இஸ்லாமிய கொள்கை).அத்தோடு ஏசு நாதர் இந்த உலகத்தில் வாழ்ந்த சுமார் 29/30 வருட காலத்தில் ஒரு முறையாவது அவரின் பிறந்த நாள் அனுஸ்டிக்கப்பட்டதாகவோ, அல்லது தனது பிறந்த நாளை கொண்டாடும் படி தன் சீடர்களை அவர் வேண்டிக் கொண்டதாகவோ எங்கும் அத்தாட்சிகள் இல்லை. அத்துடன் அவர் பிறந்த யூத இனத்தில் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கமும் இருந்ததாக வரலாறு இல்லை. ஆகவே இயல்பாக நம்மில் எழும் கேள்வி கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பைபிளால் அனுமதிக்கப்படாத, ஏசு நாதரினால் அங்கிகரிக்கப் படாத ஒன்றா? அப்படியானால் அதை யார்? ஏன்? எப்போது? அறிமுகப் படுத்தினர் என்பதே. இதற்கு விடை காண முன் மீண்டும் சந்திர, சூரிய வருட கணிப்பீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.

இன்று நமது பாவனையிலுள்ள சூரிய அடிப்படையிலான காலக் கணிப்பை க்ரெகொரியன் நாட்காட்டி(Gregorian calender) என்போம். இந்த காலக் கணிப்பீட்டின் அடிப்படை ரோம ராஜ்யத்தின் அரசர் ர்டார்குயினிஸ் ரீகஸ் 5 (Traquinius Pricus V)இன் மூலத்தைக் கொண்டது. இது கி.மு. 616 – 579 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாவிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. க்ரெகொரியன் நாட்காட்டி பல அசெளகரியங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் கொண்டு காணப்பட்டதால் கி.மு. 46 அளவில் ஜூலிய சீஸர்(Julius Caesar) நாட் கணிப்பில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் படி இவரின் வானவியலாளர்கள்(astronomers) சூரிய ஆண்டு கணிப்பில் 365 1/4 நாட்களை நிலையாகக் கொள்ளும்படியும், சந்திர ஆண்டு கணிப்பை அடியோடு கைவிடும் படியும் பரிந்துரைத்தார். அத்துடன் இதுவரை நடந்த காலக் கணிப்பீட்டு தவறுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கி.மு 46 ஆண்டில் மேலதிகமாக 90 நாட்களை சேர்த்து கி.மு. 45து பங்குனி(March) நடுபகுதியில் அதை தை 1(January 1), அதாவது 01.01.45 என்று அறிவித்துவிட்டார். ஆகவே இது கி.மு. 45.01.01 என்ற 2கணிப்பை பெற்றது. அத்துடன் ஒவ்வொரு 4ன்கு வருடத்திலும் மாசி(February)யில் ஒரு நாளைக் கூட்டி கணிக்கும் படியும் பணித்தார். இதுவே ஜூலியன் நாட்காட்டியின் ஆரம்பம். இது ஆரம்பித்து சுமார் 1590 வருடங்கள் வரை, அதாவது கி.பி 1545ம் ஆண்டுவரை பாவணையில் இருந்துள்ளது. ஆனாலும் இந்த ஜூலியன் முறையில் பின்பற்றப்படும் 365 1/4 நாட்களுக்கும் பழைய கணிப்பின் 365.242199 நாட் கணக்கிற்கும் இடையே ஏற்பட்ட காலக் கணிப்பு குழறுபடி ஒரு வருடத்தில் 11 நிமிடம் 14 வினாடிகள் வித்தியாசத்தை காட்டிக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்த சிறிய வித்தியாசம் சரியாக முழு 10 நாட்களாக மாறும் வரை அந்த காலக் கணிப்பை மாற்றமின்றி கைக் கொண்டனர். இதை நிவர்த்தி செய்ய பாப்பரசர் க்ரெகொரி 111 (Pope Gregory 111) ஒரு சமய ஆணை(edict)ஐ பிறப்பித்தார். இதன்படி ஓக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் கழிக்கப்பட்டு மீண்டும் சூரிய ஆண்டின் நாட்கள் 365.2422க கொள்ளப்பட்டது. இப்போது ஜூலியன் கணக்கிற்கும் க்ரெகொரி கணக்கிற்கும் இடையே 0.0078 நாட்களை வருடமொன்றின் வித்தியாசமாகக் காட்டியது. இது ஒவ்வொரு 400 வருடத்திலும் 3.12 நாட்கள் வித்தியாசத்தைக்காட்டியது. இருப்பினும் இந்த 4ன்கு நூற்றாண்டுகளில் வரும் மூன்று நூற்றாண்டுகளை லீப்(leap year)வருடமாக கணிக்காது, அதாவது குறிப்பிட்ட ஆண்டுகளில் வரும் மாசி மாத்தில் 29 நாட்கள் கணிக்கப்படாமல் அவற்றில் 28 நாட்கள் என்று வரையறுத்து அவற்றை பொது நூற்றாண்டுகளாகக் கருதினர். மாறாக 400ல் சரியாக பிரிபடும் நூற்றாண்டை மாத்திரம் லீப் நூற்றாண்டாக வரையறுத்து அந்த ஆண்டில் வரும் மாசி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டது. இதன் படி 1700,1800,1900 என்ற நூற்றாண்டுகள் லீப் வருடமாக இருந்தும் அவை அப்படி கணிக்கப்படாமல் 2000 ஆண்டு லீப் நூற்றாண்டாகக் கொள்ளப்பட்டது. அதே போல் 2100,2200,2300 ஆண்டுகள் லீப் வருடமாக கருத்தபடமாட்டாது. எனினும் 2400 லீப் ஆண்டாக காணப்படும். இருப்பினும் இந்த முறைக்கும் முன்னைய கால கணிப்பீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் வருடத்துக்கு 1/2 நிமிடத்துக்கும் குறைவாக இருப்பதால் தை 1ஐ வருடத்தின் ஆரம்ப நாளாக வரையறுத்தனர். ஆனாலும் இந்த கணிப்பீடும் உடனடியாக எல்லா உலக நாடுகளாளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரோமன் கத்தோலிக்க அரசுகள் 1587லும், பிரித்தானியாவும் அதன் காலனித்துவ நாடுகளும் 1750களிலும் ஏனைய கிறிஸ்தவ நாடுகள்(ரோமன் கத்தோலிக்கர் அல்லாதோர்) 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஜப்பான், சீனா, முன்னை நாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகள் மிகப் பிந்திய காலப்பகுதியிலுமே இதை ஏற்றுக் கொண்டன.

இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்த காலக்கணிப்பீட்டில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள், கூட்டல் கழித்தல்கள் எதையுமே பொறுட்படுத்தாமல் மார்கழி 25ல் கிறிஸ்மஸ் கொண்டாடுவதும், இது மறுக்க முடியாத நாளாக உலக வரலாற்றில் நிலைத்துவிட்டதுமான விடயுமுமே.

இற்றைக்கு சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ காலக் கணிப்பீட்டாளர்கள்(chronographers) உலகம் உருவாக்கப்பட்ட அல்லது ஆரம்பமான நாளை இரவு-பகல் சம அளவிலுள்ள (equinox) வசந்த காலத்தின் (spring) பங்குனி(March) 25ம் திகதி என்று கணித்தனர். பிற்பாடு ஒரு பங்குனி 25 லேயே வானவர் தலைவர் கப்ரியெல்(ஜிப்ரீல்- Gabriael) ஏசுவின் தாயார் மரியா(மர்யம்-Mary)ளுக்கு அதிசயமாக கிடைக்கப் போகும் குழந்தை பற்றிய சுப செய்தி சொன்ன திகதியாகவும்(day of Annunciation) கொள்ளப்படுகிறது. மேலும் ஏசுவின் சிலுவை மரணம் சம்பவித்ததும் ஒரு பங்குனி 25கவே கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த மூன்று சம்பவங்களின் இணைப்புக் கிடையில், அதாவது சுப செய்தி தினத்தில் இருந்து சரியாக 9 மாதங்கள் முடிய மார்கழி 25ல் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படுகின்றது. அதாவது உலகம் உண்டாக்கப்பட்டது பங்குனி 25, கன்னி மரியாள் கருத்தரித்தது பங்குனி 25, ஏசு பிற்பாடு சிலுவையில் அறையப்பட்டது பங்குனி 25. ஆகவே ஏசுவின் பிறப்பை வேறு நாளில் நிகழ்ந்தாகக் கொள்வதில் அர்த்தமில்லை ஏனெனில் மக்களின் பாவங்களை சுமக்க வந்தவர், அதற்காகவே சிலுவையில் ஏற்றப்பட்டவர், அப்படி ஏற்றப்படுவதற்காகவே பிறப்பிக்கப் பட்டவர் என்ற ஒரு காரண காரிய, நேர் கோட்டு சித்தாந்தத்தில், ஏசுவின் பிறப்பும் 25 என்ற நாளில் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இந்த மார்கழி 25 என்பது குளிர்கால இரவு நேரம் கூடிய, அதாவது மார்கழி 25 முதல் தை 6 வரையிலான அதி கூடிய இரவு நேரத்தின்(winter solstice) முதல் நாளாகும்.

3இந்த அடிப்படையிலேயே உலகத்தின் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (ஏசு நாதரின் மறைவின் பின்) கி.பி 336ம் ஆண்டு ரோமில் கொண்டாடப்பட்டது. ஆகவே ஏசு நாதர் பிறந்து 335 வருடங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவில்லை என்பது இங்கு தெளிவாகின்றது. எனவே தான் ஏசுவின் மறைவிற்கும் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கும் இடையில் எழுதப்பட்டதாக கருதப்படும் அனைத்து சுபிசேஷத்திலும் , இன்றைய பைபிளையும் உள்ளடக்கி , ஏசு நாதரின் பிறந்த நாள் இடம் பெறவில்லை. மேலும் இந்த மார்கழி 25 என்பது அன்றைய ரோம இராஜ்யத்தின் இயற்கையை வழிபடும் (நம்பும்) (pagans) மக்களால் “சனி” கிரகத்துக்காக கொண்டாடப்படும் “சட்ரனெலிய”( Saturanalia) என்ற பெருநாளை அடியொட்டியதாகக் கொள்ளப்படுகின்றது. அன்றைய ரோம அரசன் கொன்ஸ்டண்டைன்(Constantine) ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் தனது ராஜ்சியம் மெதுமெதுவாக ரோமன் கத்தோலிக்கத்தை உள்வாங்கி பிற்காலத்தில் அது ஒரு ஆதிக்க சக்தியாக மாறப் போகின்றது என்ற உண்மையையும் மறுக்கமுடியாமல், மெது மெதுவாக தமது மக்களின் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ நடைமுறைகளோடும் கலக்கவிட்டு மக்களின் அன்றாட வாழ்வோடு கலப்பதை அனுமதிப்பதுன் மூலம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டான். அவன் மரண படுக்கையிலேயே அவனின் அனுமதி இன்றி மதமாற்றம் செய்யப்பட்டான்( conversion and pabtism). இந்த “சனி” கிரக கொண்டாட்ட காலத்தில் தான் மக்கள் தங்களுக்கிடையே பரிசு பொருட்களை பரிமாறும் பழக்கமும் அறிமுகமாகியுள்ளது.

இதே போல் கிறிஸ்மஸ் மரம் வைப்பதும், அதை அலங்கரிப்பு செய்வதும் கிறிஸ்த்தவத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத விடயம். இந்த ஊசி இலை(Connifers/Christmas tree) மரத்தை விட ஒலிவ்(Olive) மரத்துக்கே ஏசுவுடன் அதிகக் கூடிய சம்பந்தம் உண்டு. இந்த கிறிஸ்மஸ் மர அலங்காரம் சுமார் 600 வருடங்களுக்கு முன் ஜேர்மனியின் டோர்ட்முண்ட்(Dortmond) நகரத்தில் ஒரு தொழிற்சாலை தொழிலாளியால்(Factory worker) அறிமுகப்படுத்தப்பட்டு அது பின்னர் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாக, அவர்கள் தமது காலனித்துவ நாடுகளிலெல்லாம் அறிமுகப் படுத்திவிட்டனர்.

இந்த கிறிஸ்மஸ்சுடன் தொடர்புடைய இன்னுமொரு விடயம் “நத்தார் பப்பா”(Santa Claus) இது முதன் முதலில் ஒல்லாந்தில்( Holland/ Netherlands) உருவாகியது. இதை டச்( Dutch) மொழியில் “சிண்டர் க்லாஸ்”(Sinter Klaas) என்பர். இது பரிசுத்த நிக்கலாஸ் குழந்தைகளுக்கான பரிசு பொருட்களுடன் வானலோகத்தில் இருந்து வந்திறங்கியதான ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபு வழி பழக்கத்தை ஒல்லாந்தர் தமது காலனித்துவ பகுதியான “நிவ் அம்ஸ்டர்டாம்” அதாவது இன்றைய “நிவ் யோர்க்”(New York) நகரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அது கிறிஸ்மஸுடன் ஒட்டிய அம்சமாக உருவெடுத்தது. ஆனாலும் ஐஸ்லாந்து(Iceland) நாடே இந்த நத்தார் பப்பாவின் ஆரம்ப இடம் என்ற கதையும் உண்டு.

இவை போக கிறிஸ்மஸ் காலங்களில் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கம் முதன் முதலில்1840லேயே பிரித்தானியாவில் அறிமுகமாகி 1870களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி இன்று உலகின் அனைத்து பாகங்களிலும் கைக் கொள்ளப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே ஏனைய சமயத்தினரும் தத்தமது பெருநாட்களில் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தை கைக் கொண்டனர். ஆக கிறிஸ்மஸ் என்பது பைபிளைவிட ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு எனலாம். அதையொட்டிய பழக்க வழக்கங்கள் யாவும் பைபிளுடன், அல்லது கிறிஸ்தவத்துடன் சம்பந்தமில்லாத வெறும் ஐரோப்பிய சிந்தனை என்பது இங்கு தெளிவாகின்றது.

மேலும் இந்த கிறிஸ்மஸ் என்ற வார்த்தை கிறிஸ்த்துவின் கடைசி இராப் போசனம் ( last super) அல்லது அந்த நிகழ்வை ஞாபகமூட்டும் நிகழ்வு (eucharist) என்பதில் இருந்து மருவி கிறிஸ்துவுக்கான பூஜை(Christ’s mass) என்றாகி, இப்போது கிறிஸ்துவின் பிறந்த நாளாகக்(birthday) கொண்டாடப்படுகிறது. இருந்தும் இன்றைய கால கட்டங்களில் நிலைமை இன்னும் மாறி கிறிஸ்மஸ் நாளுக்கு முன்பிருந்தே அனேகமாக கார்த்திகை (November) மாதத்தில் இருந்தே வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்மஸ் களை கட்ட தொடங்குகிறது.

வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மேலே நாட்டு கிறிஸ்மஸின் பொருளும் நோக்கமும் தலை கீழாக மாறிவிட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களையும்(Church), அதனோடு சார்ந்த அமைப்புகளையும் தவிர்ந்த மற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் ஓன்று கூடல்கள்(Christmas party), ஏசுவை ஒரு கணம் கூட நினைவு கூறாமல் தாராளமாக உண்டு குடித்து, ஆண் பெண் இரண்டரக் கலந்து ஒரு வகை கேளிக்கை அல்லது காதலர் தினம் போல கொண்டாடப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். வர்த்தக நிறுவனங்களும் கிறிஸ்மஸ் என்ற பெயரில் எதை எதை எல்லாம் விற்க முடியுமோ அவற்றை விற்று தமது பண நோக்கத்தை இனிதே நிறைவேற்றுவர். இந்த கிறிஸ்மஸ் சாப்பாடு, மற்றும் பரிசு பொருட்கள் கிறிஸ்மஸ் புடிங்க்(Christmas Pudding) கிறிஸ்மஸ் கேக், வைன் என்று ஆரம்பித்து, தங்கம், வைரம் கார் என்று முடிவடையதையும் அனேகம் பேர் பார்த்திருப்பீர்கள். இதில் என்னை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கிய விடயம் கிறிஸ்மசுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் “கிரிப்ஸ்மஸ்”(cripsmass) என்ற கிழங்கு பொரியல் பக்கட்டுகள்தான். எவ்வளவு தூரம் ஏசு நாதரின் பிறந்த நாள் மலிவுபடுத்தப்பட்டுள்ளது?

நிற்க, கிறிஸ்தவத்தின் புனித நூலான “பைபிள்” க்கு புறம்பாக எந்த சமய நூலும் கிறிஸ்தவம் பற்றியோ ஏசு வின் பிறப்பு பற்றியோ அல்லது அவரின் தாயார் மரியாள் பற்றியோ எங்கும் எப்போதும் இருந்ததில்லை என்று சொன்னால் அதை மறுக்க எந்த கிறிஸ்தவரும் முன்வரமாட்டார். ஆனால் அதே நேரத்தில் ஏசுவை பற்றியும், எசுவின் தாயார் கன்னி(vergin) மரியாள் பற்றியும் ஏன் கிறிஸ்மஸ் பற்றியும் பைபிளை விட அதிகம் பேசுவது “குர்- ஆன்” (Kur- ann)என்றால் ஆச்சரிய மேலீட்டால் மூக்கில் கைவைப்பவரும் அப்படியா என்று வாய்பிளப்பவரும் நம்மில் அதிகம் பேர் என்பது மறுக்கமுடியாத விடயமாகும்.

இந்த அடிப்படையில் உங்களை புனித குர்-ஆன் பக்கம் சற்று அழைத்துச் செல்கிறேன். புனித குர்- ஆனின் 19ம் அத்தியாயம் ( ஸூரா- chapter) “மரியம்”(மரியாளுக்கான அறபு பெயர்) (Mary) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்போது உங்களை அத்தியாயம் 19 வசனம் 28ன் பக்கம் அழைத்துச் செல்கிறேன். ஏசு பிறந்த பிற்பாடு மரியாள் பாலகன் ஏசுவை தன் இன சனத்திடம் கொண்டு செல்லும் காட்சி வர்ணிக்கப்படுகின்றது. ” கன்னித் தாயையும் அவர் கையில் பிள்ளையையும் கண்ட உறவினர்,” ஓ! ஹாருனின் சகோதரியே, உமது தகப்பன் எந்த கெட்ட செயல்களின் பக்கமும் தமது நாட்டத்தை செலுத்தாதவர், உமது தாயாரோ தகாத உறவு பற்றி மனதிலும் எண்ணாதவர். இப்படியிருக்க என்ன காரியத்தை செய்துள்ளிர். இது எமது மரபுக்கும் வழமைக்கும் மாறான செயல்லலவா?” என்று வினா தொடுத்தனர்.

இப்போது, அத்தியாயம் 19 வசனம் 29ன் படி, “அப்போது கன்னி மரியாள் தன் பாலகனை சுட்டுகிறார். இந்த பாலகனுடன் நாங்கள் எப்படி கதைக்க முடியும்? நீரே பதி சொல்லும் என்றார்கள் கூடியிருந்தோர். அப்போது பாலகன் ஏசு வாய் திறந்து பேசுகிறார்”, ” நான் இறைவனின் சேவகன், இறைவன் எனக்கு நல்லுபதேசம்(good news) தந்துள்ளார். என்னை அந்த இறைவன் ஒரு தூதராக(messanger) ஆக்கியுள்ளார். நான் இந்த உலகத்தில் வாழும்வரை இறைவணக்கம் செலுத்துவதில் உறுதியாக இருக்கும் படியும், ஏழைகளுக்கு அவர்களுக்குரியதை கொடுக்கும் படியும் கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளார். நான் போகும் இடங்களில் எல்லாம் ஆசிர்வாததிக்குட்படும் விதத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆகவே நான் பிறந்த நாளின் மீதும், நான் இறக்கும் நாளின் மீதும், நான் மீண்டும் எல்லாரும் போல் எழுப்பபடும் நாளிலும் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ” என்றார்.

ஆகவே இங்கு நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், ” நான் பிறந்த நாளில் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்ற ஏசுவின் கூற்றாகும். இப்போது சொல்லுங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட பைபிளை விட குர்-ஆன் ஒரு வகை அதிகாரம் அளிக்குமாற் போல் உள்ளது அல்லவா? ஆகவே அனேக முஸ்லீம்களின் மனதில் எழும் கேள்வி சாந்தியும் சமாதானமும் கொண்ட ஒரு நாளை கொண்டாடுவதில் என்ன தப்பு? என்பதே. ஆனால் இதில் உள்ள சிக்கல் மார்கழி 25 என்பதும், கிறிஸ்தவரின் நடவடிக்கைகளுமே.

சூரிய காலக்கணிப்பீட்டுக்கு முன் நடைமுறையில் இருந்த காலக்கணிப்பு சந்திர காலக்கணிப்பு என முன்னர் பார்த்தோம். எனவே அந்த முறைப்படி கணக்கிட்டு அதை சூரிய வருட நாட்களோடு ஒப்பிட்டு முதல் கிறிஸ்மஸ் 25.12. 336ல் கொண்டாடப் பட்டிருந்தால், 337ம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் 14.12.337லும் 338ல் அது 04.12.338லும் அது 339ல் கார்த்திகை(November) 22லும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வருடத்திலும் சுமார் 11 நாட்கள் முன்னோக்கி சென்று கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க இது 25.12 என்று நிலையாக நிற்கும் போது ஒரு வருடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்படாமலும், இன்னுமொரு காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்கும். ஆதாவது இந்த சாந்தியும், சமாதானமும் நிறைந்த நாளை விட்டுவிட்டு, சம்பந்தம் இல்லாத வேறு நாட்கள் சாந்தியும், சமாதானமும் உடைய நாளாக கொண்டாடப்பட்டிருக்கும் என்பதோடு இப்போதும் அப்படியே இது நடை பெற்றுகொண்டும் இருப்பதை அவதானிக்க முடிகிறதல்லவா?

கிறிஸ்தவ உலகம் சந்திர அடிப்படையில் இதை சரியாக கணித்து கிறிஸ்மஸ் கொண்டாட முயற்சிக்கும் போது, முஸ்லிம்களும் அதில் இணைந்து கொண்டு ஏசுவை நினவு கூற வாய்பிருப்பினும், அதாவது இறைவனின் தூதர்களுக்கிடையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை, எல்லாரும் சமமானவர்களே என்றும், ஏசுவை இறைதூதுவராக ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்று குர்-ஆன் திட்டவட்டமாக கூறுவதாலும், முஸ்லிம்கள் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாளை கொண்டாடுவதாலும், ஏசுவின் ஒர் இறைக் கொள்கையை மெருகூட்ட வந்த முஹமம்துவின் பிறந்த நாள் போல் ஏசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஏதும் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. இலங்கையில் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாள் தேசிய “மீலாத் விழா” வாக கொண்டாடப்படுகின்றது. இங்கு கிறிஸ்மஸ் போன்று கொண்டாடங்கள் நடைபெறாமல் முற்றும் முழுதாக சமய நிகழ்வுகளும், சமயம் சம்பந்தமான, அறிவு பூர்வமான, நடைமுறை உலகம் சம்பந்தமான மாணவர், வழர்ந்தோருக்கான போட்டி நிகழ்வுகளும் இடம் பெறும். இது கலாச்சார அமைச்சின் அனுசரனையுடன் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்ட ரீதியில் கொண்டாடப்படுகிறது. அதே போல் கிறிஸ்மஸும் கொண்டாடப்படுமானால் அது காத்திரமானதாக இருக்குமல்லவா?

எனது மேற் சொன்ன தர்கத்தை கேட்டு, சரி எல்லாரும் கிறிஸ்தவர் போல் கிறிஸ்மஸ் கொண்டாடுவேம் என்று பொருள் கொண்டால் அதிலும் ஒரு பாரிய சிக்கல் உள்ளதை நாம் முதலில் காணவேண்டும். அதாவது பிறந்த நாள் கொண்டாடும் போது எல்லா சந்தர்பங்களிலும் பிறந்த நாளைக் கொண்டாடுபவருக்கே பரிசு பொருட்கள் கொடுப்போம் அல்லது ஆகக் குறைந்தது அந்த பிறந்த நாள் காரருக்கு எல்லாம் நன்றாக அமைய கடவுளை பிரார்திப்போம். ஆனால் சந்தர்ப்பவசமாக கெளதம புத்தருக்கு நடந்தது போல், அதாவது என்னை பின்பற்றி நிர்வாண நிலையடையுங்கள் என்பதை பிழையாக அர்த்தப்படுத்தி அல்லது அதை இலகுவாக்கி அவரின் போதனைக்கு எதிராகவே அவரை ‘கடவுள்’ நிலைக்கு கொண்டு சென்று வணக்கம் செலுத்துவது போல, பிறந்த நாள்ளுக்குரியவரிடம் சென்று நமக்காக மன்றாடுவது என்பது இஸ்லாமிய இறையியல் கொள்கைக்கு எதிரானது எனவே கிறிஸ்தவர்கள் போல் முஸ்லிம்கள் ஏசுவிடம் ஒன்றும் கேற்க முடியாது, கேற்கற் கூடாது. ஏனெனில் அவரும் முஹம்மது போல் இறைவணால் படைக்கப்பட்டவர்.

வருடத்தில் ஒருமுறை ஏசுவிடம் எமது தேவைக்காக மன்றாடுவதற்குப் பதிலாக தினந்தோறும் அதுவும் ஐந்து வேளை முஸ்லிம்கள் ஏசுவுக்காகவும் மன்றாடுகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவணை தொழ வேண்டும் என்பது அனேகர் அறிந்த விடயம். இதில் இரண்டு தொழுகை அனுஸ்டாண முறை மற்றைய மூன்றைவிட வித்தியாசமானாலும், ஒவ்வொரு தொழுகையையும் முடிவுக்கு கொண்டுவர முன் செய்யும் நீண்ட ஜெபத்தில் ஆபிரகாமுக்கும், அவரின் கிளையாருக்கும், அதாவது அவரின் இரண்டு பிள்ளைகளான இஸ்மாயில்(Ismaeal), ஈசாக் (Ishaq)குக்கும் அவர்களின் கிளையாருக்கும், அதாவது ஏசுவும், முஹம்மதும் இந்த மேற்சொன்ன இருவரின் பரம்பரையில் பிறந்தவர்கள், இறைவணின் பாதுகாப்பையும், ஆசிர்வாத்தையும் வேண்டி பிரார்திப்பதால், கிறிஸ்மஸ் கொண்டாட காலத்தில் ஏசுவை நினைக்காமல் வெறும் களியாட்டத்தோடு நின்றுவிடுவர்களிலும், அல்லது பிறந்த நாள்காரரிடமே சென்று நமக்கு எல்லாம் நன்றாக அமைய கேற்பர்களில் இருந்தும் நாம் வேறுபட்டவர்கள்.

ந்த மாபெரும் உண்மையை மறைத்துவைத்து பைபிள் சொல்லாத ஒரு விடயத்தை, ஏசு அனுமதிகாத ஒரு விடயத்தை, ஏசு அறிந்தே இருக்காத ஒரு விடயத்தை இந்த பாதிரிகளும்,கன்னியாஸ்திரிகளும், அவர்களின் மேதகு தலைவர் பாப்பரசரும், அவரின் அதிகார பீடமான வத்திக்கானும் கோடான கோடி பக்தர்களை இருளுக்குள் வைத்து , உண்மையை அறிவதற்கான அவர்களின் உரிமையை மறுத்து ஏய்ப்பதைவிட, ஏசுவின் நாமத்தை கேற்கும் தோறும் அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக(peace be upon him)என்று மனதுக்குள் வாழ்த்தும் ஒரு சராசரி முஸ்லிம் ஏசுவுக்கும், அவரை படைத்த இறைபனுக்கும் மிக நெருங்கி இருக்க தகுதியுடையோன். கிறிஸ்மஸ் கொண்டாட ஒருவகையில் உரிமையுடையோன்.

நன்றி-lankamuslim.org

தீனுல்இஸ்லாம்- சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம் கூறுவதென்ன?

Posted: December 6, 2012

தீனுல்இஸ்லாம்அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு !அளவிலாக் கருணையும் நிகரிலா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி மீது உண்டாவதாக!

இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டு சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை செய்யக் கூடிய மந்திரவாதிகள் பெருகிவிட்டனர். அறியாமைக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களை ஏமாற்றுகின்றனர்! இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில் – இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால்; அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற அவர்களும் காரண காரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகிற சூழ்நிலை ஏற்படுகிறது! மேலும் இந்தப்போக்கில் அல்லாஹ் – ரஸுலுடைய கட்டளைகளுக்கு மாறு செய்வதும் உள்ளது!இது குறித்து- அல்லாஹ்வின் உதவியை நாடியவனாக நான் கூறுவது இது தான்:நோய்க்கு சிகிச்சை பெறுவது ஆகுமான ஒன்றே என்பது ஏகோபித்த கருத்தாகும். எனவே சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதாவது, உட்பிரிவு நோய்களிலும் அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமை பெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என்பதை அவர் உறுதிப் படுத்திக்கொண்டு, பொருத்தமான ஷரீஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாதாரணமாக நடைமுறையிலுள்ள, காரண காரியங்களுக்குட்பட்ட ஒன்று தான். மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல. மேலும் அல்லாஹ், (இவ்வுலக வாழ்வில்) சில நோய்களைக் கொடுத்துள்ளானெனில் அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான். இதனை அறிந்தவர் அறிந்தார்., அறியாதார் அறியாது போனார்! ஆனால் அல்லாஹ், என்னென்ன பொருள்களை அடியார்கள் மீது ஹராம் விலக்கப்பட்டவையாக ஆக்கினானோ அவற்றில் அவர்களுடைய நிவாரணத்தை வைக்கவில்லை!எனவே நோயாளிகள் ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது!ஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டுக் கட்டி யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை! மேலும் தங்களது நோக்கம் நிறைவேறுவதற்காக உதவி வேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்களெனில் இவர்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என்பதே இவர்களைப் பற்றிய சட்ட நிலையாகும்!அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
من أتى عرافاً فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلةஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
من أتى كاهناً فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد
யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்” நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

இமாம் ஹாகிம் அவர்கள் பின்வருமாறு அறிவித்து அதனை ஸஹீஹ் தரத்திலானது என்றும் கூறியுள்ளார்கள்:
நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்” நூல்: ஹாகிம், பாகம்1-8

இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது!

எனவே ஆட்சியாளர்கள், அதிகாரத்திலுள்ளவர்கள், தீன்-இறைமார்க்க விவகாரங்களைக் கண்காணிப்பவர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் ஆகியோரின் கடமையாதெனில், குறி சொல்பவர்களிடமோ ஜோதிடர்களிடமோ மக்கள் செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்., இத்தகைய தொழில் செய்வோர் தெருக்களுக்கோ கடைவீதிகளுக்கோ வராமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மந்திரவாதிகள் சொல்வது, சில விஷயங்களில் சரியாக இருப்பதை வைத்துக் கொண்டும் இவர்களிடம் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்துக் கொண்டும் ஏமாந்து விடக்கூடாது. ஏனெனில் இவர்களிடம் வருவோர் அறியாதவர்களாவர்!

இவர்களிடம் செல்வதையும் விளக்கம் கேட்பதையும் இவர்கள் சொல்வதை உண்மைப்படுத்துவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெரும் ஆதாரமாகும். மட்டுமல்ல, அப்படிச் செல்வதில் பெரும் தீமையும் பேராபத்தும் உள்ளன., மோசமான பின் விளைவுகளும் அதிலுண்டு!

ஜோதிடர்களும் மந்திரவாதிகளும் இறைநிராகரிப்பவர்களே என்பதற்கு மேற்சொன்ன நபிமொழிகளில் தெளிவான ஆதாரம் உள்ளது. ஏனெனில் இவர்கள் மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடுகிறார்கள். அப்படி வாதிடுவது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். மேலும் இவர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஜின்களைப் பூஜிக்கிறார்கள். அப்படி செய்வது ஷிர்க்-இணைவைப்பும் குஃப்ர்- நிராகரிப்புமே ஆகும். மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடக் கூடிய இவர்களை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவரும் இவர்களைப் போன்று நிராகரிப்பவரே ஆவார். மேலும் இந்தத் தொழிலைச் செய்வோரிடம் சென்று யார் யார் மந்திரத்தையும் ஜோசியத்தையும் கற்றார்களோ அவர்களை விட்டும் அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் விலகிவிட்டார்கள்., எந்த விதத்திலும் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.

இந்த மந்திரவாதிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்களுக்குக் கூடாது. உதாரணமாக, இவர்களது மந்திர முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவது, அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றது தான். மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் காரியங்கள் தாம்! யார் யார் இவற்றில் திருப்தி கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த மந்திரவாதிகளின் வழிகேட்டிற்கும் குஃப்ர் எனும் நிராகரிப்புக்கும் துணை போனவர்களே ஆவர்!

மேலும் எந்த முஸ்லிமும் இந்த மந்திரவாதிகளிடம் சென்று தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா? அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா? என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது!

சூனியமும் மந்திரமும் குஃப்ர் எனும் நிராகரிப்புப் போக்கைச் சேர்ந்தவையும்- தடை செய்யப்பட்ட தீமைகளைச் சேர்ந்தவையுமாகும். அல்பகரா அத்தியாயத்தில் ஹாரூத், மாரூத் எனும் இருமலக்குகளின் விஷயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று:

وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُون 2:102 َ
ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் – நிச்சயமாக நாங்கள் (உனக்கு) ஒரு சோதனையே! எனவே (இதனை) நீ கற்று இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடாதே!,, என்று கூறிய பின்னரே எவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் – கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவை ஏற்படுத்தும் சூனியத்தை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்று வந்தனர். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர். உண்மையில், அவர்களுக்குப் பயனளிக்காத (மாறாக) தீங்கு அளிக்கக்கூடிதையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனைக் (கற்று) விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுவுலகத்தில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். தங்களின் உயிரை (அதாவது உழைப்பையும் சக்தியையும்) விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?” அல்குர்ஆன் (2: 102)

இத்திருமறை வசனம் பின்வரும் விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது:

சூனியம் குஃப்ர் எனும் இறைநிராகரிப்பாகும். சூனியம் செய்பவர்கள், கணவன் – மனைவிக்கிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள்;

சூனியம் செய்வது, சுயமாக எவ்விதப் பயனையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. மாறாக, இவ்வுலக நியதியிலான – விதியின் அடிப்படையிலான இறைநாட்டத்தைக் கொண்டு தான் எதையும் அது நிகழ்த்த முடியும். ஏனெனில் அல்லாஹ்தான் நன்மை தீமைகளைப் படைத்தவன். மேலும் கற்பனைகளை இட்டுக் கட்டக்கூடிய இந்த மந்திரவாதிகளால் தீமைகள் பெருகிவிட்டன. அபாயங்கள் கடுமையாகி விட்டன! இவர்கள், இத்தகைய விஷயங்களை, சிலை வணங்கிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு வந்து, அறிவு நிலையில் பலவீனமாக உள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள்! இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன், ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் (திண்ணமாக நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்., மேலும் திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம். அல்லாஹ் நமக்குப் போதுமானவன்., பொறுப்பேற்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்)

சூனியத்தைக் கற்றுக் கொள்ளக்கூடியவர்கள், தங்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்காத, மாறாக, தீங்கு அளிக்கக்கூடியதையே கற்றுக் கொள்கிறார்கள். சரி, மறுவுலகிலும் சரி அவர்களுக்குக் கடுமையான நஷ்டம் உண்டென்று அறிவிக்கக்கூடிய பெரிய எச்சரிக்கையும் இந்த வசனத்தில் உண்டு.

இத்தகையவர்கள் தங்களது உயிரை (அதாவது உழைப்பையும் சத்தியையும்) மிகவும் மோசமான விலைக்கு விற்று விட்டார்கள். இதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்களுடைய வியாபாரத்தை மிகவும் இகழ்ந்து கூறியுள்ளான்: தங்களுடைய உயிரை விற்று அவர்கள் வாங்கிக்கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக்கூடாதா?,, என்று!

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்: இந்த மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களின் கெடுதியை விட்டும், முடிச்சுகளில் மந்திரித்து ஊதுபவர்களின் கெடுதியை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பானாக!

முஸ்லிம்களின் மீது அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்களுக்கு இந்த சூனியக்காரர்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவர்களின் மீது அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்துவதற்கும் அல்லாஹ் நல்லருள்பாலிப்பானாக! அப்படிச் செய்தால்தான் இந்த மந்திரவாதிகளின் தீமையை விட்டும் அவர்களுடைய கெட்ட செயல்களை விட்டும் மக்கள் நிம்மதி பெற முடியும்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் கொடையாளனும் கண்ணிய மிக்கவனும் ஆவான்!

சூனியம் செய்யப்படும் முன்பாக அதன் கெடுதியில் இருந்து அடியார்கள் தற்காப்புப் பெறக்கூடிய திக்ர் – துஆக்களை அல்லாஹ் தன் ஷரீஅத்தில் அனுமதித்துள்ளான். மேலும் சூனியம் செய்யப்பட்ட பின்பு என்னென்ன திக்ர் – துஆக்களின் மூலம் சிகிச்சை பெற முடியுமோ அவற்றையும் அவர்களுக்குத் தெளிவாக்கிக் கொடுத்துள்ளான். இது அவர்களுக்கு அவன் புரிந்த அருளும் பேருபகாரமும் ஆகும். அவர்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளைப் பரிபூரணப் படுத்துவதாகவும் உள்ளது.

இப்பொழுது சில வசனங்கள், திக்ர்கள் தரப்படுகின்றன., சூனியம் செய்யப்படும் முன்னர் அதன் ஆபத்திலிருந்து இவற்றின் மூலம் பாதுகாப்புப் பெறலாம். சூனியம் செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை பெறவும் இவற்றைப் பயன்படுத்தலாம்., இதற்கு ஷரீஅத்தின் அனுமதி உண்டு!

சூனியம் செய்யப்படுவதற்கு முன்னர் அதன் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்ல முக்கியமான பயன்மிக்க விஷயம் என்னவெனில், குர்ஆன் – ஹதீஸில் வந்தள்ள திக்ர்கள், பாதுகாப்புத்தேடும் வாசகங்கள் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்புத் தேடுவதாகும்.

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு ஸலாம் கொடுத்தவுடன் ஓதும் திக்ர்களுடன் ஆயதுல் குர்ஸி எனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும்.

தூங்கும் முன்பாக ஆயதுல் குர்ஸியை ஓதவேண்டும். ஆயதுல் குர்ஸி என்பது குர்ஆனில் வந்துள்ள மிக முக்கியமான வசனமாகும்.

ஆயதுல் குர்ஸி

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

உச்சரிப்பு: அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்ய+ம் , லா தஅஃகுதுஹு ஸினது(ன்வ்) வலா நவ்மு(ன்ல்) லஹு மா ஃபிஸ் ஸமாவாதி வமா ஃபில் அர்ழ் , மன் ஃதல்லதீ யஷ்பஉ இன்தஹு இல்லா பி இஃத் னிஹி , யஅலமு மாபைன அய்தீஹிம் வ மா ஃகல்ஃபஹும், வ லா யஹீதூன பி ஷையி (ன்ம்) மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹு ஸ் ஸமாவாதி வல் அர்ழ் , வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வ ஹுவல் அலிய்யுல் அழீம்

பொருள்: அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவன்., (இப்பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். தூக்கமோ சிற்றுறக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்கள், பூமியிலுள்ளவை யாவும் அவனுடையவையே. அவனது அனுமதி இன்றி அவனது முன்னிலையில் யார் தான் பரிந்து பேசமுடியும்! (மனிதர்களாகிய) இவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும் இவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடியதைத் தவிர அவனது ஞானத்தில் இருந்து எவரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது! அவனது குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் பரந்துள்ளது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன்., மகத்துவம் மிக்கவன்!,, (2: 255)

குல் ஹுவல்லாஹு அஹத் سورة الإخلاص

குல்அவூது பிரப்பில் ஃபலக் سورة الفلق

குல் அவூது பி ரப்பிந்நாஸ் سورة الناس

ஆகிய ஸ_ராக்களை, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் ஓத வேண்டும். மேலும் இதே மூன்று ஸுராக்களையும் பகலின் தொடக்கத்தில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் இரவின் தொடக்கத்தில் – மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் ஓத வேண்டும்.

ஸ_ரதுல் பகராவின் பின்வரும் கடைசி இரண்டு வசனங்களை இரவில் ஓத வேண்டும்:

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

உச்சரிப்பு: ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹி வல் முஃமினூன், குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹி வ குதுபிஹி வ ருஸுலிஹ், லா னுஃபர்ரிகு பைன அஹதின்(ம்) மிர் ருஸுலிஹ், வ காலூ ஸமிஃனா வ அதஃனா ஃகுப் ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்,
லா யுகல்லி ஃபுல்லாஹு நஃப் ஸன் இல்லா உஸ்அஹா லஹா மா கஸபத் வ அலைஹா மக் தஸபத், ரப்பனா லா து ஆஃகித்னா இன் நஸைனா அவ் அஃக் தஃனா ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வ லா துஹம்மில்னா மாலா தாகத லனா பிஹ், வஅஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர் ஹம்னா அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்

பொருள்: இந்தத் தூதர் தம் இறைவடனிம் இருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். அவ்வாறே முஃமின்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை என்றும் எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்., (உன் கட்டளைகளுக்குக்) கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறோம். உன்னிடமே நாங்கள் திரும்பி வர வேண்டியதிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலன் அவருக்கே. அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (முஃமின்களே! இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் பிழை செய்திருப்பினும் எங்களைப் குற்றம் பிடிக்காதே! மேலும் எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே! மேலும் எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்களின் பாதுகாவலன். (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!,, (2 : 286)

மேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:
من قرأ آية الكرسي في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح

ஒருவர் இரவில் ஆயதுல் குர்ஸியை ஓதினால் அவருக்காக அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாவலர் இருந்து கொண்டே இருப்பார்., அதிகாலை வரை ஷைத்தான் அவரை நெருங்கவே மாட்டான்” நூல்: புகாரி (பாகம்: 9 பக்கம்: 55 நபிமொழி எண்: 5010)

மேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:

ஒருவர் இரவில் அல்பகரா அத்தியாத்தின் கடைசி இரு ஆயத்துகளை ஓதினால் அவருக்கு அவ்விரண்டும் போதுமானவை யாகும்” (அதாவது எல்லாவிதமான தீங்குகளை விட்டும் அவருக்குப் போதுமானவையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்)

நூல்: புகாரி, பாகம்: 9 பக்கம் 55 நபிமொழிஎண்:5009 முஸ்லிம் பாகம்: 1 பக்கம்:554-555 நபிமொழி எண்: 807 – 808 அபூ தாவூத் பாகம்: 2 பக்கம்:118 நபிமொழி எண்: 1397 திர்மிதி பாகம்: 9 பக்கம் -188 நபிமொழி எண்: 3043 இப்னு மாஜா பாகம்:1 எண்: 1363 -1364

பின் வரும் திக்ரை ஓதி அதிகம் அதிகமாகப் பிராத்தனை செய்துவரவேண்டும்:
أعوذ بكلمات الله التامات من شر من خلق
உச்சரிப்பு: அவூது பி கலிமாதில்லாஹி மின் ஷர்ரி மா ஃகலக்

பொருள்: அல்லாஹ்வுடைய பரிபூரணமான கலிமாக்களைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.. அவனுடைய படைப்புகளின் தீமையைவிட்டும்!,,

– இதனை இரவு – பகல் நேரங்களில் ஓதிட வேண்டும். பயணத்தின் நடுவே கட்டிடத்தில் அல்லது திறந்த வெளியில் ஆகாயத்தில் அல்லது கடலில் பயணம் செய்தாலும் சரியே!

நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்:
من نزل منزلاً فقال أعوذ بكلمات الله التامات من شر من خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك

ஒருவர் (பயணத்தின் நடுவே) ஓரிடத்தில் தங்கிட நேர்ந்தால் அப்பொழுது அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா ஃகலக் என்று ஓதினால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்படும் வரை எந்த இடையூறும் அவருக்கு ஏற்படாது” நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 2080 நபிமொழி எண்: 2708 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 396 நபிமொழி எண்: 3499 இப்னு மாஜா பாகம்: 2 நபிமொழி எண்: 3592

பகல் மற்றும் இரவின் ஆரம்ப நேரத்தில் பின்வரும் திக்ரை மூன்று முறை ஓதிவரவேண்டும்:

بِسْمِ الله الّذِي لا يَضُرّ مَعَ اسْمِهِ شَيْءٌ في الأرْضِ وَلا في السّمَاءِ وَهُوَ السّمِيعُ العَلِيمُ

உச்சரிப்பு: பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வ லா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்

(நூல்: அபூ தாவூத் பாகம்: 5 பக்கம்: 324 நபிமொழி எண்: 5088 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 331 நபிமொழி எண்: 3448 இப்னு மாஜா பாகம்: 2 பக்கம்: 289 நபிமொழி எண்: 3592)

பொருள்: எந்த இறைவனுடைய பெயருடன் பூமி – வானத்திலுள்ள எந்தப் பொருளும் எவ்வித இடையூறும் செய்ய முடியாதோ அந்த இறைவனின் திருப்பெயர் கொண்டு (ஆரோக்கியம் கேட்கிறேன்)

இவ்வாறு ஓதிவருமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதாக ஆதாரப்பூர்மான நபிமொழி அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாறு ஓதுவது எல்லாவிதமான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணியாகும்.

மேற்சொன்ன இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தாகும். தூயமனத்துடனும் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கையுடனும் உறுதிப்பாட்டுடனும் தெளிந்த உள்ளத்துடனும் தொடர்ந்து இவற்றை ஓதிவருபவருக்கு இவை நிச்சயம் பயனளிக்கும். இவ்வாறு இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியத்தை அகற்றக் கூடியவையாகத் திகழ்கின்றன. அத்துடன் அதன் இடையூறை அகற்றுமாறும் அதனால் ஏற்படும் ஆபத்தை-முஸீபத்தை நீக்குமாறும் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆ செய்யவும் வேண்டும். அவனிடம் பணிந்து பிரார்த்தனை செய்து வரவும் வேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் தோழர்களுக்கு- சூனியத்தின் விளைவுகள் நீங்கிடக் கற்றுக்கொடுத்த சில துஆக்களை இனி பார்ப்போம்:

اللهم رب الناس أذهب البأس ؤاسف انت اشافي لا شفاء إلا شفائك شفاء لا يغادر سقما

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பந்நாஸி அத்ஹிபில் பஃஸ, வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக், ஷிஃபாஅன் லா யுஃகாதிரு ஸக்மா

பொருள்: யா அல்லாஹ்! மக்களின் இரட்சகனே! துன்பத்தை அகற்றுவாயாக! மேலும் நிவாரணம் அளிப்பாயாக!
நீயே நிவாரணம் அளிப்பவன். நீஅளிக்கும் நிவாரணம் அல்லாது வேறு நிவாரணம் இல்லை! எந்த நோயையும் விட்டு வைக்காத பூரண நிவாரணத்தை நான் உன்னிடம் கேட்கிறேன்,, (நூல்: புகாரி பாகம்: 10 பக்கம்: 202 நபிமொழி எண்: 5743 மற்றும் பாகம் 10 பக்கம்: 210 எண்: 5750 முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1221 எண்;: 2119 திர்மிதி பாகம்;: 10 பக்கம்: 10 எண்: 3636 இப்னு மாஜா பாகம்: 1 எண்;: 1419)

ஜிப்ரீல் அவர்கள் நபிصلى الله عليه وسلم அவர்களுக்காக பிரார்த்தனை செய்து ஓதிய திக்ர் வருமாறு:

باسم الله أرقيك ، من كل داء يؤذيك ، من شر كل نفس أو عين حاسد الله يشفيك

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ ஓதுகிறேன்., தங்களுக்குத் தீங்களிக்கும் ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும், பொறாமைப்படும் உள்ளம் மற்றும் கண்கள் ஒவ்வொன்றின் தீங்கை விட்டும் அல்லாஹ் தங்களுக்கு நிவாரணம் அளிப்பானாக! அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ செய்கிறேன்,, (நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1418 எண்: 2186 இப்னு மாஜா பாகம்;: 2 எண்: 568) – மூன்று முறை இதனை ஓத வேண்டும்.

சூனியத்தின் பாதிப்பை அகற்றும் மற்றொரு முறை வருமாறு., (மனைவியுடன் உடலுறவு கொள்வதில் தடங்கல் ஏற்படுவதாக உணர்கிற ஆணுக்குரிய முறையாகும் இது) அதாவது, இலந்தை மரத்தின் பசுமையான ஏழு இலைகளை எடுத்து அவற்றைக் கல் போன்ற கருவியினால் இடித்துப் பொடியாக்கி அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு குளிக்கும் அளவு தண்ணீரை அதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஆயதுல் குர்ஸி, குல் யா அய்யுஹல் காஃபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பிந் நாஸ் ஆகிய சூராக்களை ஓத வேண்டும். அத்துடன் அல் அஃராஃப் அத்தியாயத்தில் சூனியம் பற்றி வந்துள்ள இந்த ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ

فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ

உச்சரிப்பு: வ அவ்ஹைனா இலா மூஸா அன் அல்கி அஸாக ஃப இஃதா ஹிய தல்ஃகஃபு மா யஃகிஃபூன், ஃப வகஅல் ஹக்கு வ பதல மா கானூ யஃமலூன், ஃப ஃகுலிபூ ஹுனாலிக வன் கலபூ ஸாஃகிரீன்

பொருள்: மேலும் நீர் உம் கைத்தடியை எறியும் என்று மூஸாவுக்கு நாம் வஹி அனுப்பினோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப்பொழுதில்) விழுங்கிவிட்டது. இவ்வாறு உண்மை உண்மை தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்த சூனியங்கள் யாவும் வீணாகிவிட்டன! அங்கேயே அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்., இழிவடைந்து போனார்கள்!,, (7 : 117- 119)

அத்துடன் யூனுஸ் அத்தியாயத்தின் பின்வரும் ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:

قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ
قَالَ بَلْ أَلْقُوا ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ
فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ
قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
உச்சரிப்பு: காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா, கால பல் அல்கூ ஃப இஃதா ஹிபாலுஹும் வ இஸிய்யுஹும் யுஃகய்யலு இலைஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸஆ ஃப அவ்ஜஸ ஃபீ நஃப்ஸிஹி ஃகீஃபத(ன்ம்) மூஸா, குல்னா லா தஃகஃப் இன்னக அன்தல் அஃலா, வ அல்கி மா ஃபீ யமீனிக தல்கஃப் மா ஸனஊ இன்னமா ஸனஊஃகைஸு ஸாஹிர்,வலா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைது அதா

பொருள்: சூனியக்காரர்கள் கூறினர்: மூஸாவே! நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா? (அதற்கு மூஸா கூறினார்:) இல்லை, நீங்கள் எறியுங்கள், உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனியத்தினால் ஓடுவது போல மூஸாவுக்குத் தோன்றியது. அப்பொழுது தன் மனத்தில் மூஸா அச்சம் கொண்டார். நாம் கூறினோம்;: (மூஸாவே!) பயப்படாதீர். நிச்சயமாக நீர் தான் வெற்றியாளராவீர். மேலும் உம் வலது கையில் உள்ளதை கீழே போடும். அது, அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்., ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20 : 65 -69)

இவ்வாறு இந்த சூராக்களையும் வசனங்களையும் ஓதி தண்ணீரில் ஊதிய பிறகு தண்ணீரை மூன்று சிரங்கைகள் அள்ளி அருந்த வேண்டும். மீதித் தண்ணீரைக் கொண்டு குளிக்க வேண்டும். இதன் மூலம் சூனியத்தின் பாதிப்பு – இன்ஷா அல்லாஹ் நீங்கிவிடும். இவ்வாறு மேலும் இரண்டு மூன்று தடவைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் அவ்வாறு செய்வதில் குற்றமில்லை!

சூனியத்தின் பாதிப்பை நீக்குவதற்கான மற்றொரு சிகிச்சை முறையாதெனில், (இதுவே மிகவும் பயனுள்ளதாகும்) சூனியம் மந்திரிக்கப்பட்ட பொருள்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும். பூமியில் அல்லது மலையில் எங்கு வைக்கப்பட்டுள்ளனவென்று பார்த்து அவற்றை அப்புறப்படுத்தி அழித்துவிட்டால் சூனியம் செயலிழந்து விடும்!

எந்தெந்த விஷயங்களின் மூலம் சூனியத்தின் தீங்கில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியுமோ அதற்கு சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த விஷயங்களைப் பற்றிய இலகுவான விளக்கமாகும் இது. அல்லாஹ்தான் நன்மை புரிய நல்லருள் பாலிக்கக்கூடியவன்!

ஆனால் சூனியக்காரர்களின் செயல்பாட்டின் மூலம் அதாவது பிராணிகளை அறுத்துப் பலியிட்டோ படையல்களைச் சமர்ப்பித்தோ ஜின்களை வரவழைப்பதன் மூலம் சூனியத்திற்குச் சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் இவை ஷைத்தானியச் செயல்களாகும். இன்னும் சொல்லப் போனால் ஷிர்க் எனும் இணைவைப்பாகும்.

இதே போல ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு அவர்கள் சொல்கிறபடி செயல்பட்டு சூனியத்திற்கு சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் அவர்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள். அத்துடன் அவர்கள் பொய்யர்களாயும் தீமைகள் செய்வோராயும் உள்னர். மேலும் இல்முல் ஃகைப் எனும் மறைவான விஷயங்கள் பற்றிய ஞானம் தங்களிடம் இருப்பதாகவும் வாதிடுகிறார்கள்., பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்! இத்தகைய நபர்களிடம் சென்று விளக்கம் கேட்பதையும் அதனை நம்புவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இதைப் பற்றிய தெளிவான விளக்கம் இந்நூலின் தொடக்கத்தில் சென்றுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் துஆ செய்கிறோம்: எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. அவர்களது தீனை – இறைமார்க்கத்தைப் பாதுகாப்பானாக. மார்க்கத்தைப் பற்றிய நல்லறிவையும் விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்குவானாக. மார்க்கத்திற்கு முரணான ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ஈடேற்றம் அளிப்பானாக.

அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமான முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் கிருபையும் சாந்தியும் பொழியட்டுமாக!

நன்றி-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்.

அன்றைய இளைஞர்கள் முஆத், முஅவ்வித் ,இன்றைய இளைஞர்கள் நிலை?????????

Posted: November 28, 2012

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே !!!!

நம்மில் எத்தனை பேருக்கு இந்த இளைஞர்களின் வீரம் தெரியும்
அன்றைய இளைஞர்கள்!!!!
பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் )ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலையை பாருங்கள் !!!!!!!அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வாழ்ந்த இளைய சமுதாயத்தில் இருந்து நாம் படிப்பினை பெறவேண்டும் இன்றைய இளைய சமுதாயத்தில் நிலை என்ன சினிமா உள்ள பைத்தியகாரனை எல்லாம் தலைவாரக ஏற்று கொண்டு தனது மறுமை வாழ்கையும் இவ் உலக வாழ்கையும் ஏமாற்றி கொண்டு இருகிறார்கள் என்றைய நிலை என்ன தனது தலைவரை எவனாவது எதவாது சொன்ன கோவம் வருகிறதே அல்லாஹ்வின் தூதர் பற்றி பேசினால் உனக்கு ஏன் கோவம் வரவில்லை ஏன் என்றால் நீ அல்லாஹ்வின் தூதர் வாழ்கையை நீ படிக்கவில்லை ,அதான் காரணம் .
பெயர் அளவில் முஸ்லிமாகதான் நீ இருகிறாய் இஸ்லாதுக்காக என்றாவது உன் வாயில் இருந்து பிறரிடம் இஸ்லாத்தை பத்தி சொல்லி
இருக்கிறாயா .உன் பைத்திய காரன் சினிமா தலைவரை பற்றி பேசினால் நாள் முழுவது பேசி கொண்டே இருப்பாய் அவனை போல் உடை அணிகிறாய் அவனை போல் பெசிகிறாய் உன் செயல்கள் அனைத்தும் அவனை போல் இருகிறதே.என்ன காரணம் உன்னை அறியாமலே நீ அவன் மேல பைதியாமை இருகிறாய்#முதல் நாள் முதல் காட்சி இக்காக நூற்று கணக்கில் செலவு செய்கிறாய் அனால் நீ யாருகாவது தர்மம் செய்தது உண்டா ?#முதல் நாள் முதல் காட்சி இக்காக பல மணிநேரம் காத்து நிக்கிறாய் நீ பள்ளிவாசில் தொழுகைக்காக காத்து கிடந்த வரலாறு உண்டா ? இது தான் இன்றைய இளைஞர்கள் நிலைஅளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)அன்றைய இளைஞர்கள்!!!!!!!!3964. பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :64

பத்ருப் போரில் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.
அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், ‘என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், ‘என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார்.
அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் ‘அஃப்ரா’வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
Volume :4 Book :64
3963. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்

பத்ருப் போர் (நடந்த) நாளில், ‘அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரப்போனார்கள். அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, ‘அபூ ஜஹ்லே! நீயா?’ என்று கேட்டார்கள். (அப்போது) அவன், ‘தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுககு மேலாக… அல்லது நீங்களே கொன்று விட ஒரு மனிதனுக்கு மேலாக… ஒருவன் உண்டா?’ என்று கேட்டான்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :64
3962. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

“அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), ‘அபூ ஜஹ்லே! நீயா?’ என்றும் கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:
“இப்படித் தான் இந்த நிகழ்ச்சியினை (எனக்கு) அனஸ்(ரலி) அறிவித்தார்” என்று சுலைமான் இப்னு தர்கான்(ரஹ்) கூறினார்கள். மேலும், ‘இப்னு மஸ்வூத் அவர்கள் (அபூ ஜஹ்லை நோக்கி), ‘அபூ ஜஹ்லே நீயா?’ என்று கேட்டபோது, ‘நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.. யாரும் உண்டா?’ என்று (தன்னத்தானே புகழ்ந்தவனாக) அபூ ஜஹ்ல் சொன்னான்” என சுலைமான்(ரஹ்) அறிவித்தார்.
அபூ மிஜ்லஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்… (நன்றாயிருந்திருக்குமே!)” என்று அபூ ஜஹ்ல் கூறினான் என இடம் பெற்றுள்ளது.
Volume :4 Book :64

மேலே உள்ள வரலாற்று செய்தி ஆனது இரண்டு இளம் வீரர்களை பத்தி பேசிகிறது அவர்கள் இஸ்லாத்திக்காக தன் வாழ்கையை அர்பணித்த இவர்கள் போல் நாம் வாழ வேண்டாமா ?

இன்றைய இளைஞர்கள் மனத்தில் மறுமை வாழ்கையை பற்றி அச்சம் இல்லை அல்லாஹ் குரானில் கூறுவதை போல்

29.64. இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

57.20. ‘விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

44.38. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
6.32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

அல்லாஹ் இளைஞர்கள் பதில் குர்ஆனில் பல இடத்தில் கூறுகிறான்

18.10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது ‘எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!’ என்றனர்.

18.13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம்.

33.21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது

60.6. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) சொல்லுவதை போல் நாம் நம்ம வாழ்கையை அமைத்துகொண்டால் இரு உலகிலும் வெற்றி பெற முடியும் ,அப்படி நமது வாழ்கையை அமைத்து கொள்வோம்மாக..

தீனுல்இஸ்லாம்- சோதணைகள் நமது ஈமானை சோதிப்பதற்கே!!!!!!!

Posted: November 24, 2012

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே
இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தளர்ந்து விடாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள் .அல்குர்ஆன்:3:139ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2-155)மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(அல்குர்ஆன் 2-156)அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2-157)மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம் செலவு செய்கிறான் என்று இறைவன் சோதிப்பான் இல்லாதவன் செல்வம் இல்லாத போது இறைவன் விஷயத்தில் எப்படி இருப்பான் என்று இறைவன் சோதிப்பான்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குறிய சோதனை செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் கஃப் பின் இயாழ் (ரழி) நூல் திர்மிதி
சோதனையான ஒரு விஷயத்தில் இறைவனிடமே நமது கோரிக்கையை நாம் ஒப்படைக்க வேண்டும்.நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் . என் அடியானின் இரு கண்களை நான் (போக்கிவிடுவது) கொண்டு அவனைச் சோதித்து அவன் அப்போது பொருமையாக இருப்பானானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாக சுவர்க்கத்தை வழங்குவேன் என நபியவர்கள் கூறியதை நான் செவிமடுத்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – புகாரி 5653)

இப்படி பல சந்தர்ப்பங்களில் சோதனைகளை பொருத்துக் கொள்வர்களுக்கு இறைவன் தனது அருளைப் பொழிவதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கண்டிப்பாக பொருமையாக இருப்பதுதான் மிகவும் சிறந்த பண்பாகும்.
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10)

அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான் (அல்குர்ஆன் 2-153)
ஆக அன்பின் சகோதரர் அவர்களே உங்கள் பிரச்சினையை இறைவனிடம் கூறி மன்றாடுங்கள் இறைவன் கண்டிப்பாக அவற்றை நீக்குவான்…

தீனுல்இஸ்லாம்- இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?

Posted: November 22, 2012

தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!

யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.

எவ்வித இயக்கங்கங்களையும் சாராமல் அல்லாஹ் நமக்கு இட்டபெயராகிய முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியினைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குழுச்சண்டைகளே என்றால் அது மிகையாகாது! ஷிர்க், பித்அத்திலே உழன்றுக் கொண்டிருப்பவர்களிடையே அதன் தீமைகளை உணர்த்த முற்படும் போது அவர்கள் முன்னிருத்துவதோ நமது குழுச்சண்டைகளைத்தான்!

எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!

தமக்கும் தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்! அறிவாற்றலில், விவாதத் திறமையில் தம்மை விஞ்சியவர்கள் யாருமில்லை என்று நினைப்பது நம் அகந்தையின் காரணமாக அன்றோ?

‘கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்’ (12:76) என்ற திருவசனத்தை நாம் மறந்துவிட்டோமா? அல்லது

‘அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்-குர்ஆன் 5:100) என்ற உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தானா?

தாம் சார்ந்த இயக்கம் தான் தலைசிறந்தது என்ற நினைப்பும், தம் இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது தம் இயக்கத்தைச் சாராதவர்கள் எல்லாம் தடம் புரண்டவர்கள் என்ற இறுமாப்பும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் அல்லவா? இந்த இயக்கங்களைப் பற்றிக்கூட கேள்விப்பட்டிராத கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனரே! அவர்களும் தடம்புரண்டவர்கள் தானா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

அன்பு சகோதரர்களே! தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்ற போர்வையில் தனிநபர் விமர்சனங்கள் அல்லவா நாம் செய்து கொண்டிருக்கிறோம்! சமுதாயத்தில் தீமைகள் நடைபெறும் போது அவற்றைச் சுட்டிக் காட்டி திருத்துவது அவசியமாகும். ஆனால் அந்தப் போர்வையிலே தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்க தவறுகளையும், அவர் தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளையும் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவருடைய மானத்தோடு விளையாடி அவருடைய மாமிசத்தையல்லவா சாப்பிடுகின்றோம்?

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் என்றால் என்ன? என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை குர்ஆன் ஹதீஸ் போதிக்கின்ற நமக்கு கிடையாதா?

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.

எனவே நாம் நம்முடைய பிறசகோதரர்களை கீழ்தரமாக எண்ணுவதையோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கூறுவதையோ தவிர்க்கவேண்டும். அதை மீறி செயல்பட்டால், நாம் மறுமை நாளின் மீது உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருந்தால், நம்மால் பாதிப்புக்குள்ளான சகோதரர்கள் நம்மை மன்னிக்காதவரை நாம் ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்பட்டடுள்ள பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம். அதில் ஒன்று தான் ஒவ்வொருவரும் தம்மையும், தம் குடும்பத்தார்களையும் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது! அல்லாஹ் கூறுகின்றான்:

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று தமது வாயினால் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் பண்புகளையும், சிஃபத்துக்களையும் அவனுடைய சிருஷ்டிக்களான அவுலியாக்களுக்கும், நபிமார்களுக்கும், இறை நேசர்களுக்கும் வழங்கி அவர்களை அழைத்து, உதவிகோரி அவர்ககளிடம் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களை வணங்கி வழிபட்டு அவர்களையும் ‘வேறு இலாஹ்களாக’ ஏற்படுத்திக்கொண்டு, ஷிர்க் என்னும் மாபெரும் பாவமாகிய இணை வைப்பைச் செய்து நிரந்தர நரகத்தின் படுகுழியை நோக்கி வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதைவிட வேறு முக்கிய செயல்கள் நமக்கு இருக்கின்றனவா? இதற்கல்லவா நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

ஆம்! தாம் சார்ந்த இயக்கப்பற்றின் காரணமாக தாம் செய்வது தவறு என்பதை உணராமல் செயல்படுபவர்களைத் திருத்துவது நமது கடமைதான்! இல்லையென்று கூறவில்லை! அவர்களைத் திருத்துகின்ற நம்முடைய செயல்பாடுகள் எரிகின்ற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல அவர்களுடைய இயக்கவெறியை அதிகப்படுத்துவதாக அமையக்கூடாது! மாறாக, அவர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி இவ்வித இயக்கங்களினால் சமுதாயத்திற்கு சீர்கேடுகளே அதிகம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறி உண்மையை உணர்த்துதாக அமையவேண்டும்! அதே நேரத்தில் இயக்கத்தை எதிர்ப்பதாகக் கூறுகின்ற நம்முடைய செயல்பாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இணைவைப்பாளர்களுக்கு ஆதரவாகப் போய்விடக்கூடாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் உண்மை என்னவெனில், இயக்கங்களைச் சார்ந்தவர்களாயினும் சரி, அல்லது இயக்க எதிர்ப்பாளர்களாயினும் சரி! நமக்கு நாமே குறைகூறி, புறம் பேசித் திரிகின்றோமே தவிர இறைவனால் என்றென்றும் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க்கை நமது சமூகத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபடுவதில் வெகு சொற்பமாகவே கவனம் செலுத்துகின்றோம்.

ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று, ஷிர்க் மற்றும் பித்அத்துகளை தவிர்ந்து வாழும் எனதருமை ‘முஸ்லிம்’ சகோதர, சகோதரிகளே! நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை எதிர்ப்பவராகவோ இருந்தாலும் சரியே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்புபவராக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நமது ஒவ்வொரு செயல்களுக்கும் அல்லாஹ்விடம் பதில்கூறியே ஆகவேண்டும் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்! நாம் ஒவ்வொரு முறையும் பிறருக்கு போதிக்கின்ற இறைவனின் எச்சரிக்கையை நமக்கு நாமே கூறிக்கொண்டு நம்மை சீர்திருத்திக்கொள்வோம்!

“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)

சகோதரர்களே!

ஒருவர் பூமி நிறைய பாவங்கள் செய்திருப்பினும் இறைவனுக்கு இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்தித்தால் அல்லாஹ் அவன் பாவங்களை மன்னிப்பதாக இருக்கின்றான்’ என்ற நபிமொழியை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே நம்முடைய செயல்களிலேயே தலையாய செயலாக, ‘பூமி நிறைய பாவங்களை விட மிகப்பெரிய பாவமாகிய ஷிர்க்’ என்பதை விட்டும் நம் சகோதர, சகோதரிகளை மீட்டெடுப்பதையே அமைத்துக்கொள்ள வேண்டும்! அதற்கே நாம் அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

யா அல்லாஹ் சத்தியம் எங்கிருந்து வந்தாலும், அதை யார் கூறினாலும் அந்த சத்தியத்தை ஏற்று நாங்கள் தவறு செய்திருப்பின் எங்களைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

உள்ளங்களைப் புரட்டுபவனே! உன்னிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம்! ஷைத்தானின் தூண்டுதல்களினால் துண்டு துண்டாகச் சிதறுண்டு தனித்தனிக் குழுக்களாக, இயக்கங்களாக செயல்படுபவர்களின் உள்ளங்களை ஒன்றினைத்து நாங்கள்

அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதற்கு உதவி செய்திடுவாயாக!

யா அல்லாஹ்! ஷைத்தானின் தீய சூழ்ச்சிக்கு உட்பட்டு முஸ்லிம்களுக்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் குழுச்சண்டைகளிலே எங்களின் சக்திகளை, நேரங்களை வீணடிக்காமல் அவைகளை நிரந்தர நரகத்திற்கு வழிகோலுகின்ற ஷிர்க் மற்றும் வழிகேட்டிற்கு இட்டுச்சென்று அதன் மூலம் நரகத்திற்கு வழிவகுக்கும் பித்அத் போன்ற செயல்களைச் செய்பவர்களைச் சீர்திருத்துவதில் திருப்புவதற்கு உதவி செய்வாயாக!

தீனுல்இஸ்லாம்- விபச்சாரம் – ஒரு பார்வை!

Posted: November 21, 2012

o பெண்மையும், விபச்சாரமும்

o தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம்

o பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள்

o பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்

o பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்

நபிமொழி எச்சரிக்கை ”ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் இறை நம்பிக்கையாளராக இருக்க மாட்டார்’ (புகாரி)

”விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்

வருமானத்தை அறுத்துவிடும்

இறைவனின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்

நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)

பெண்மையும், விபச்சாரமும்

விபச்சாரம், பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். வறுமை தான் விபச்சாரத்தின் பக்கம் பெண்களை நெருங்கச் செய்கின்றது, அவர்கள் தங்களது உடல் இச்சைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பணம், பரிசுகள் அல்லது சம்பளம் என்பன கிடைக்கின்றன. அதாவது விபச்சாரம் என்ற தொழிலில் பெண்களின் உடம்பே மூலதனமாகப் பயன்படுகின்றது.

இந்த விபச்சாரம் என்பது ஓரினச் சேர்க்கை மற்றும் எதிர்எதிர் பாலினருடன் வைத்துக் கொள்ளக் கூடிய பொருளாதாரம் சார்ந்த ஒன்று என்று கருத்துக் கூறப்படுகின்றது. வரலாறு நெடுகிலும் இந்தப் பாலியல் சார்ந்த தொழில் பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்களது உடம்பு தான் அந்தத் தொழிலின் உன்னதமான மூலதனம். காரணம், சமூகத்தில் நிலவுகின்ற சமூக பொருளாதார காரணங்கள் தான் பெண்களை இந்த விபச்சாரத்தின் பக்கம் கொண்டு வருகின்றன.

இன்னும் இந்த உலகத்தின் மிகப் புராதானமானதொரு தொழிலாக பல்வேறு சமூக கலாச்சாரங்களுக்கு மத்தியில் இருந்து வந்தது என்பதும், அதில் பெண்கள் மூலதனமாக்கப்பட்டிருந்தார்கள் என்ற நிலை கடந்த 19 ம் நூற்றாண்டு வரைக்கும் இருந்து வந்திருக்கின்றது என்பதையும், ஆண்களே இந்தத் தொழிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதையும் பார்க்க முடிகின்றது. அநேகமாக ஆண்களே இந்தத் தொழிலுக்கு வாடிக்கையாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதும், சிலவேளைகளில் ஆண்களும் பெண்களைப் போலவே விபச்சாரர்களாகவும் இருந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.

மேலும், கடந்த காலங்களில் சிறுமிகளும் கூட இந்த விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட அவல நிலையையும் தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்து வருவதையும் பார்க்க முடிகின்றது. இவர்களது முக்கியமான குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமேயாகும். குறிப்பாக சிறுமிகளை விப்பச்சாரத்தில் ஈடுபட வைப்பது என்பது உலகம் முழுவதும் நடைபெற்று வரக் கூடியதொரு தொழிலாகவே மாறி விட்டது, இதில் பயனாளிகளாக இருப்பவர்கள் பணக்கார நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரியர்கள், இவர்களது உடல் பசியைத் தீர்க்கக் கூடியவர்களாக ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இதிலிருந்து பணம் என்ற ஒன்றே இந்த விபச்சாரத்தை ஒரு தொழிலாக மாற்றி வைத்திருக்கின்றது.

பண்டைய காலங்களில் விபச்சாரமானது பல்வேறு முகங்களில் பரவி இருந்தது. அது சமூக, பொருளாதார மற்றும் அந்த பகுதியின் அமைப்பைப் பொறுத்து மாறுபடக் கூடியதாக இருந்தது. இது மதச்சார்பற்ற அல்லது சில சமயங்களில் மதத்தின் அடிப்படையிலும் இந்த தொழில் கொடி கட்டிப் பறந்தது. சில சமூகங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது என்பது தங்களது குடும்பத்தின் இருப்பைத் தக்க வைப்பதற்கான காரணியாக இருந்தது. அதாவது, நம் நாடுகளில் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட தேவதாசி முறைகளைப் போல.

பெண்கள் வற்புறுத்தல் மூலமாக அல்லது பலவந்தமாக அல்லது பொருளாதாரத் தேவையின் பொருட்டே அநேகமாக இந்தத் தொழிலுக்குள் நுழையக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். சில சமூகங்களில் இந்தத் தொழிலை மக்கள் அவமானகரமானதாகக் கருதியதோடு, அவ்வாறான பெண்களுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்தார்கள், ஏனென்றால் அவர்கள் வாழக் கூடிய அந்த சமூகம் இதனை இழிதொழிலாகக் கருதியதே காரணமாக இருந்தது. இன்னும் சில இடங்களில், சில விபச்சாரிகள் செல்வ வளத்தையும் இன்னும் அதிகாரத்தையும் கூட தங்களது திருமண உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, பைஸாந்தியப் பேரரசர் ஜஸ்டின்(1) என்பவரது மனைவி தியோடோரா என்பவள் ஒரு விபச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது. மன்னரை மணந்து கொண்டதன் மூலம் அவள் மகாராணியாகி விட்டாள்.

தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம்

தொழில் வளர்ச்சியடையாதிருந்த சமூகங்களில் விபச்சாரம் பரவி இருந்தது. தங்களது மனைவிமார்களைக் கூட மாற்றிக் கொள்வது இந்த சமூகங்களில் காணப்பட்டது. பண்டைய கால மத்திய கிழக்கு, இந்தியா, போன்ற நாடுகளில் கோயில்களில் ஏராளமான விபச்சாரிகள் இருந்தார்கள். இவர்கள் சில சமயங்களில் அதிகம் படித்தவர்களாகவும், திறமை மிக்க நாட்டிய மங்கைகளாகவும், பாடகிகளாகவும், பாடல்கள் இயற்றும் கவிஞர்களாகவும், புலவர்களாகவும், குறிப்பாக இவர்களிடம் மலிந்திருந்த கலைகள் மற்ற பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்தது. இவர்களிடம் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது கடவுளிடம் ஐக்கியமாகி விடுவதற்குச் சமமாகக் கருதப்பட்டது.

பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்…

பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில், விபச்சாரம் என்பது சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவி இருந்தது. விபச்சாரத்திலேயே கீழ் மட்டத்தில் இருப்பவர் அனுமதி பெற்றுக் கொண்ட சிவப்பு விளக்குப் பகுதிகளில் பணியாற்றினார்கள், இன்னும் அவர்கள் தாங்கள் அனுமதி பெற்ற விபச்சாரிகள் என்பதை அறிவிப்பதற்காக வேண்டிய அடையாள அட்டைகளையும் தொங்க விட்டிருந்தார்கள். விபச்சாரத்தில் உயர்மட்டத்தில் பணியாற்றக் கூடிய பெண்கள் நடன மங்கைகளாகவும், பாடகிகளாகவும் இருந்தார்கள். இந்த உயர் மட்டத்து விபச்சாரிகள் அரசியல் பிரமுகர்கள் கூடும் கிளப்புகளில் பணியாற்றினார்கள், அவர்களில் சிலர் அதிகார மட்டத்துத் தொடர்புகள் காரணமாக உயர் அந்தஸ்துகளையும் அதிகார மட்டத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

பண்டைய கால ரோமாபுரியில், விபச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுவாக காணப்பட்டன. இருப்பினும், வெளிதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்ணடிமைகள், கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள், இன்னும் அவர்களது எஜமானர்களால் பாலியல் வன்முறைக்குப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறாக அடிமைகளை விபச்சாரத்தில் தள்ளப்படுவதை ரோமர்கள் தடுக்க முயற்சி செய்தார்கள். இதற்காக கடுமையான நடவடிக்கையையும் எடுத்தார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அதற்கென உள்ள அடையாளமிடப்பட்ட அடையாள அட்டைகளை அணிந்து கொள்வது, தங்களது பெயர்களை அரசு பதிவகத்தில் பதிந்து கொள்வது என்ற நிலை இருந்தது, மற்றும் அவர்கள் மீது கடுமையான வரியும் விதிக்கப்பட்டது.

மத்திய காலங்களில், மக்களின் கற்பு நெறியைப் பாதுகாக்கும் பொருட்டு கிறிஸ்தவ சர்ச்சுகள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களை அவர்களுக்கென மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தொழிலுக்கு எதிராக அவர்கள் போராடுவதற்கு முன்வரவில்லை. புனித அகஸ்தின் என்பவரது அறிவுரையின்படி, அவ்வாறு அந்தத் தொழிலைத் தடை செய்தால், அதன் காரணமாக முன்பைக் காட்டிலும் அதிகமான அளவில் ஒழுக்க வீழ்ச்சியை நோக்கி ஆண்கள் செல்வார்கள் அல்லது தவறான வழியில் திருமண உறவிற்கு அப்பால் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் கிளம்பி விடுவார்கள் என்று கூறப்பட்டது. மத்திய கால ஐரோப்பாவில் அரசால் அனுமதி வழங்கப்பட்ட விபச்சார மையங்கள் தேசமெங்கும் காணப்பட்டன, இந்த விபச்சார மையங்கள் மூலமாக அரசு அதிகாரிகளுக்கும், இன்னும் தவறான வழியில் செல்லும் தேவாலயப் பிரமுகர்களுக்கும் அதிக வருமானத்தைக் கொடுத்தன.

ஆசியாவைப் பொருத்தவரையில், பெண்களை கீழ்த்தரமான படைப்பாகக் கருதினார்கள், அவர்களுக்கு மத அடிப்படையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை; தடுக்கும் அச்சுறுத்தும் சட்டங்கள் இருக்கவில்லை, மாறாக விபச்சாரம் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது.

16-ம் நூற்றாண்டிலிருந்து புராட்டஸ்டண்டு மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளின் நடவடிக்கைகளின் மூலமாக இந்த விபச்சாரம் குறைய ஆரம்பித்தது. விபச்சாரம் என்பது ஒழுக்கக் கேடானது என்றும், அதில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது, அவ்வாறானதொரு நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் இருந்தது, அப்பொழுது மக்களிடையே அதிமான பால்வினை நோய்கள், அதாவது ‘சிபிலிஸ்” போன்ற பால்வினை நோய்கள் வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது. நகரின் பல்வேறு விபச்சார மையங்களை அதிகாரிகள் மூடினார்கள்.

கி.பி.1635 ம் ஆண்டு பாரிஸ் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, விபச்சாரிகளுக்கு கசையடி கொடுக்கப்பட்டது, அவர்களது தலை மொட்டை அடிக்கப்பட்டது, முன் விசாரணை இன்றி அவர்கள் நாடு கடத்தவும்பட்டார்கள்.

தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் விபச்சாரம் தொழில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் தான் பொருளாதார நோக்கத்தை முன்னிட்டு பெண்கள் விபச்சாரத்தை நாடினார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் விபச்சாரம் என்பது வெளிப்படையானதொன்றாக மாறிப் போனது, வளர்ச்சியடைந்தது, அத்துடன் பாலியல் நோய்களும் கூட அதிகம் பரவ ஆரம்பித்தன. இன்னும் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் மேற்குலகில் மக்கள் அதிகம் வாழ்ந்த பெருநகரங்களில் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.

1700-ம் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் பரவி வந்த பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தும் முகமாக விபச்சார மையங்களையும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களையும் அரசு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு லைசன்ஸ் வழங்கப்பட்ட விப்பச்சார மையங்களுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதகர்கள் சென்று பரிசோதித்தும் வந்தார்கள். ஆனால், பிரிட்டனில் லைசன்ஸ் வழங்கும் நடைமுறை இல்லையெனினும், 1860 ல் இயற்றப்பட்ட கொள்ளைநோய் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விபச்சாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது, மற்றும் கப்பல்துறை மற்றும் இராணுவ மையங்களில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டது.

பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சிவப்பு விளக்குப் பகுதிகளில் இந்த விபச்சாரம் வெளிப்படையாகவே கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. நகர அதிகாரிகள் விபச்சாரத்தை ”தேவையானதொரு தீமை”” என்றே கருதினார்கள். இந்தப் பகுதியில் வாழக் கூடிய ஏதாவதொரு கண்ணியமிக்கதொரு மனிதர் தலையிடும் வரைக்கும், அதிகாரிகள் விபச்சாரத் தொழிலை அந்தப் பகுதிகளில் அனுமதித்தார்கள். அதுமட்டுமல்ல, பண்டங்கள் போல ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விபச்சாரிகள் கொண்டு போகப்பட்டார்கள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

விபச்சாரத் தொழிலுக்கு வழங்கி வந்த லைசன்ஸ் முறைகளில் நடந்த முறைகேடுகள், பல்வேறு கிளர்ச்சிகளை பிரிட்டனிலும், ஐரோப்பிலும் உண்டாக்கியது.

பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட கொள்ளை நோய்களுக்கு எதிரான சட்டத்தினால் எந்தவிதமான சாதகங்களும் விளையவில்லை, மாறாக, தங்களது சொந்த வாழ்வில், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அது அமைவதாக மக்கள் கருத ஆரம்பித்தார்கள். விபச்சாரத் தொழிலுக்காக பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு முறைகளை பல்வேறு நாடுகள் கொண்டு வந்தன. இவ்வாறு பெண்களையும், குழந்தைகளையும் விபச்சாரத்திற்காக கடத்துவதை கிரிமினல் குற்றம் என்று பிரிட்டன் அறிவித்தது, இதற்காக 1885 ல் கிரிமினல் சட்ட வரையறையை அறிவித்தது. இன்னும் 1904 ல் 13 வளர்ந்த நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கிக் கொள்ளவும், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தீர்மானித்தன.

1910-ல் அமெரிக்காவானது, வெள்ளை அடிமைகள் கடத்தல் தடுப்பு – ன் அடிப்படையில், பெண்களையும், சிறுமிகளையும் ‘ஒழுங்கீன” நோக்கத்தின் அடிப்படையில் (விபச்சாரத்திற்காக கடத்துவதை) தடை செய்தது.

பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்

20-ம் நூற்றாண்டில் விபச்சாரம் என்பது பல்வேறு பரிமாணங்களில் தலையெடுக்க ஆரம்பித்தது. சில விபச்சாரிகள் தங்களை ”கார்ல் கேர்ள்ஸ்”” என்றழைத்துக் கொண்டு, தங்களுக்கென்றதொரு முகவரியில் இருந்து கொண்டு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மஸாஜ் பார்லர்களில், அதாவது விபச்சார விடுதி என்றில்லாமல் புதியவகை முகத்தோடு தொழில் செய்ய ஆரம்பித்தனர். அநேகமாக தெருவில் வசிக்கக் கூடியவர்கள் தான் இதுமாதியான விபச்சார விடுதிகளுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடியவர்கள், தங்களது வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு வீட்டை விட்டு ஓடி வந்த ஆண்களில் சிலர் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருபவர்களாக மாறினார்கள், பெண்கள் விபச்சார விடுதிகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். இவை யாவும் இவர்களை பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொள்ளுமுகமாகத் தான் இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தன.

பொதுவாக எல்லா சமூகங்களிலும் விபச்சாரத்தை அங்கீகரிக்கவில்லை எனினும், அரசாங்கங்கள் இதனைத்தடை செய்திருப்பினும், விபச்சாரத்திற்கு ஆதரவு தருவது, விபச்சாரிகளை வைத்திருப்பது அல்லது அது சார்ந்த தொழிலின் மூலம் வருமானம் பார்ப்பது ஆகியவையே சட்டங்களால் தடை செய்யப்பட்டது என்றாகியது. இன்னும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடிய விபச்சாரிகளின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதே ஒழிய, அவர்களது வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை.

அநேகமாக விபச்சார மையங்களை ஆண்களே நடத்துபவர்களாக நிர்வகிப்பவர்களாக இருக்கின்றார்கள், பெண்கள் தங்களது உடம்பை விற்றுப் பெறுகிற கூலியில் இந்த ஆண்களே அதிக ஊதியத்தை எடுத்துக் கொண்டார்கள். சம்பாத்தியத்தில் ஓரளவு பணத்தையே அந்தப் பெண்களுக்கு வழங்கியதோடு, அரசின் நடவடிக்கைகளின் பொழுது தேவைப்பட்டால் அவர்களுக்காக பிணையாளர்களாகவும் செயல்பட்டு அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர உதவினார்கள். விபச்சார மைய நிர்வாகிக்கும், விபச்சாரிக்கும் உறவு முறைகளில் நெருக்கம் இருந்தாலும், அநேகமான நேரங்களில் விபச்சாரியே பாதிப்புக்கு ஆளாகக் கூடியவளாக இருந்தாள் என்பது தெளிவு.

அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :

ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal employment opportunity commission- (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

1999-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.

லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,

o பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

o 7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,

o 62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்

o இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்

o 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்

o 41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்

பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :

o 43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

o 27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

o 19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்

o 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

கல்விக் கூடங்களில் :

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :

o 85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

o 76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

o 31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்

o 18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்

o 13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்

o அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,

o 25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்

o 10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றது

அமெரிக்காவில் பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்

o 12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்

o 21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்

o 11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்

o 3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :

o பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்

o இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்

o 50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.

”ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் இறை நம்பிக்கையாளராக இருக்க மாட்டார்’ (புகாரி)

”விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்

வருமானத்தை அறுத்துவிடும்

இறைவனின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்

நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது.

தீனுல்இஸ்லாம்- கியாமத் நாளின் அடையாளங்கள் ….

Posted: November 20, 2012

♣ மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

♣ பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

♣ ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
• நூல்: புகாரி 50

♣ குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
• நூல் : புகாரி 7121

♣ விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
• நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

♣ தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
• நூல் : புகாரி 59, 6496

♣ பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
• நூல் : முஸ்லிம் 1681

♣ காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
• நூல் : திர்மிதீ 2254)

♣ கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

♣ நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
• நூல்: புகாரி 1036, 7121

♣ பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
• நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

♣ நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: அஹ்மத் 10306

♣ பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

♣ ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
• நூல் : முஸ்லிம் 3971, 5098

♣ உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
• நூல்: அஹ்மத் 11365

♣ பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: அஹ்மத் 1511

♣ தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: ஹாகிம் 4/493

♣ பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: ஹாகிம் 4/493

♣ சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: புகாரி 7115, 7121

♣ இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: புகாரி 3609, 7121

♣ முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
• நூல்: புகாரி 3456, 7319

♣ யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
• நூல்: புகாரி 2926

♣ கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 5179

♣ யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
• நூல் : புகாரி 7119

♣ கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 3517, 7117

♣ அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 5183

♣ எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 5191

♣ செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 1036, 1412, 7121

♣ ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
• நூல் : புகாரி 1424

♣ மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
• நூல் : புகாரி 3609, 7121, 6936

♣ பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
• நூல் : புகாரி 3176

♣ மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 2451

♣ அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 3546

♣ மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

♣ புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.
• (அல்குர்ஆன் 44:10,11)

♣ உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
• அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

♣ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
• (அல்குர்ஆன் 21:96)

♣ ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
• (அல்குர்ஆன் 43:61)

♣ மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

♣ பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

தீனுல்இஸ்லாம்- எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்களா ?

Posted: November 19, 2012

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயேஎழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லும் அந்த மக்களின் நற்செயல்களில் ஒன்றாக ”ஓதிப் பார்க்க மாட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள். இதில் நாம் அன்றாடம் ஓதும் குல்ஹுவல்லாஹு அஹது, ஃபலக், நாஸ் மற்றும் கண் திருஷ்டி ஏற்பட்டால் ஓதிப் பார்த்தல் போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஓதிப் பார்த்தலும் அடங்குமா?அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மிஃராஜின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, “அல்ல, இது மூஸாவும் அவருடைய சமுதாயமும்” என்று சொல்லப்பட்டது.அப்போது “அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பின்னர் என்னிடம், “அடிவானங்களில் இங்கும் பாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை கண்டேன். “இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இதில் அடங்குவர்” என்று சொல்லப்பட்டது.(அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்து விட்டார்கள். மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ”நாம் தான் அவர்கள். நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது தூதரைப் பின்பற்றினோம். அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்” என்று சொன்னார்கள்.இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே அவர்கள் புறப்பட்டு வந்து, “அவர்கள் யாரெனில் அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள். (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே, அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டு விட்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் – இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் – புகாரி 5705விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர், ஓதிப் பார்க்க மாட்டார்கள் என்று பொதுவாகவே கூறப்படுவதால் இதில் எல்லா ஓதிப் பார்த்தலும் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளாக இருந்தாலும் இதில் விதிவிலக்கல்ல. அதிலும் நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயம் பல்லாயிரம் கோடி மக்களைக் கொண்டது. அவ்வளவு பேரில் வெறும் எழுபதாயிரம் பேர் தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று கூறப்படுவதால் இது மிக உயர்ந்த தகுதி என்பதை அறியலாம்.அப்படியானால் ஓதிப் பார்த்தலை ஏன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தர வேண்டும்? இந்த இரண்டும் முரண்பாடாக உள்ளதே என்ற சந்தேகம் ஏற்படலாம்.நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளைக் கொண்டு ஓதிப் பார்த்தல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு ஓதிப் பார்த்ததற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். அனுமதி என்பதன் பொருள் இது தான். ஆனால் அதே சமயம் அதைச் செய்யாமல் இருந்தால் கிடைக்கும் உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
ஓதிப் பார்க்க விரும்புவோர் எப்போது எதை ஓதிப் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தருவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொறுப்பாக உள்ளதால் ஓதிப் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் ஓதிப் பார்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் உயர்ந்தது என்பதையும் விளக்கியுள்ளார்கள். எனவே இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.
நன்றி-ஒன்லைன் பீ ஜே

தீனுல்இஸ்லாம்- இஸ்லாமிய வாழ்வு நெறியுடன் முரண்படும் பாரம்பரிய கல்விக் கட்டமைப்பு !

Posted: November 17, 2012

பாரம்பரிய மேலைத்தேய கல்விக் கட்டமைப்பு இஸ்லாமிய சமூக பொருளாதார வாழ்வுடனும் சில இயற்கை நியதிகளுடனும் முரண்படுவதாக தெரிகிறது, பதினேழு வயது முதல் சுமார் ஒரு தசாப்தகால துறை ரீதியிலான உயர்கல்வி முழுமையான மனித ஆளுமை,விழுமியங்கள்,பொருளாதார சவால்கள், பாலியல் நெறியாழ்கை, சமூகவியல் ஒழுங்கு என பல்வேறு பரிமாணங்களில் அதன் எதிர்மறையான தாக்கங்களை கொண்டுள்ளது..!

இயற்கை நியதிகளின் படி இரண்டாம் நிலைக் கல்வி நிறைவுறுகின்ற வயது சுமார் பதினாறு ஒருவர் வாழ்வின் ஆழ அகலங்களை புரிகின்ற ,கடமைகளை ,பொறுப்புகளை உணர்கின்ற, தலைமைத்துவ பண்புகளை பெறுகின்ற , குறிப்பாக வாழ்வாதார முயற்சிகளுக்கு தன்னை தயார் செய்கின்ற ஒரு பருவத்தை அடைகிறார்.

இத்தகைய அம்சங்களோடு பகிரங்கமாக பெரிதும் பேசப் படாத ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு கண்டிப்பான நெறியாழ்கை உட்படுத்தப் படுகின்ற “பாலியல் இருப்பு ” இயற்கைக்கு முரணான சில நீண்ட கால உயர்கல்வி, குறிப்பாக நாடு கடந்த தனிமைப் படுத்தப் பட்ட கல்வி முறைமைகள், பால் ரீதியாக வேறு படுத்தப் பட்ட நீண்ட கால விடுதிக் கல்விக் கட்டமைப்புகள் என்பன இஸ்லாமிய மற்றும் இயற்கை விழுமியங்களுடன் முரண்படுகின்ற பல அம்சங்களை கொண்டுள்ளமை உளவியல், சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராயப் பட வேண்டும்.

மட்டுப் படுத்தப் பட்ட பாட சாலைக் கல்வி முறை கூட மனிதனின் ஆக்கத்திரன்களை ஆரம்பப் பள்ளி , மதன் நிலைக் கல்வி எனவும், பகுதி நேர வகுப்புக்கள் எனவும் பெரிதும் மட்டுப் படுத்தி வெறும் தகவல் சேர்கின்ற யந்திரங்களை , மனித ,சமூக , கலை, கலாச்சார மற்றும் சன்மார்க்க விழுமியங்களிலிருந்து தூரமாக்குவதாகவே தெரிகின்றது. வாழ்வியல் போராட்டங்களில் துணிவுடன் ஈடுபடுகின்ற குடும்ப சமூக பொறுப்புகளை சுமக்கின்ற, சவால்களுக்கு ஈடு கொடுக்கின்ற அடிப்படை வாழ்வியல் பண்புகளை உரிய வயதில் மாணவர்களுக்கு பெற முடியாமல் போய் விடுகிறது.

குறிப்பாக இந்த நாட்டில் தமது சொந்த, குடும்ப , பொருளாதார, சமூக வாழ்வியலுக்கு பெரிதும் உதவாத கலைத்துறைக்கு ஐம்பது வீதத்திற்கு மேலான மாணவர்கள் தேசிய அளவிலும் என்பது வீதத்திற்கு மேலானவர்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் செல்கிறார்கள், இந்த உதவாக்கரை கல்வி முறைமையை இஸ்லாமிய நிறுவனங்களும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது ஒரு உளவியல் கோளாறாகவே தற்போதைய சூழ்நிலையில் பார்க்கப் பட வேண்டும்.

ஜாமியாஹ் நளீமிய்யஹ்வில் கற்றவன் என்ற வகையில் அன்று நாம் ஜாமியாஹ் கற்கைகளோடு பேராதெனிய பல்கலைக்கழக வெளி வாரி பட்டதாரி களாகவும் ஏக காலத்தில் நாம் வெளியேறினோம்! அந்த கலைத்துறை பட்டப் படிப்பு நாம் அரச துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உதவியது, 1971 காலப் பகுதியில் நளீம் ஹாஜியார் அவர்கள் வெளிவாரிப் பட்டப் படிப்பை அறிமுகம் செய்த பொது ஒரு பட்ட தாரி ஆசிரியரின் மாத சம்பளம் சுமார் 300 ரூபாய்கள் அனால் ஒரு பவுன் தங்கத்தின் விலை நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது தற்போதைய பெருமதிப் படி ஒரு பட்டதாரி ஆசிரியரின் மாத வருமானம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கவேண்டும் என நளீம் ஹாஜியார் அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள். இன்று அந்த பாடப் படிப்பின் பெறுமதி எவ்வாறு இருந்தாலும்.அரசாங்கம் வெளிவாரி கற்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்திருக்கின்ற நிலையில் ஜாமியாஹ்வின் கற்கைகளில் காலத்திற்கேற்ற மாற்றம் வர வேண்டும் என நாம் வழி யுறுத்துகின்றோம்!

இலங்கையில் இன்று பெரும்பாலான அறபு இஸ்லாமிய மதரசாக்களிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை , உயர் தரப் பரீட்சை மற்றும் வர்த்தகம் ,முகாமைத்துவம் போன்ற பட்டப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார் செய்கின்றமை ஒரு சிறந்த முன்னேற்றமாகும், அத்தோடு தகவல் தொழின் நுட்பம் ,ஆங்கிலக் கல்வி, சட்டம், இஸ்லாமிய நிதியியல் போன்ற கற்கைகளும் ஒரு சில இஸ்லாமிய கலையகங்களில் கற்பிக்கப் படுகின்றமை வரவேற்கத்தக்க மாற்றமாகும்.!

இஸ்லாத்தைப் பொறுத்தவரை சமூகத்தில் தங்கி வாழ்கின்ற ஒரு “மத குரு பீடம்” கிடையாது , சகலரும் உழைத்துண்டு வாழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, யாசகம் அது எந்த வடிவில் இருந்தாலும் அதனை இஸ்லாம் ஊக்கு விப்பதில்லை! இஸ்லாமிய நிறுவனங்களில் அமைப்புக்களில் பள்ளிவாயல்களில், தஆவா அமைப்புகளில் இருப்பவர்கள் முற்றிலும் துறந்த முணிவர்களாக சமூகத்திலும் வக்பு சொத்துகளிலும் தங்கி வாழும் முழு நேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்ற கடப்பாடும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை காலத்திற்குப் பொருத்தமான வாழ்வாதாரக் கற்கைகளை வழங்காது சிறுவர்களை இஸ்லாமிய கலையகங்களில் வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் ! இஸ்லாமிய அறிஞர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்கக் கூடிய சகாத் செலுத்தக் கூடிய தொழி அதிபர்களாக பல் துறை நிபுணர்களாக திகழ வேண்டும்!

இந்த நாட்டில் குறிப்பாக சுமார் ஐம்பது வீதமான மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிவிடுகிறார்கள், அவர்கள் வாழ்வில் நாம் உதவாக்கறைகள், இனி பணிப் பெண்களாகவும், கூலித் தொழிலாளி களாகவும் மத்திய கிழக்கு சென்று அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற மன நிலை தோற்றுவிக்கப் படுகிறது,,,,இந்த உதவாக்கரை கல்விமுறை பாரிய உளநிலை கோளாறுகளை நம்பிக்கை இழப்புகளை இளம் சந்ததிகள் மத்தியில் ஏற்படுத்துகிறது….!

இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் தற்போது பாரிய கல்விச் சீர்திருத்தங்கள் முன் மொழியப்பட்டும், துரிதமாக அமுல் படுத்தப் பட்டும் வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும், எனினும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமது மத கலாச்சார விழுமியங்களை தக்க வைத்துக் கொள்கின்ற வகையில் எமது தனித்துவ கல்விக் கோட்பாடுகளை நாம் மிகவும் கவனமாக வகுத்துக் கொள்ளல் வேண்டும்.

ஆரம்பக் கல்வி, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்வி என்று வரும் பொழுது முஸ்லிம் பாட சாலைகளில் மாணவர்களுக்கான தெளிவான வழிகாட்டல் வழங்கப் படுத்தல் வேண்டும், இலங்கையை பொறுத்தவரை இலவசக் கல்வி முறையில் எமது அபிலாஷைகளோடு முரண்படாத தெரிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன.

இலங்கையில் சுமார் 15 பல்கலைக் கழகங்கள் , 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன….கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர், உயர் தரமென்றும் அதன் பிறகு பல் கலைக்கழக மென்றும் அதிலும் குறிப்பாக விஞ்ஞானம், பொறியியல் , வர்த்தகம் (பெரும்பாலும்) கலைத்துறை என்றும் தான் பெரும் பாலான முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமல்லாது பாட சாலை அதிபர்களும் ஆசிரியர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டில் சுமார் 850 முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன , இது நாம் பெற்றுள்ள மிகப் பெரிய வளமாகும், ஆனால் மூன்றாம் உலக நாடொன்றில் வாழும் நாம் எதிர்பார்கின்ற சகல விதமான வளங்களும், வசதிகளும், நிறைவாக கிடைக்கும் என எதிர் பார்க்க முடியாது, எனவே இருக்கின்ற வளங்களுடனும், சலுகைகளுடனும், கேட்டுப் பெற முடியுமான உரிமைகளுடனும் முஸ்லிம் பாடசாலை களினது தர விருத்தி குறித்த ஒரு சமூக கூட்டுப் பொறுப்பு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

மட்டுப் படுத்தப் பட்டுள்ள தொழில், பதவி சார் சந்தர்பங்களை தகுதி வாய்ந்தவர்களை இனங் கண்டு வழங்குவதற்காகவே கல்வி மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன, ஆனால் தாம் வாழ்வில் எத்தகைய துறைகளை, தொழில் சார் சந்தர்ப்பங்களை இலக்காக வைத்து தகமைச் சான்றிதல்களை சேகரிக்கிறோம் என்பதனை தீர்மானித்துக் கொள்ளும் வழி காட்டல்கள் பெரும்பாலும், இரண்டாம் நிலைக் கல்வியின் போது நமது மாணவர்களுக்கு கிடைப் பதில்லை.

ஒரு தனி நபரின் ,குடும்பத்தின், சமூகத்தின், தேசத்தின் சமூக பொருளாதார,கல்வி, கலாச்சார, அரசியல் நிர்வாக மேம்பாடு, தன்னிறைவு, அபிவிருத்தி என்பன ஒரு நாட்டின் கல்விக் கொள்கையின் பிரதான இலக்குகளாக இருக்க வேண்டும், அவ்வாறு பெறப் படுகின்ற கல்வி சிறந்த ஆன்மீக, அறிவியல் அடித்தளத்தினை கொண்டிருக்கின்ற போது, சிறந்த பண்பாட்டு,மானுட விழுமியங்களைக் கொண்ட தலை முறைகள் உருவாக்கப் படுகின்றன.

துரதிஷ்ட வசமாக மனித வாழ்வின் மூன்று பிரதான அம்சங்களான “உடல்” “அறிவு” “ஆன்மா” என்பவற்றுள் உடலியல் தேவைகளான வாழ்வாதார இலக்குகள் சரியாக இனம் காணப் படாது “அறிவு” மற்றும் “ஆன்மீக” இலக்குகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்ற கல்விக் கோட்பாடுகள் சரியான இலக்குகளை , அடைவுகளை எய்த தவறி விடுகின்றன. இஸ்லாமிய கோட்பாட்டின் படி “வறுமை இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் ” : அதாவது ஆன்மீக, அறிவு, பண்பாட்டு வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என தெளிவாக வரை முறை கூறப் பட்டுள்ளது.

மஸிஹு தீன் இனாமுல்லாஹ் –

தொடரும்…..

வெள்ளிமேடை- ஜும்ஆவின் சிறப்பு (தொடர்ச்சி)

Posted: November 16, 2012

2) நாயகம் (ஸல்) அவர்களின் முதல் ஜும்ஆ

நாயகம் (ஸ்ல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவுக்கு வெளியே குபா என்னுமிடத்தில் தங்கினார்கள். மக்காவில் விட்டு வந்த ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை எதிர்பார்த்தேதான் அவ்வாறு நாயகம்(ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள்.

பதினாகு நாட்களுக்கு பின்னர் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் சுகமே வந்து சேர்ந்தார்கள். இதற்கிடையே நாயகம் (ஸல்) அவர்கள் குபாவில் ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டு பதினான்கு நாட்களுக்குள் சரித்திரப்பிரசித்தமான அப்பள்ளிவாசலை கட்டி முடித்தார்கள். தாங்களும் மற்ற கூலி ஆட்களுடன் சேர்ந்து கொண்டு அயராது உழைத்து அக் கட்டிடத்தை எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாயகம் (ஸல்) அவர்கள் முதன் முதலாக நிர்மாணித்த பள்ளிவாசல் இதுவேயாகும்.இதைப்பற்றி இறைவன் குர்ஆனில் பக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட முதல் பள்ளிவாசல் என்று சிறப்பித்து கூறியுள்ளான். குபாவில் பதினான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் ஜும் ஆ தொழுகையை இங்கேயே நிறைவேற்றினார்கள். தொழுகைக்கு முன்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் முஸ்லீம்களுக்கு வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் பக்தி, நேர்மை ஆகியவற்றின் அவசியம் பற்றியும் அழகியதோர் உபதேசம் செய்தார்கள்.இதற்குத்தான் ஜும்ஆ வின் குத்பா என்று கூறப்படும். நாயகம்(ஸ்ல்) அவர்கள் முதல் ஜும்ஆத் தொழுகையும் முதல் குத்பாவும் இதுவேயாகும்.

3) ஜும்ஆ வின் சிறப்பு பற்றி நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறியது என்ன் ?

சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஜும் ஆ நாளாகும். அத்தினத்திலேயே ஆதம் நபி (அலை)படைக்கப்பட்டு அதிலேயே அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள்.அத்தினத்திலேயே சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றவும் பட்டார்கள். இறுதி நாளும் ஜும்மா தினத்திலேயே நிகழும் என்று நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி)- நூல்-முஸ்லீம்.

அபூமூஸன் அஷஅரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹு தஆலா உலகத்தினுடைய நாட்களை அந்தந்த நாட்களுக்குறிய அலங்காரங்களுடன் கொண்டு வருவான். ஜும்ஆவை உடையவர்கள் ஜும்ஆ நாளை மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்று மறுமை நாளில் அதனை சூழ்ந்து கொள்வார்கள். அந்த நாளாகிறது அவர்களுக்கு ஒளி சிந்தும் அந்த ஜும்ஆ நாளை பெற்றவர்கள் மறுமை நாளில் அதன் ஒளியினால் நடப்பார்கள். அவர்களது நிறம் பனிக்கட்டியைவிட வெண்மையானதாக இருக்கும்.அவர்கள் மீது கஸ்தூரி மணம் வீசும். அவர்கள் அந்நிலையிலேயே சுவர்க்கத்தின் மண்டபத்தில் நுழைவார்கள். அப்போது ஜின்களும் மனிதர்களும் அவர்கள் குறித்து வியந்து பேசுவார்கள். அவர்கள் சுவர்க்கதில் நுழையும் வரை ஜின்களும் பிற மக்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாயகம் (ஸ்ல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள் ஜிப்ராயில் (அலை) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.அவர்களுடைய கையில் வெண்மையான கண்ணாடி ஒன்று இருந்தது. அக் கண்ணாடியின் நடுவில் ஒரு வெண்மையான புள்ளியிருந்தது. நான் அவர்களிடம் இதுவென்ன ? என்று கேட்டேன். அதற்கவர்கள் இது ஜும் ஆவினுடைய நாளாகும். அப்புள்ளி அந்த நாளுடைய இருபத்து நான்கு மணிநேரத்தில் ஒரு மணி நேரமாகும். எனவே ஒருவன் அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் ஒன்றை கேட்டு அவன் அதை கொடுக்காதிருப்பதில்லை. அந்த நாள் தங்களுடைய சமுதாயத்தவருக்கு பெருநாள் ஆகும் என்பதை எடுத்துரைக்கவே அல்லாஹ் தங்களிடம் காண்பிக்குமாறு கூறினான்.அந்த நாளில் தங்களுக்கு மிகுதியான நன்மைகள் குவிந்து கிடக்கின்றன.

அந்த நாளில் ஒருவன் அல்லாஹ்விடத்தில் தனக்கென்று பங்கிடப்பட்டதை கேட்பானாயின் அல்லாஹ் அவனுக்குறியதை கொடுப்பான். அடியான் கேட்டது கொடுக்கப்படாவிட்டால் அதற்கு பகரமாக அவனின் பிழைகள் மன்னிக்கப்படுகிறது.மேலும் எங்களிடம் வெள்ளிக்கிழமையாகிறது அருட்கொடைகளை அதிகப்படுத்தப்பட்ட நாளாகும் என்றும் அதன் பெயர் சையதுல் அய்யாம் நாட்களுக்கெல்லாம் தலைமையானது என்போம் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் அவ்வாறு கூறுவதன் காரணம் என்ன என்று கேட்டேன். அல்லஹுத்தாஆலா சுவனபதியில் அஃபீஹ் எனப்படும் ஓர் ஓடையை உண்டாக்கியுள்ளான். அதில் வெண்மை நிறத்தில் கஸ்தூரி மணல் மேடை உண்டாக்கப்பட்டுள்ளது. ஜும் ஆ நாளன்று நபிமார்கள் அந்த மணல் மேட்டில் வந்து கூடுவார்கள். அவர்களுக்கு அவர்கள் அமர்வதற்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒளியினால் ஆன இருக்கைகள் போடப்படும். அவர்கள் அவற்றில் அமர்வார்கள். அதன் பின்னர் சுவனவாசிகள் வருகை தருவார்கள். அவர்கள் கஸ்தூரி மேடையில் அமர்வார்கள். அதன் பின்னர் அவர்கள் முன் அல்லாஹ் தன்னை வெளிப்படுத்துவான். நான் உங்களுக்கு என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடைகளை முழுமையாக்கி விட்டேன். இந்த நாள் நான் உங்களை கண்ணியப்படுத்திடும் நாளாகும்.எனவே நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றை என்னிடம் கேளுங்கள் எனக் கூறுவான்.அப்போது அவர்கள் நாங்கள் உனது திருப்பொருத்தத்தையும் சுவனபதியையும் கேட்கிறோம் என்பார்கள். அதற்கு அல்லாஹ் எனது திருப்பொருத்தம்தான் உங்களுக்கு கண்ணியத்தையும் தந்து எனது வீட்டிலும் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்று கூறுவான். மீண்டும் அவர்கள் ரிள்வான் என்னும் திருப்பொருத்தத்தை கேட்பார்கள். அல்லஹ் அவர்களது மேலெண்ணங்களுக்கு மேலாகவே அவனது திருப்பொருத்தத்தை வழங்குவான். இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உஙளுடைய இமாம் ஜும் ஆத் தொழுகையை முடிக்கும் நேரத்தில், அந் நேரத்தில் நபி மார்களுக்கும் மற்றவர்களுக்கும் மட்டற்ற மகிழ்சி உண்டாகும். அதன் பின்னர் மீண்டும் வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்ற ஆவலை விட வேறொரு ஆவல் உண்டாகாது.அதனால்தான் அதற்கு யவ்முல் மஜீத் என்று பெயர் வழங்கிற்று என்பதாக ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்,அல் மவ்யிலத்துல் குத்பா)

நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளை பற்றி குறிப்பிட்டுவிட்டு பின்னர் அதில் ஒரு நேரம் இருக்கிறது. முஸ்லீம் அடியான் தொழுதுவிட்டு அந்நேரத்தில் தன் தேவைகளில் ஏதாவது ஒன்றை அல்லஹ்விடம் கோரினால் அவன் அதை வழங்குகிறான் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல் புஹாரி)

ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்துவிட்டு தம் சக்திக்குட்பட்ட உடைகளை அணிந்துகொண்டு தன் இல்லத்திலிருக்கும் நறுமணத்தை பூசி பள்ளிவாசலுக்கு சென்று அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தம் மீது விதியாக்கப்பட்டுள்ளதை தொழுது இமாம் உபதேசம் செய்ய எழுந்ததும் அவரது உபதேசத்தை செவிசாய்த்து கேட்டால் அத்தினத்திற்கும் மறு ஜும் ஆ விற்குமிடயில் அவரால் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான்(ரலி) நூல்: புகாரி)

முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத்…

Posted: November 15, 2012

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி 1434, முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத் “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும். இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தமது நாட்டையும், வீட்டையும்சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.

“ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அவ் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லாவித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்” இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.

ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை. பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.

இன்றும் அந்தப் பயணவேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ் அகிலத்தை செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கிறது.

இஸ்லாமிய மாதங்களில் 4 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய 3 உடன் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும். ஆனால் இந்த 4 மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும்தான் “புனிதம்” என்ற பொருள் தங்கியுள்ளது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இம் மாதத்தில் 10 ஆம் நாளில் தான் நிகழ்ந்துள்ளது.

வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை படைத்தது இந்நாளில் தான். இறை அறிவிப்புப் பலகை, இறை எழுதுகோல் ஆகியவற்றை படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தை படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)

இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.

கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.

இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.

“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு – சிறப்பிப்பது எப்படி?

Posted: November 15, 2012

“முஹர்ரம்”

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.

“சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம் இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ”அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் ” (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

”நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் ” (5:2)

அவர்கள் அறிவிக்கின்றார்கள், ” ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் ” ( முஸ்லிம், அஹ்மத்)

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட முஹம்மத் (ஸல்), ”அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ” நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ§ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ” கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஹுஸைன்(ரலி) அவர்களை விட சிறந்தவர் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள். சிறப்பு அடிப்படையில் பார்ப்பதாக இருந்தாலும் ஹுசைன் அவர்களின் சம்பவத்தை விட மதிப்பு மிக்க மூஸா அவர்களை முன்னிருத்தி அவர்களை பாதுகாத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பிருப்பதே சிறந்ததாகும்.

மூஸா என்ற இறைத்தூதர் மிகப் பெரும் அதிசயத்தால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியான சம்பவமும், முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை ‘கர்பலா’வில் கொல்லப்பட்ட துக்க சம்பவமும் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் ஒரே நாளில் நடக்கின்றது.

துயரமான சம்பவம் நடந்ததால் அந்த நாளை துக்க நாளாக முடிவு செய்யலாமா..?

நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோல்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.

இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.

(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் – அல்குர்ஆன்: (3:140)
யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,
ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் – அல்குர்ஆன்: (55:29)

இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.

நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,

(முஸ்லிம்களே..) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள் நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு –
அல்குர்ஆன்: (2:155,156)
காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்

ஹிஜ்ரி என்றால் என்ன?

Posted: November 15, 2012

அது எதனை குறிக்கின்றது. ஹஜர என்ற அரபுப் பதத்திலிருந்து பிறந்தது தான் ஹிஜ்ரி, ஹிஜ்ரத் என்ற சொற்கள். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு குடிபெயர்ந்து செல்லுதல் என்பதே ஹிஜ்ரத் என்ற சொல்லின் பொருளாகும்.

இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் ஹர்ரான் என்ற ஊரிலிருந்து பாலஸ்தீனம் சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.

தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.

இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.

ஈட்டிய சொத்துக்கள், ஒட்டிய வாகனங்கள், செழுமைமிக்க வாழ்க்கை அனைத்தையுமே அந்த அல்லாஹ்வுக்காக தியாகத்தோடு துறக்க முன்வந்தார்கள். சுமார் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பயணத்தை தொடர்ந்தும், அதற்கு முன்னருமாக அணியணியாக நபித் தோழர்களும் தாம் பிறந்து வாழ்ந்த மக்கமா நகரைத் துறந்து 300 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் எனும் பெரு நகரை அடைந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 53, அண்ணலாரின் வருகையையடுத்து அன்று வரை ‘யத்ரிப்’ என அழைக்கப்பட்ட அந்நகரம் ‘நபிகளாரின் நகரம்’(மதீநதுன் நபி) என அழைக்கப்படலாயிற்று. இந்நிகழ்வையே ஹிஜ்ரத் பயணம் என்கிறோம். இவ்வாறான ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர்களே ‘முஹாஜிரீன்’கள் என அழைக்கப்படு கின்றனர். இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.

எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

தீனுல்இஸ்லாம்- ஹிஜ்ரத் வருடம் 1434 – நாம் சாதித்தது என்ன?

Posted: November 14, 2012

(வெறுமனே புத்தாண்டு…. புத்தாண்டு என்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டால் போதுமா? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னென்ன செய்தார்கள்? நாம் எதைப் பின்பற்ற வேண்டும்! ஏன் வழி தவறிப்போகிறோம்..?இன்ஷா அல்லாஹ், இந்த கட்டுரையில் சில விளக்கங்கள் கிடைக்கலாம்.]

ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டு நம்மிடையே விடை பெற்று புதிய வருடமாக 1434 பிறந்து விட்டது.அந்த ஞாபகமே நம்மில் பலருக்கு இல்லை. ஹிஜ்ரி வருடம் என்றால் என்ன என்று தெரியாத முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். ஹிஜ்ரி புது வருடக் கொண்டாட்டங்கள் என்ற ஒன்று இல்லை எனினும், அந்த வருடம் பிறக்க இருப்பதையாவது நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம் என்றால், அத்தகைய நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சரி! தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் என்ன சாதித்து விட்டார்கள் என்றால், அந்த ஹிஜ்ரி வருடங்கள் ஓடி ஓடி இளைத்து, நூலாகி நிற்கின்றதே! எதற்காக இந்த ஹிஜ்ரி வருடம் உருவானது, யார் உருவாக்கியது, அதன் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்த சமுதாயம் என்றைக்கு சிந்தித்துப் பார்க்கப் போகின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் கனமான சுமை வந்து அழுத்துகின்றது.

ஆனால் ஹிஜ்ரி பிறந்து பல ஆண்டுகள் முடிந்து விட்டதே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அதன் முக்கியத்துவம் என்ன? அந்த முக்கியத்துவம் இன்றைக்கு உணரப்பட்டிருக்கின்றதா?

மதீனாவில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டியெழுப்பிய அந்த சமூக அமைப்பு இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றதா? இல்லையெனில், அந்த சமூக அமைப்பை கட்டியமைப்பது யார் பொறுப்பு? அலட்டிக் கொள்ள வேண்டியதொரு பிரச்னை நம் முன் நிற்கின்றதே என்பது பற்றி இந்த சமூகம் எப்பொழுது தனக்குள் விவாதித்துக் கொள்ளப் போகின்றது..! அந்த விவாதம் தலையெடுக்கும் காலம் தான் இந்த சமூகத்தின் விடிவுக்கான காலமாக இருக்கும். ஆம்! எப்பொழுது இந்த முஸ்லிம் சமூகம் சமுதாய ரீதியாக ஒன்றுபட்டு, ஒரு இஸ்லாமிய ஆட்சிக்கான மறுமலர்ச்சியைக் காணுகின்றதோ அன்றைய தினம் தான் இந்த உலகத்திற்கும் கூடிய விடிவு நாளாகும்.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவிற்குச் சென்றதைத் தான், ஹிஜ்ரத் என்று வரலாறு கூறுகின்றது.

அப்படி நோக்கினால், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெறுத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை..! இல்லை..! அது முதல் கஃபா என்ற ஆலயத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற பூமி! எனவே அதனை வெறுத்திருக்க நியாயமில்லை.

அந்த மக்கள் தந்த துன்பத்தைக் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். தன்னை குருதி சொட்டச் சொட்ட அடித்து விரட்டிய தாயிஃப் வாசிகளைக் கூட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுக்கவில்லையே! எனும் போது, மக்கா வாசிகளையும் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். அப்படியானால் எதை வெறுத்தார்கள்?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தினைச் செயல்படுத்தும் ஒரு சூழல் மக்காவில் உருவாகவில்லை. அந்த உருவாக்கத்துக்குத் தொடர்ந்தும் குறைஷித் தலைவர்கள் தடையாகவே இருந்து வந்தார்கள். ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாத்வீகமான அணுகுமுறைகள் அத்தனையும் அந்தத் தலைவர்களிடம் தோற்றுப் போயின. அவர்களோடு போரிடுவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கியிருக்கவுமில்லை. எனவே அந்த மக்காவை விட்டு, தாஇபுக்குப் போனார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் உருவாக்க முடியாமல் போன சூழலை தாயிஃப் மக்கள் உருவாக்கித் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்பார்த்த சூழல் இது தான். அல்லாஹ்வுடைய தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், நிழல் போல் தன்னைத் தொடரும் ஒரு (குழுவல்ல) சமூகம் தேவை. அவர்கள் தனக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட வேண்டும். தனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்லாத்துக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தீனுல் இஸ்லாத்தின் தேவைகளை அவர்கள் தமது மனைவி பிள்ளைகளின் தேவைகளைப் போல, அல்லது அவற்றை விட மேலாகக் கருத வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் மக்காவில் உருவாகவில்லை. தாஇபிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூழல் மதீனாவில் மெல்ல மெல்ல உதயமாகியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு பயணமாகியது என்பது அவர்கள் எதிர்பார்;த்த அந்த சூழல் உருவாகிய பின்பு தான். மதீனாவில் இந்த சூழல் உருவாக ஏறத்தாழ மூன்று வருடங்கள் எடுத்தன.

அங்கு இந்த சூழல் உருவாகி விட்ட ஒரே காரணத்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குப் போய்விடவுமில்லை. ஏற்கனவே கூறப்பட்ட நபிகளாரின் எதிர்பார்ப்புகளை தவறாது நிறைவேற்றுவோம் என்று மதீனாவாசிகள் அண்ணலாருக்கு உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த பின்னர் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குப் போகச் சம்மதித்தார்கள். அந்த உறுதிப்பிரமாணம் தான் வரலாற்றில் (பைஅதுல் அகபா) அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் பைஅத் செய்த சமூகம் மதீனா சமூகமே! அதனால் அன்சார்கள் என்ற அழியாப் பெயரை அவர்கள் வரலாற்றில் தம்வசமாக்கிக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு இடமிருக்கிறது. மக்காவாசிகள் அதாவது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற உத்தமர்கள் நபிகளாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லையா?

உண்மையில் மதீனாவாசிகளை விட இவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர். அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினால் அதனையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் முதிர்ச்சி அவர்களை விட இவர்களுக்கே இருந்திருக்கிறது.

என்றாலும், மக்கா முஸ்லிம்கள் ரஸுலுல்லாஹ் எதிர்பார்த்த ஒரு சமூகமாக இருக்கவில்லை. அவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் இத்தகைய குழுக்களுக்கு அதிகாரமில்லை. சமூகம் சமூகமாக வாழ்ந்த கோத்திரங்களுக்கே அதிகாரம் இருந்தது. எனவே அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்பதை, ரஸுலுல்லாஹ் அதிகாரம் இல்லாதவர்களிடம் கேட்கவில்லை. மக்காவில் அதிகாரம் இருந்த குறைஷிக் கோத்திரம் இறுதி வரை ரஸுலுல்லாஹ்வுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இங்கு தாஇகள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைப்பதனால் இஸ்லாத்தின் முற்றுமுழுதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியாது. சமூகத்தை உருவாக்குவதனால் மட்டுமே கூடுதலான இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். எனவே குழு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு தாஇகள் செயல்படலாகாது. சமூக உருவாக்கமே தாஇகளின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் தாஇகள் சமூகத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கலாகாது. அது இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் ஒரு முயற்சியாகும். ஊரை இரண்டாக்காதீர்கள் என்று நாம் கூறும் போது அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் இது. ஊரோடு ஒத்தோடுவதற்கான அழைப்பு என்று தவறாக அதற்கு விளக்கம் கற்பிக்க முனைகிறார்கள். இந்த தவறான விளக்கம் ரஸுலுல்லாஹ்வின் ஒரு சுன்னாவைப் பரிகாசமாக்கி விடுகிறது.

ஹிஜ்ரத், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதிர்பார்ப்புகளை முற்று முழுதாக நிறைவேற்றும் ஒரு சமூக சூழலை அன்னாருக்கு பெற்றுக் கொடுத்தது. மதீனா நபிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அந்த சமூக சூழலை மக்காவில் முயன்றும் பெற முடியாமல் போனதே மக்காவை நபிகளார் துறக்கக் காரணம். இந்த வகையில் மக்காவை அவர்கள் வெறுக்கவில்லை. மக்காவின் மனிதர்களையும் அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் மக்காவின் சூழலை வெறுத்தார்கள் என்று கூறலாம். அதுவே ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் இங்கு மற்றுமொரு சுன்னாவை எமக்குக் கற்றுத் தருகிறது. இஸ்லாத்தை செயல்படுத்த முடியாத ஒரு சூழல் என்பதன் பொருள், சமூகம் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழல் என்பதாகும். நபிகளாரின் வாழ்வில் மக்கா இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

இத்தகையதொரு நிலை இன்றைய தாஇகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடைதேடி அவர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. நபிகளாரின் சுன்னா வழிகாட்டுகிறது. அதனைப் பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு ஒரு கிராமம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாஇகள் என்ன செய்ய வேண்டும்? மக்காவில் நபிகளார் என்ன செய்தார்களோ அதனைச் செய்யலாம்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் போக்கு மக்கா இரத்தக் கறை படியாமல் பாதுகாத்தது. மக்காவில் ஒன்றுக் கொன்று எதிராக இரண்டு குழுக்கள் மோதும் நிலை இதனால் தவிர்க்கப்பட்டது. இஸ்லாத்தை எதிர்த்து நின்றவர்களின் உள்ளங்களில் தீராத ஒரு பகைமை வளர்ந்து விடாமல் நபிகளாரின் இந்தப் போக்கு அணை போட்டது. ஒருநாள் அவர்களோடு ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கை இந்தப் போக்கை உரம் ஊட்டியது.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த சுன்னாவை இன்றைய தாஇகள் ஏன் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள்? என்பது புரியவில்லை. விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் பாரவாயில்லை. ஊரோடு ஒத்தோடுதல் என்று இதற்குத் தவறான விளக்கம் தராதிருந்தால்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் போக்கை பதின்மூன்று வருடங்களாக மக்காவில் பரீட்சித்தார்கள். மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக அவர்கள் தனது போக்கை மாற்றவுமில்லை. செய்த மாற்றம் என்னவென்றால் மாற்றம் ஏற்பட்டிருந்த ஒரு இடத்தை (மதீனாவை) நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் மற்றுமொரு குழுவின் தலையிடியை நபிகளாருக்குத் தந்தது. அவர்கள் தாம் யூதர்கள். மக்காவில் குறைஷிகளோடு நபிகளார் எந்த அணுகுமுறையைக் கையாண்டார்களோ அதே அணுகுமுறையை யூதர்களுடனும் கையாண்டார்கள். சற்று வித்தியாசமாக! அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கை எழுதி, நாங்களும் நீங்களும் சமாதானமாக வாழ்வோம் என்றார்கள். ஆனால் யூதர்கள் எப்போதாவது சமாதானத்தை விரும்பினார்களா? அவர்கள் நயவஞ்சகமாக சமாதானத்தை முறித்துக் கொண்டார்கள். எனவே மீண்டும் அவர்களோடு சற்று வித்தியாசமாக நடக்க வேண்டிய ஏற்பட்டது. நடவடிக்கை எடுத்தார்கள்.

மக்காவில் உடன்படிக்கையில்லை. எனவே நடவடிக்கையுமில்லை. இங்கே உடன்படிக்கை இருந்ததனால் நடவடிக்கையும் இருந்தது. இந்த அணுகுமுறை உலகத்தில் அன்றிலிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அணுகுமுறை மதீனாவில் ஒரு பிளவை ஏற்படுத்தவில்லை.

மக்காவில் சாத்வீகத்தால் செய்த அதே வேலையை அண்ணலார் மதீனாவில் சட்டத்தால் செய்தார்கள். இந்த அணுகுமுறை இஸ்லாத்தை நிர்மாணிக்கும் முயற்சியின் அத்திவாரமாகும். மட்டுமல்ல, ரஸுலுல்லாஹ் ஈட்டிய வெற்றிகளின் இரகசியமும் இதுவாகத்தானிருக்கிறது.

தாஇகளே! அழைப்பாளர்களே! நபிகளாரின் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறோமே, மக்காவையும் மதீனாவையும் முன்மாதிரியாக வைத்து நபிகளாரின் சுன்னாவை கிராமங்கள் தோறும் பின்பற்ற எங்களால் முடியாதா?

நன்றி: A ONE REALISM

தீனுல்இஸ்லாம்- இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி-1434

Posted: November 13, 2012

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள்

ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத் “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும். இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தமது நாட்டையும், வீட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.

“ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அவ் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லாவித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்” இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.

ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை. பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.
இன்றும் அந்தப் பயணவேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ் அகிலத்தை செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கிறது.

இஸ்லாமிய மாதங்களில் 4 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய 3 உடன் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும். ஆனால் இந்த 4 மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும்தான் “புனிதம்” என்ற பொருள் தங்கியுள்ளது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இம் மாதத்தில் 10 ஆம் நாளில் தான் நிகழ்ந்துள்ளது.
வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை படைத்தது இந்நாளில் தான். இறை அறிவிப்புப் பலகை, இறை எழுதுகோல் ஆகியவற்றை படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தை படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.

முஹம்மது நபீ (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனா வந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்கள் ஆசூ;றா பத்தாம்நாள் நோன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், தோழர்களும் பிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியையும், அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாள் என்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாள் என்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்றும் நவின்றார்கள்.
இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.
நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.

கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.

\இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.
“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும் சுருங்கக் கூறின்
 • அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
 • அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
 • அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
 • அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
 • அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
 • அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
 • அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
 • அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
 • அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
 • அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
 • அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
 • தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
 • அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
 • அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
 • அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
 • அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
 • அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.

வெள்ளிமேடை- ஜும்ஆ என்றால் என்ன?

Posted: November 9, 2012

வெள்ளிக்கிழமைக்கு யவ்முல் ஜும்ஆ என்று பெயர். ஜும்ஆ என்றால் ஒன்று சேருதல் என்பது இதன் பொருளாகும். அத்தினத்தில் மக்கள் யாவரும் ஒன்று கூடி தொழுவதாலும், ஜமா அத்தாக ஒன்று கூடித்தொழாமல் தனித்து தொழ அனுமதியில்லாததாலும் இப்பெயர் வந்துள்ளது. யூதர்களுக்கு சனிக்கிழமையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் பெருநாட்களாக ஒன்றுகூடி வணக்கம் புரியும் நாளாக இருப்பதுபோல் முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமையானது ஒன்று கூடி தொழும் பெருநாளாக ஜும்ஆ தினம் அமைந்திருக்கிறது.

இதற்கு யவ்முல் மஸீத் என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் அதிகமான நாள் என்பதாகும். இறைவன் அகிலத்தின் படைப்பை சனிக்கிழமை துவக்கி ஆறு நாட்களில் முடித்தான் என்றும் அத்துடன் இந்நாளை அதிகமாக சேர்த்து ஏழாவது நாளாக ஆக்கியதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கு யவ்முல் ஹர்பு (சண்டை நாள் ) என்னும் பெயரும் உள்ளது. ஒருவன் தன் மனோ இச்சையோடு போர் செய்யும், அதாவது தன் பாவத்தை நினைத்து வருந்தி மன்னிப்பு கோரும் நாள். ஆதலால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

இதற்கு யவ்முல் அரூபா (சந்தை கூடும் நாள்) என்றும் பெயர் உள்ளது. காரணம் முற்காலத்தில் இருந்தே அரபு நாடுகளில் சந்தை கூடி வந்தது. இதற்கு சையிதுல் அய்யாம் நாட்களின் நாயகம் என்ற பெயரும் உள்ளது.

இந்த ஜும்ஆத் தொழுகை வாரத்திற்கு ஒரு முறையாவது மக்களை ஒன்று சேர்க்கும் அரிய பணியை செய்கிறது. இரண்டு பெருநாட்களை விட சிறப்புடையது என்றும், இது பக்கீர்களின் ஹஜ் என்றும், மிஸ்கீன்களின் ஈத் ( ஹஜ்ஜுல் புகராயீ வஈதுல் மஸாகீன் ) என்றும் அண்ணல் நபி (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாம் இறுதியாக வந்த சமுகத்தவராயினும் நாமே மறுமையில் எல்லோருக்கும் முந்தி இருப்போம். நம்முடைய ஜும்ஆ தான் எல்லோருடைய ஜும்ஆ வுக்கும் முந்தி உள்ளது.யூதர்கள் நமக்கு ஒரு நால் பின்பும், கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு ஒரு நாள் பின்பும் உள்ளனர் என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜும்ஆ விற்கான அழைபொலி கேட்டதும் வியாபாரத்தை விட்டுவிட்டுத் தொழுகைக்கு விரைந்து செல்லுமாறு இறைவன் குர்ஆனில் கூறியுள்ளான். விசுவாசிகளே ! (வெள்ளிக்கிழமையாகிய) ஜும்ஆ நாளன்று தொழுகைக்காக பாங்கு சொல்லி நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லஹ்வை தியாணிக்க விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோராக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்தது.

( குர் ஆன் அத்தியாயம் 62, வசனம் 9. அல்லாஹ் இவ் வசனத்தில் ஜும் ஆ வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளான். )

தீனுல் இஸ்லாம்-காலம் கனிந்தது… கனவு கனியுமா?

Posted: November 7, 2012

உலக இஸ்லாமிய இயக்கங்கள் தமது உயிராகக் கொண்டிருந்த இலட்சியக் கனவுகளுக்கு அல்லாஹ் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறான். அவர்கள் எதிர்பார்த்திருந்த காலம் கனிந்துள்ளது கனவு கனியுமா?

இத்தகைய ஒரு வினாவுக்கு விடை தேடும் செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் 11, 12ஆம் திகதிகளில் கத்தாரில் நடைபெற்றது. “இஸ்லாமிய வாதிகளும் அரபுப் புரட்சியும்” என்ற கருப் பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வை “ஆய்வுக்கான அல்ஜஸீரா நிலையம்” ஒழுங்கு செய்திருந்தது. இந்த செயலமர்வில் டியுனீஸீயாவின் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் அந்நஹ்ழா கட்சியின் ஸ்தாபகருமான கலாநிதி ராஷித் அல்கன்னூஷி, சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ஸ்தாபகருமான கலாநிதி ஹஸன் துராபி, அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் சிந்தனையாளர்களுள் ஒருவரான கலாநிதி பஹ்மி ஹுவைதி என்போர் உட்பட அரபுப் புரட்சிகள் இடம் பெற்ற நாடுகளின் இஸ்லாமியவாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 50 வருடங்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்து… நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியத்திற்கு அடகு வைத்து… சராசரி மனிதர்களின் வாழ்க்கையை மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கவைத்து… நீதியையும் ஜனநாயகத்தையும் உயிரோடு புதைத்திருந்தனர் அரபு ஆட்சியாளர்கள். இக்காலப்பகுதி யில் இஸ்லாமியவாதிகளும் குரூரமாக அடக்கியொடுக்கப்பட்டிருந்தனர். அவர்களது குரல்வளை நசுக்கப்பட்டிருந்தது. மேற்கின் அண்ணன்மார்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக கிழக்கின் இஸ்லாமிய சக்திகளை அடக்கி ஒடுக்குவதில் விசுவாசம் நிறைந்த தம்பிகள் மும்முரமாகவே ஈடுபட்டிருந்தனர்.

அநீதிகள் எல்லை கடந்து செல்லும்போது யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இறைநியதி செயல்பட ஆரம்பித்து விடுகிறது. அந்த நியதியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருந்தாலும், அநீதியிழைக்கும் ஆட்சியாளர்களுக்கு அந்த நியதி காலடியில் வந்து கதவைத் தட்டும் வரை புரிவதில்லை. தங்களது அதிகாரத்தையும் பலத்தையும் மாத்திரமே அவர்கள் நம்பி இறுதியில் ஏமாந்து விடுகின்றனர். இறுதியில் இந்த அக்கிரமக்காரர்கள் இறைநியதியின் பலமான வீச்சில் அடிபட்டுச் சென்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றனர்.

அரபு வசந்தம் அல்லது அரபுப் புரட்சி அத்தகைய இறை நியதியை உண்மைப்படுத்திய மற்றுமொரு வரலாற்று நிரூபணமாகும். இந்தப் பேருண்மையை செயலமர்வில் கலந்து கொண்ட இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

செயலமர்வின் அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற முதல் அமர்வில் கலாநிதி ராஷித் அல்கன்னூஷி அவர்கள் அமர்வின் பிரதான உரையை நிகழ்த்தினார். “இடை நகர்வுக் காலம்: சவால்களும் முடிச்சுக்களும்” என்ற தொனிப் பொருளில் அவரின் உரை இடம்பெற்றது அவர் தனது உரையில்,

201210112111463580 2“நடைபெற்று முடிந்தது உண்மையில் ஒரு புரட்சியாகும். அது ஒரு சாதாரண மாற்றமல்ல. எமது பிராந்தியம் இதற்கு முன்னர் பல்வேறு பாரிய நிகழ்வுகளை சந்தித்துள்ளது. எனினும், மாற்றங்கள் நிகழவில்லை. அமைதியாக உள்ளிருந்து சமூகத்தை மாற்றும் முயற்சிகள் நடை பெற்றன. தேர்தல்களில் களமிறங்கி மாற்றங்களைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இறுதியில் அநீதியைப் பொறுக்க முடியாத மக்கள் வீதியில் இறங்கி மாற்றத்திற்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மேற்கொண்ட அமைதியான மக்கள் புரட்சி, 50 வருடங்களுக்கு மேலாக பிராந்தியத்தில் நிலவிய அடக்குமுறை ஆட்சிகள் பலவற்றையும் அவற்றின் சூத்திரதாரிகளையும் அள்ளிச் சென்று விட்டது. பிராந்தியத் தில் இன்னும் பல நாடுகளில் புரட்சிகள் தொடர்கின்றன.

“இந்தப் புரட்சிக்கும் வெளிச் சக்திகளுக்கும் எவ்விதத் தொடர்பு மில்லை. வெளிச்சக்திகள் எதுவும் திட்டமிட்டு இந்தப் புரட்சிகளை வழிநடத்தவுமில்லை. புரட்சி என்பது வரலாற்றில் எப்போதுமிருந்து வருகின்ற ஒரு வெளிப்படையாகும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அநீதிகளை வெறுக்கின்றனர். மாற்றத்தில் அவர்கள் நம்பிக்கையிழக்கும்போது புரட்சி தோற்றம் பெறுகிறது.

அத்தகையதொரு புரட்சி மூலம் அரபு முஸ்லிம்கள் ஒரு புதிய தசாப்தத்தைத் தோற்றுவித்துள்ளனர். அமெரிக்க, இஸ்ரேல் யுகத்துக்கு வெளியே ஒரு புதிய யுகத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அது மட்டுமல்ல, இந்தப் புரட்சியின் கர்த்தாக்கள் மக்களே. எந்தக் கட்சியும் எந்த இயக்கமும் இந்தப் புரட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இந்தப் புரட்சியின் விளைவாக வருகின்ற நன்மைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்த உம்மத்தின் பாரிய பிரச்சினைகளில் இந்தப் புரட்சிக்கு ஒரு மகத்தான பங்களிப்பு இருக்க வேண்டும். அவற்றில் முதன்மையா னது பலஸ்தீன் பிரச்சினையாகும்…

புரட்சி ஒவ்வொரு பிரஜையினதும் தன்மானத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். அரசுடன் மக்களது உறவைப் பலப்படுத்த வேண்டும். அரசினது கவனத்தை ஈர்க்கும் மையப் பொருளாக மக்கள் திகழ வேண்டும். சட்டத்தின் ஆட்சியொன்றை அமைப்பதிலும் அதனை மேம்படுத்திச் செல்வதிலும் மக்கள் திருப்தியுறும் நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக திணிப்புகள் இடம்பெறுவதை ஆதரிக்க முடியாது.

அரபு வசந்தத்தின் பின்னர் தேர்தல்களில் இஸ்லாமியவாதிகள் வெற்றிபெற்றுள்ளனர். இது இயல்பானதே. மேலும் இறை நியதியின்பாற்பட்ட ஒன்றாகவும் அது இருக்கின்றது. காரணம், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பாரிய அநீதிகளுக்குட்படுத்தப்பட்டவர்கள் இஸ்லாமியவாதிகளே. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், சித்திரவதைகளுக்குட்பட்டார்கள்.

இன்று ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அவர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு முன்னால் பாரிய சவால்கள் இப்போதிருக்கின்றன. இந்த இடை நகர்வுக் காலத்தில் அவர்கள் அனைத்துத் தரப்பினரிடையேயும் உடன்பாடான, இணக்கமான ஒரு சூழலைத் தோற்றுவிக்க வேண்டும். ஜனநாயகம் என்பது, ஆட்சி ஒரு சாராரிடமிருந்து முற்றிலும் இணக்கமற்ற ஓர் எதிரணிக் குச் செல்வதல்ல. மாறாக ஓர் அணியிடமிருந்து அவர் களை ஒத்த மற்றோர் அணிக்கு ஆட்சி மாறுவதையே ஜனநாயகம் என்று அவர்கள் அர்த்தப்படுத்த வேண்டும். இணக்கமான இத்தகையதொரு சூழலை அவர்கள் தோற்றுவிக்கத் தவறினால் புரட்சியின் விளைவு நாட்டை சர்வதிகாரத்திலிருந்து குழப்பத்தின்பால் இட்டுச் சென்றதாகவே அமையும்.

காரணம், புரட்சியின் பின்னர் அதிகாரம் மக்கள் கையிலிருந்து நழுவி விட்டது என்று மதசார்பின்மையை ஆதரிப்போர் நம்புகின்றனர். இஸ்லாமியவாதிகளில் ஒரு பகுதியினரோ மக்களுக்கு ஆட்சியைத் தீர்மானிக்கும் உரிமையே இல்லை என்று நம்புகின்றனர். மறுசீரமைக் கப்பட்ட ஜனநாயக வழிமுறைகள் நவீன காலத்தில் ஓர் அரச நிர்வாகப் பொறிமுறையாக அமையலாம் என்பதை அவர்கள் இன்னும் ஜீரணித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இஸ்லாமியவாதிகள் இணக்கமான சூழலை உருவாக்கத் தவறினால் முன்னெடுப்புக்கள் தோல்வி யடையும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்… என்றார்.

இவ்வாறு தனது உரையை நிகழ்த்திச் சென்ற நஹ்ழா கட்சியின் தலைவர், “அரபு வசந்தம், இது வரையில்லாத புதிய அத்தியாயங்களை உலக அரங்கில் துவக்க வேண்டும். மேற்கும் அரபுலகமும் போலியான முகங்க ளோடன்றி பெறுமானங்களின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று கருமமாற்றும் சூழலையும் தோற்றுவிக்க வேண்டும்” என்று கூறினார்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் நஈம் ஹன்னா அவர்கள் பேசுகையில், “இஸ்லாமிய வாதிகள் ஜனநாயகத்திற்கு புதிய வரைவிலக்கணம் ஒன்றை வரைய வேண்டும். அவர்கள் அதனூடாக புதியதோர் ஆட்சி நடைமுறையை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். அத்துடன் மக்கள் புரட்சிக்கு அடிப்படைக் காரணியாக இருந்த பொருளாதார சீர்கேடுகள் உரிய விதத்தில் தீர்க்கப்படாவிட்டால் புரட்சி அர்த்த மற்றதாகி விடும்” என்றார்.

அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் சிந்தனையாளர்களுள் ஒருவரான கலாநிதி பஹ்மி ஹுவைதி அவர்கள் உரையாற்றும்போது,

“…பிரஜை, பிரஜா உரிமை என்பவை எமது பாரம் பரியத்தில் இல்லாத புதிய பிரயோகங்களாகும். இந்த உரிமை அனைத்து சமூக அரசியல் விவகாரங்களிலும் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் ஒரு மனிதனுக்கு வழங்குகின்றது. குர்ஆன் கூறும் மனித உரிமைகள், ஒவ்வொரு தனிமனிதனுக்குமுள்ள அந்தஸ்துகள், அவனது தன்மானம் என்பன பற்றி நாங்கள் நீண்ட காலம் பேசி வந்தாலும் நவீன பிரயோகங்கள், அவற்றின் அர்த்தங்கள், குர்ஆனின் பார்வையில் அவற்றின் பொருத்தப்பாடுகள் பொருத்தமின்மைகள் பற்றி நாம் ஆராய வேண்டும். அல்குர்ஆனின் பார்வை மற்றும் இஜ்திஹாத், வரலாற்று அனுபவங்கள் என்பவற்றினூடாக நாம் இவற்றை நோக்க வேண்டும்.

நாங்கள் நீண்டகாலம் பேசிவந்த சிந்தனைகளுக்கும் இன்றைய களத்தில் நாம் முன்னெடுக்கும் நடைமுறைகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு சீரிய நடை முறைத் திட்டத்தை வகுக்குமாறு எம்மை நிர்ப்பந்திக்கிறது.

எமது சமூகம் நீண்ட காலமாக அரசியலில் இருந்து துண்டாடப்பட்டுத் தூர விலகி இருந்த காரணத்தால் நாங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் அனுபவத்தை இழந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு மகனும் அடுத்த பிரஜையோடிணைந்து சமத்துவமாக செயல்படுவது அவசியம். அதற்கான ஒரு செயற்திட்டத்தையும் இராஜதந்திர அணுகுமுறைகளையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

நாங்கள் உண்மையில் கற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாமியவாதிகளிடம் ஒன்றும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அது போலவே மதசார்பற்றவர்களிடமும் ஒன்றும் இல்லை என்பதே உன்மை. நாம் புதிய சூழலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்…” என்றார்.

தொடர்ந்தும் பேசிய கலாநிதி பஹ்மி ஹுவைதி அவர்கள், “எகிப்தியப் புரட்சி இஸ்லாமியப் புரட் சியல்ல. பலஸ்தீன் போராட்டம் இஸ்லாமியப் போராட் டமுமல்ல. இவையனைத்தும் மக்கள் போராட்டமே. இது ஒரு தேசத்தின் போராட்டம் என்று சொல்வது போராட்டத்தைக் கொச்சைப்படுத்த மாட்டாது. அரபுப் புரட்சி முழுக்க முழுக்க அரபுப் புரட்சியே. அதன் நோக்கம் தேசத்தையும் மக்களையும் சர்வதிகாரிகளிடமிருந்து மீட்பதும் இழந்த கண்ணியத்தை மீளப் பெறுவதுமாகும். இஸ்லாமியவாதிகள் அந்தப் புரட்சியின் பங்காளிகளாக இருந்தார்கள். புரட்சியைப் பொறுத்தவரை அவர்களது நிலை மக்களது நிலையை ஒத்ததாகும். அவர்கள் இதனை உணர வேண்டும்…|| என்றார்.

அரபுப்புரட்சிக்கு இவ்வாறு விளக்கமளித்த இஸ்லாமிய இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் புரட்சியை நடத்திக் காட்டிய பெருமையை ஒரு சாதனையாகப் பேசுவதை விடுத்து, புரட்சிக்குப் பின்னரான சவால்களை இஸ்லாமியவாதிகள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதிலேயே தமது கவனத்தைக் குவித்திருந்தார்கள். புரட்சியின் பின்னர் இஸ்லாமிய வாதிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அமர்த்தப்பட்டிருப்பதை நியாயப்படுத்திய அவர்கள், தற்போது சுமந்திருக்கும் பொறுப்பு அரபுப் புரட்சிக்கு முன்னர் சுமந்திருந்த பொறுப்பை விடப் பாரியது என்பதை உணர்த்தினார்கள்.

இயக்கப் பொறுப்புகளிலிருந்து தேசத்தின் பொறுப்புகள் நோக்கி நகர்ந்திருக்கும் இஸ்லாமியவாதிகள் பேசும் பாஷையிலிருந்து ஆளும் பாராளுமன்றம் வரை அனைத்திலும் அனுபவம் பெற வேண்டும் சவால்களைப் படிக்க வேண்டும் புதிதாக சிந்திக்க வேண்டும். உலகம் இதுவரை இஸ்லாமியவாதிகளைப் பார்த்த பார்வையை மாற்றிக் கொள்ளும் வகையில் இப்போது அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். உலகம் பேசிக் கொண்டிருக்கும் ஜனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம், சுதந்திரம் என்பவற்றுக்கு புதிய வரைவிலக்கணங்களை வரைந்து உலகம் வியக்கத்தக்க வகையில் அவற்றை அமுல்படுத்த வேண்டும்.

எனவே, பாரிய சவால்கள் முன்னால் இருக்கின்றன. மன்னராட்சிகளிலும் சர்வதிகாரிகளது ஆட்சிகளிலும் உலகம் கடந்த 50 வருடங்களாக கண்டு வந்த இஸ்லாத்தை சுதந்திரமான ஒரு சமூகக் கட்டமைப்பினுள் 21ஆம் நுற்றாண்டின் தரத்தை எதிர்கொள்ளும் வகையில் அமுல் நடத்திக் காட்டுவது இஸ்லாமியவாதிகளுக்கு முன்னால் தற்போது எழுந்துள்ள பாரிய சவாலாகும். இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றால்தான் அரபுப் புரட்சி இஸ்லாமியப் புரட்சியாக மாறும். இந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் போனால் அல்லாஹ் அதனை நாடாதிருக்க வேண்டும். அரபுப் புரட்சியை இஸ்லாமியவாதிகள் வீணாக்கி விட்டார்கள் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். அல்லாஹ் இஸ்லாமியவாதி களுக்கு உதவி செய்வானாக!

20121011216932734 20இந்த உண்மையை இஸ்லாமிய இயக்கங்களும் அதன் தலைவர்களும் நன்குணர்ந்துள்ளார்கள் என்பதை கத்தார் செயலமர்வு தெளிவாக உணர்த்தியது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். அவர்கள் இந்தப் பேருண்மையைப் புரிந்திருப்பது மட்டுமல்ல. அதனை வெளிப்படையாக சர்வதேச அரங்கில் முன்வைக்கிறார்கள். தங்களது யதார்த்தத்தையும் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான துணிவு மற்றும் செயற்திட்டம் என்பவற்றையும் அவர்கள் பிரஸ்தாபிக்கிறார்கள். எனவே, இன்ஷா அல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை செய்து காட்டுவார்கள்.

பிறருக்குக் காட்டுவதற்காக தாம் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுபவர்கள் வாயால் சாதிக்குமளவு நடைமுறையில் எதனையும் சாதிக்க மாட்டார்கள். அத்தகைய அசுத்தத்தை அரபு இஸ்லாமிய இயக்கத் தலைவர்களிடம் காணவில்லை. கத்தார் செயலமர்வு தந்த திருப்தியில் அது முதன்மையானது. அல்லாஹ் இன்றைய அரபுப் புரட்சிகளை உலகம் வியக்கும் நாளைய இஸ்லா மியப் புரட்சிகளாக ஆக்கி வைப்பானாக!

அதற்கான சான்றுகள், அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. குறிப்பாக எகிப்தின் புரட்சி நல்ல பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இஸ்லாமிய உலகில் எகிப்தின் முக்கியத்துவம் வரலாறு நிரூபித்து வந்த ஒன்றாகும். அதனை நாளைய வரலாறும் இன்ஷா அல்லாஹ் நிரூபிக்கும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?

முதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமைக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.

கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.

வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.

என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.

சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்…

நன்றி- பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

தீனுல்இஸ்லாம்- இன்றைய இளம்பெண்கள்…

Posted: November 5, 2012

ஏற்கனவே ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

நன்றி- பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

தீனுல்இஸ்லாம்: பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்….

Posted: November 4, 2012

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
 1. பேசினால் பொய் பேசுவான்,
 2. வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
 3. நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.
2) பொய்யின் வகைகள்: –
அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: –
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: –
‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: –
“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: –
“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.
“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)
இ) கணவுகளில் பொய் கூறுவது: –
தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042
ஈ) கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: –
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: –
யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: –
“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.
அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: –
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்)
அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-
“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.
ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: –
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: – “யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு
எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: –
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)
3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: –
உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.
அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: –
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.
அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: –
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: –
இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: –
(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)
ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்¢ பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: –
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: –
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: –
1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
 1. ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
 2. யுத்தத்தின் போது
 3. மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்….

Posted: November 2, 2012

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக….

ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881).

இறைவன் தனது அருள்மறையாம் திருக் குரானில் ஜும்ஆவின் அவசியத்தையும் அதன் மேலான பலன்களையும் கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறான்.

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(9)

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (10)

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11) (அல்-குரான் 62: 9,10,11).

ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)

ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930).

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)

தீனுல் இஸ்லாம்- வாழ்வை ஒழுங்கமைப்போம் பணிக்குப் பங்களிப்போம்!

Posted: November 1, 2012

Life Style என்பார்கள். Style லே இல்லாத Life ஐயும் இவ்வாறு சொல்லிக் கொள்வதில் பலருக்கு மகிழ்ச்சி. அதிகமானோரின் வாழ்க்கையில் இந்த Life Style ஐத் தீர்மானிப்பது பொழுது போக்குகள்தாம். அவற்றோடு, தொழிலும் வருமானங்களும் அவரவரது வாழ்க்கைத் தரங்களுக்கேற்ப பின்பற்றப்படும் நுகர்வுக் கலாசாரமும் இந்த Life Style ஐத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காலையில் எழுந்து பரபரப்பாகத் தயாராகி தொழிலுக்குச் சென்று, உழைத்துக் களைத்து, சோர்வுடன் மாலை வீடு வந்தால் உறவுகள் வரண்டு விடாமல் நனைத்துக் கொள்வதற்குக் கூட ஆர்வமில்லை. அவர்கள் வீட்டில் இருப்பவர்கள்தானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம். களைத்துப் போன உடம்புக்கும் சோர்வுற்ற உள்ளத்துக்கும் ஒரு சிலிர்ப்பை வழங்கும் பொழுதுபோக் கொன்றில் கவனம் செலுத்துவோம் என டீவிக்கு முன்னால் அமர்ந்து விடுகிறார்கள். இவற்றுக்கிடையில் நண்பர்கள், உறவினர்களின் வருகை அல்லது வைபவங்கள், வார இறுதியில் ஒரு Outing, களியாட்டங்கள், விழாக்கள், பெருநாட்கள், என Life Style படும் பாடு…?!

ஒரு பெரு வாழ்வு வாழ்கிறோம் என்றே நினைத்து விடுகிறார்கள். இதற்கு நிகரான ஒரு வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைப்பது பெரும் பேறு என்று கருதுகிறார்கள்.

இந்த வாழ்க்கையில் பகட்டும் பரபரப்பும் தடல்புடல்களும் ஒய்யாரங்களும் செலவினங்களும் கவர்ச்சிகளும் பவனிகளும் பரிவாரங்களும் பொழுது போக்குகளும் நிறைந்தோ அல்லது அவரவர் வசதிக்கேற்ப குறைந்தோ காணப்படலாம். இவற்றோடு இந்தக் களேபரத்துக்கு மத்தியில் தொழுகை, நோன்புகள், ஹஜ், உம்ராக்களும் இடம்பெறுகின்றன.

எனினும், இந்த வாழ்க்கையில் கொள்கைகளில்லை இலட்சியங்களில்லை. பணிகள் இல்லை அவற்றுக்கான திட்டங்களில்லை. இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாடு குறித்து தெளிவான தீர்மானங்கள் இல்லை. சமூகத்தின் தற்போதைய நிலை பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விழிப்புணர்வில்லை.

இத்தகைய வாழ்வு ஒரு பெரு வாழ்வா? இந்த வாழ்க்கையில் மயங்கிப் போயிருப்பது ஒரு சுகமா? இது ஒரு விடுதலையா?

இல்லை, இவ்வாறானதொரு வாழ்வை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தரவில்லை அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்து காட்டவுமில்லை. இறுதித் தூதரின் வாழ்க்கைக்கும் நாங்கள் மேலே கண்ட Life Style க்குமிடையிலான இடைவெளி பாரியது. ரமழான் வருவது இந்த Life Style இல் எந்த மாற்றத்தையும் செய்யாமல் பகலில் வழமையாக உட்கொண்ட உணவுகளை இரவில் உட்கொள்ள வைப்பதற்கல்ல. வழமையான இரவுகளை விட ரமழான் இரவுகளை சிறிது மாற்றி விட்டுச் செல்வதற்காக அல்ல.

ஆக, நோன்பு நோற்பவர்கள் தங்களது Life Style ஐயே மாற்ற வேண்டும். ரமழானின் பொழுதுகளை வழமையான பொழுதுகளை விட சிறிது மாற்றுவதல்ல ரமழானின் வருகைக்கான நோக்கம் என்பதை உணர வேண்டும். இதற்காக அவர்கள் தமது வாழ்வை ஒழுங்கு படுத்த வேண்டும். வாழ்வு பணியாகவும் பணி வாழ்வாகவும் மாறுமளவு இஸ்லாத்தின் Life Style ஐ நோக்கி அவர்கள் நகர வேண்டும்.

வாழ்வை ஒழுங்குபடுத்துவோம் என்றவுடனே இன்றைய முஸ்லிம்களுக்கு எழும் ஒரு சிந்தனையையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். சமூகம் கருதும் ஒரு சில நற்செயல்களை செய்வதும் சமூகம் வெறுக்கும் ஒரு சில பாவங்களை விடுவதும்தான் வாழ்வை ஒழுங்குபடுத்துதல் என இதற்குப் பொருள் கொள்கின்றனர். வாழ்வை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சத்தையும் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்வது கடமையே. எனினும், வாழ்வை ஒழுங்குபடுத்துதல் என்ற எண்ணக்கருவில் இடம்பெறும் ஒரே அம்சம் அதுவல்ல. வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்கு இவ்வாறானதொரு பொருளைக் கொண்டால் நாம் ஏற்கனவே கூறிய Life Style அதுவாகவே இருக்க, அதனோடு ஒரு சில நற்செயல்கள் ஒட்டிக் கொள்ளும் மாற்றத்தையே அதிகபட்சம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். முழுமையானதொரு மாற்றம் வாழ்க்கையில் ஒருபோதும் ஏற்பட மாட்டாது.

“வாழ்வை ஒழுங்குபடுத்துதல்” எனும்போது பின்வரும் அம்சங்கள் அதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் ஒன்றையேனும் தவற விட்டால் வாழ்வை ஒழுங்குபடுத்தும் முயற்சி தோல்வியடையலாம்.

அ. அவற்றுள் முதன்மையானது சிந்தனையை ஒழுங்குபடுத்துவதாகும். சிந்தனையில் மூன்று விடயங்கள் ஆழமாகவும் ஐயங்களுக்கிடமின்றியும் பதிந்து விடுவதே சிந்தனையை ஒழுங்குபடுத்துவதன் ஆரம்பம். அவையாவன:

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கையின் நோக்கம்

வாழ்க்கையின் பொறுப்புக்கள்

*வாழ்க்கையின் அர்த்தம்

சொந்த இடம் சுவனம் வந்த இடமே உலகம். மீண்டும் சொந்த இடம் செல்வதற்கான நிபந்தனைகளை விதித்து மனிதனை இப்பூமியில் அல்லாஹ் தனது பிரதிநிதியாக ஆக்கியிருக்கிறான். அவன் சொந்த இடம் செல்வதற்குரிய பாதையையும் காட்டியுள்ளான். அப்பாதையை தனது அறிவுப் பார்வையால் துல்லியமாகப் பார்த்துப் பயணிப்பதற்காக பகுத்தறிவும் வேத அறிவையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த அறிவுகள் இரண்டையும் உரிய முறையில் பயன்படுத்தத் தவறினால் ஆசைகளும் சொந்த விருப்பு, வெறுப்புகளும் அவனை வழிநடத்தத் துவங்கும். அது அவனை வேறு ஒரு பாதையில் கொண்டு போய் தோல்வியின் வாசலை (நரகத்தை) அடையச் செய்யும். அப்போது அவன் தனது வாழ்க்கையை இழந்து விட்டேன் எனக் கைசேதப்படுவான்.

இதுவே வாழ்க்கையின் அர்த்தமாகும். இந்த அர்த்தத்தை ஆழமாக விளங்கி மனதில் கொள்ளும்போது சிந்தனை ஒழுங்குபடுத்தப்படுகிறது.

*வாழ்க்கையின் நோக்கம்

சிந்தனையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அம்சம் வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவாக உள்ளத்தில் பதியச் செய்வதாகும்.

தன்னைப் படைத்தவனைத் திருப்திப்படுத்த வேண்டும் அவனது அன்பைப் பெற வேண்டும். அவனை தனது இரு கண்களாலும் காணும் இன்பத்தைப் பருக வேண்டும் அதற்காக அவனைச் சார்ந்து நின்று அவனையே வணங்கி வழிபட வேண்டும். அவனல்லாத ஒரு சக்தியை தனது விடிவுக்கான, விடுதலைக்கான ஒரு சக்தியாக நினைத்தும் பார்க்காதிருக்க வேண்டும். இதுவே வாழ்வின் நோக்கம்.

*வாழ்க்கையின் பொறுப்புக்கள்

வாழ்க்கையின் உலக நோக்கங்கள் எனவும் இதனைக் குறிப்பிடலாம். உலகை அல்லது உலகின் முடியுமான ஒரு பகுதியை நன்மைகள் நிறைந்ததாகவும் பாவங்கள் குறைந்ததாகவும் நீதிமிக்கதாகவும் அனைத்து மனிதர்களும் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என்ற வேறு பாடின்றி நல்வாழ்வு வாழ்பவர்களாகவும் மனித குலம், சாதி, வர்க்க, மத, அதிகார பேதங்களின் அடக்குமுறைகளுக்குட்படாமல் சுபிட்சம் பெறுவதற்காகவும் தங்களை அர்ப்பணித்து உழைத்தல்.

இத்தகைய சிந்தனைகள் தெளிவாகவும் ஆழமாகவும் உள்ளங்களில் பதியாத ஒருவரின் சிந்தனை ஒழுங்கமையமாட்டாது. அதன் விளைவாக அவரது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதும் சிரம சாத்தியமானதே.

இத்தகைய சிந்தனையைத் தெளிவாகப் பெற்ற ஒருவரை அந்த சிந்தனைக்காக செயல்படுபவராகப் பயிற்றுவிப்பதே மனித வாழ்வை ஒழுங்குபடுத்துவதற் கான இரண்டாவது அம்சமாகும்.

இதில் இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

*மனப்பாங்கு மாற்றம்

*செயற்திறன்

*மனப்பாங்கு மாற்றம்…

மனப்பாங்கு மாற்றத்தில் முக்கியத்துவம் பெறுவது உயர்ந்த குணங்களாகும். அன்பையும் உயர்ந்த பண்பையும் அணிகலனாகப் பெறாதவர்களால் தங்களது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியாது. எந்தவொரு கடினமான சூழலிலும் இழக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பெறுமதி மிக்க பொக்கிஷமே அழகிய நற்குணங்கள் என்பதை உணருமளவு ஒருவர் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லாதபோது அவரது வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்படுவது எப்படிப் போனாலும், குழப்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீள முடியாத அவலத்தில் அவர் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.

*செயற்திறன்,,

செயலூக்கமும் தன்னார்வமும் கொண்ட நிலையில் எடுத்த கருமத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் வளர்க்கப்படுவது வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கிய அம்சமாகும்.

எனினும், இதற்கு மாறாக எமது சமூகத்தில் பிறர் செய்யும் ஆக்கப் பணிகளைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அதனைச் சாதிக்கும் நோக்கில் கீழ்த்தரமான நயவஞ்சகக் குணங்களை வளர்க்கிறார்கள். இரண்டுக்கும் சமூகத்தில் அமோக வரவேற்பிருக்கின்றது. இரண்டுக்குமிடையில் இருப்பவர்களோ எமக்கேன் இந்த வம்புகள் என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். இத்தகையவர்கள் தங்களையும் தங்களது குடும்பத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குக் கூட முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை. காரணம், ஒழுங்குபடுத்துவதற்கான சாதனங்கள் இவர்களிடம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது என்பது ஆடையையும் தோற்றத்தையும் ஒழுங்குபடுத்துவது அல்லவே!

இ. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் பங்களிப்புச் செய்யும் மூன்றாவது காரணி தலைமைத்துவமாகும். “ஆ” பகுதியில் கூறப்பட்ட பயிற்சிக்குட்படுத்தப்பட்டவர்களை இஸ்லாத்தின் இலட்சியங்களின்பால் வழிநடத்தும் ஒரு தலைமைத்துவம் பயிற்றப்பட்டவர்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்றது. தலைமைத்துவத்தை நன்கு விளங்கி அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒருவர், வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் ஒழுங்குகளைப் பேணப் பழகுகின்றார்.

அது வெறும் அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கான ஒழுங்கல்ல. ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கைதான் வாழ்க்கை. அது ஒழுங்குபடுத்தப்பட்டால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதனோடு கிடந்து வாழ்ந்து மடிந்து போவதுதான் அவரின் பிறந்த நோக்கம் என்றே கூறி விடலாம்.

எனினும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான முதலிரண்டு அம்சங்களோடு தலைமைத்துவமும் சேர்ந்தால் ஒரு மனிதனின் வாழ்வு பணியாகவே மாறிவிடுகின்றது. அல்லது பணிக்குரிய வாழ்வை நோக்கி அவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றான். காரணம், இப்போது அவன் “தன்னிலை” எனும் ஒருமையிலிருந்து “சமூக நிலை” எனும் பன்மைக்குள் நுழைகின்றான். அதனால், அவனது வாழ்வு சமூக வாழ்வாக மாறுகின்றது. அவன் இப்போது தனது குடும்பத்தின் நலனுக்காக உழைப்பது போல சமூகத்தினதும் நாட்டினதும் நலனுக்காக உழைக்கும் உழைப்பாளியாக மாறுகின்றான். அல்லாஹ்வின் தூதர் உருவாக்கிய மனிதர்களின் Life Style இப்படித்தான் இருந்தது.

தெளிவான கொள்கைகளினதும் இலட்சியங்களினதும் அடிப்படையில் தலைமைத்துவத்தோடும் கட்டுப்பாட்டோடும் இவ்வாறானதொரு சமூக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், இந்த வாழ்க்கைக்குப் பாதிப்பில்லாத வகையில் தங்களது தொழில், வருமானம், செலவினங்கள், வசதிகள், பழக்கவழக்கங்கள், உறவுகள், வியாபாரம், வைபவம், பயணங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார்கள். அதனால் அவர்களது வாழ்வு பணியாகின்றது. பணி வாழ்வாகின்றது.

கொள்கையையும் இலட்சியங்களையும் இழந்தவர்கள் அல்லது வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தொலைத்தவர்கள் தலைமைத்துவமும் கட்டுப்பாடும் இல்லாதவர்கள் வாழ்க்கையை வேறாகவும் பணியை வேறாகவும் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களுக்குப் பணி என ஒன்று இல்லை. சிலபோது அவ்வாறு ஒன்று இருந்தாலும் பணிக்காக வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கை பாதிக்கப்படாமலிருப்பதற்காக பணியை முன் பின் ஆக்கிக் கொள்வார்கள்.

அவ்வாறாயின் கொள்கையுமில்லை இலட்சியமுமில்லை வாழ்க்கையின் அர்த்தமோ நோக்கமோ புரியவுமில்லை. வழிநடத்துவதற்கு ஒரு தலைமைத்துவமுமில்லை கட்டுப்பாடுமில்லை என்ற நிலையில் ஒருவரது வாழ்வு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இஸ்லாத்தின் பார்வையில் அதை நினைக்கவே பயமாக இருக்கிறது. இத்தகையோரின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு ரமழானின் இரவு, பகல் மாற்றங்கள் போதுமா?

இந்த ஆக்கத்தில் கூறப்பட்ட அனைத்து அடிப் படைகளினூடாகவும் தங்களது வாழ்வைப் பணியாகவும் பணியை வாழ்வாகவும் ஒழுங்குபடுத்திக் கொண்ட ஒரு சமூகத்திற்குத்தான் அல்லாஹ் 15 வருடங்களின் பின் நோன்பைக் கடமையாக்கினான். நோன்பு அந்த ஒழுங்கு படுத்தப்பட்ட வாழ்வை மேலும் சீராக்கி, பண்படுத்தி, பக்குவப்படுத்தியது.

இன்றோ ஒழுங்குபடுத்துவதற்குரிய எந்த ஏற்பாடு மில்லாத ஒரு சமூகத்தில் ரமழான் வந்து போகிறது. ரமழானின் வரவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஷவ்வால் சொல்லும்.

யார் வாழ்வை ஒழுங்குபடுத்தினாரோ அவர் பணியின் பங்காளராக மாறலாம். ரமழான் அவரைப் புடம்போடும். யார் வாழ்வை ஒழுங்குபடுத்தவில்லையோ அவருக்கும் பணிக்கும் சம்பந்தமில்லை. ரமழான் அவர் மீது உரசிவிட்டுப் போகும், அவ்வளவுதான்!

தொகுப்பு…

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்.

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

தீனுல்இஸ்லாம்- முன்மாதிரி முஸ்லிம்…

Posted: October 31, 2012

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்…
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)
இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்
உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார். அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)
ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக எற்று பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.
தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்
ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே. அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்; கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.
அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்
உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே.அவருக்கு மகிழ்ச்சி எற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்.அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் எற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.” (ஸஹீஹுல் புகாரி)
இதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாஹ் விதித்த விதியை ஈமான் கொள்வது ஈமானின் முக்கியமான பகுதி என்பதை உறுதி கொண்டிருப்பதுதான். அவருக்கு எது கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்கிறதோ அது அவரை விட்டுத் தவறிவிடாது. எனெனில், அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டது; அதை எதிர்கொள்வதை தவிர்த்திட முடியாது. அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மகத்தான நற்கூலியைப் பெற்றுக்கொள்கிறார். அல்லாஹ்விடம் ஈடேற்றமடைந்த, அடிபணிந்த மூமின்களின் பட்டியலில் இடம் பெறுவார்.
இவ்வாறாக அவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது.மகிழ்ச்சியில் உபகாரியான, மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். துன்பத்தில் அல்லாஹ்வின் அணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையே.அல்லாஹ்வையே எதிர்நோக்குவார்
சில சந்தர்ப்பங்களில் இறையச்சமும் பணிவும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு மறதியின் நிழல்கள் அவரது இதயத்தை மூடிக்கொள்ளும். அதனால் அவரது பாதங்கள் தடுமாறும், அல்லது இறையச்சமும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு சற்றும் பொருத்தமற்ற குறைகள் எதேனும் ஏற்படும். எனினும், அவர் வெகு சீக்கிரத்தில் தனது மறதியிலிருந்து மீண்டு, தடுமாற்றத்தை சரி செய்து, நிகழ்ந்த தவறுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார். அஞ்சி மன்னிப்பு கோரியவராக அபயமளிக்கும் தனது இரட்சகனின் பாதுகாப்பின் நிழலில் எதுங்கிக் கொள்வார்.
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் உசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (அல்குர்அன் 7:201)
அல்லாஹ்வின் நேசமும் அவனது அச்சமும் நிரம்பிய இதயத்தில் மறதி நீடிக்காது. அவனது ஏவலையும் நேர்வழியையும் புறக்கணிக்கும் இதயங்களில்தான் மறதி நீடிக்கும். அல்லாஹ்வுக்கு அடிபணிதல், மன்னிப்புக் கோருதல் மற்றும் தவறுகளுக்கு பச்சாதாபப்படுவதற்காக எல்லா நிலைகளிலும் உண்மை முஸ்லிமின் இதயம் விரியத்திறந்திருக்கும்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்
முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும்.மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.” (ஸூனனுத் திர்மிதி)
இந்நிலையில், முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அவரது பார்வையில் நேரிய, நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான, பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல்; சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் முஸ்லிமிடம் எற்படாது. ஏனெனில், அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளவராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.
சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம், கடைவீதி, கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மாட்டார்கள். இதற்குக் காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையே.
அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம்களிடையே காணப்பட்டாலும் பெயரைத் தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.
கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்
உண்மை முஸ்லிம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும். அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவார். எனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும்; அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.
இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், “அமல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “தொழுகை, அது உரிய நேரத்தில்(நிறைவேற்றுவது)” என்று கூறினார்கள். “”பிறகு என்ன?” என்றேன். நபி (ஸல்)அவர்கள், “பெற்றோருக்கு உபகாரம் செய்தல்” என்று கூறினார்கள். “பிறகு என்ன?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்பை எற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார்.நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.
தொழுகை, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம் தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்தத் தூய்மையான நீரால் முஸ்லிம் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: “உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் எதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “எந்த அழுக்கும் (அவர் மீது) இருக்காது” என நபித்தோழர்கள்கூறினர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக்கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர், உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஒடும் அழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:
பகலின் இரு முனைகளாகிய காலை, மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்அன் 11:115)
“”அம்மனிதர் (இந்த வசனம்) எனக்கு மட்டுமா?” என்றார். நபி (ஸல்)அவர்கள், “எனது உம்மத்தினர் அனைவருக்கும் (பொருந்தும்)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத் தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜுமுஅவிலிருந்து மறு ஜுமுஅவரை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: “”எந்தவொரு முஸ்லிம் அவருக்கு பர்ளான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உளூச்செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும். இது எல்லா காலத்திற்கும் உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது. முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்.
அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி
தமிழில் – கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.
வெளியீடு – தாருல் ஹுதா. சென்னை

னுல்இஸ்லாம்- அல்லாஹ்வின் பரகத்..

Posted: October 30, 2012 in

*பரகத் என்றால் என்ன?
அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது.பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும்.
உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை வைத்து அதைவிட அதிகமான சம்பாதித்தால் அதை வைத்து என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 5000 ருபாவை வைத்து செய்வோம்.நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.
இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்.இதற்கு காரணம் அல்லாஹ்வின் மறைமுகமான அருள்இல்லாதது தான்.
*பரகத்தின் பலன் என்ன?
நம்முடைய பொருளாதாரத்தில் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் கிடைக்கும் என்று நம்பினோம் என்றால் இன்று நடக்கின்ற ஏராளமான தவருகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதாவது நம்மில் அதிகமானவார்கள் வட்டி வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் தங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் என்பதற்குத்தான். நாம் சம்பாதிக்கும் அளவு குறைவாக இருந்தாலும் சரி அல்லாஹ் நம்முடைய பெருளாதாரத்தில் பரகத்தை வழங்குவான் என்று உருதியாக நம்பினால் எவறும் வட்டி வாங்க மாட்டார்கள்.அதிகமானவார்கள் வியாரபரத்தில் கலப்படம் செய்வது அடுத்தவர்களை எல்லாம் ஏமாற்றுவதற்கு காரணமும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.அனால் அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான் என்றநம்பிக்கை இருந்நால் நாம் இவ்வாறு தவருகளைச் செய்யமாட்டோம் இஸ்லாம் கூறும் விதத்தில் வாழ்வதற்கு உதவும்.
அதுமட்டும் இல்லாமல் நம்மில் அதிகமானவர்கள் பெறாசை கொண்டு அழைந்து கொண்டு இருக்கிறார்கள்.எவ்வளது சம்பாதித்தாலும் போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அல்லாஹ்வின் பாதையில் கூட செலவு செய்யாமல் இருக்கின்றார்கள்.இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருப்பதற்கு அவன் ஆசைப்படுவான்.மன்னைத்தவிர வேறு எதுவும் அவனுடைய வாயை நிறப்பாது.
அறிவிப்பவர்: அன்ஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6439
தங்கத்தினாலான ஓடை இருந்தும் இன்னொரு ஓடைக்கு அவன் ஆசைப்படுவானாயின் எவ்வளவு பேறாசை உடையவான இருப்பான்.நாம் அல்லாஹ் நம்மக்கு பரகத் செய்வான் என்று சரியாக நம்பினால் எந்த பேறாசையையும் நம்மால் விரட்டி அடிக்க முடியும்.ஏன் என்றால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அல்லாஹ் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொடுப்பான் என்று நம்பிக்கை வரும் போது நாம்பேறாசைப்பட மாட்டேம்.
*பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ..
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்து பரகத்தை வழியுருத்தி துஆ செய்தார்கள்.ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்;டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ
اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனஸ{க்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்.நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிக மாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் அபிவிருத்தி வழங்குவாயாக! என்று பிரார்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6344
நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சேவகர் அனஸ{க்காக பிரார்திக்கும் போதும் பரகத்தை வளியுருத்தி கேட்டுள்ளார்கள்.
ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில் ஒன்று திருமனம் அந்த திருமனத்தில் நபி(ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்துவாதற்காக கற்றுத்தந்த துஆ பரகத்தை வலியுருத்தக்க கூடியதாகத்தான் இருந்தது.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ
إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும்.
நபி(ஸல்)அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால் அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பாயாக! மற்ற ஒரு அறிவிப்பில் “அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி வழங்குவானாக!” என்று மட்டும் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபுஹ {ரைரா) நூல்: திர்மிதி 1011
அந்த சந்தர்பத்தின் போது கூட நபி(ஸல்)அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரகத்தை வலியுருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மதினா நகருக்கு ஒரு பிரத்தியோகமான துஆவைக்கேட்டார்கள் அந்த துஆவும் பரகத்தை வலியுருத்தித் தான் இருந்தது.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ
اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வே! நீ மக்காவுக்கு வழங்கிய பரகத்தைப் போல் இருமடங்கு பரகத்தை மதினாவுக்கு வழங்குவாயாக!
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 1885
இந்த துஆவின் பிரதிபலனை அந்த மக்களும் அனுபவித்தார்கள்.மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வந்த போது மதினாவிலிருந்த மக்கள் தங்கள் சொத்துக்களில் சரி பாதியை மக்கத்து மக்களுக்கு வழங்கினார்கள்.எவ்வளவு அவர்களுடைய செல்வத்தை மக்கத்து மக்களுக்கு வழங்கினாலும் மதினாவில் அதை வழங்கிய மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை.ஏன் என்றால் மதினாவுக்கு நபி(ஸல்)அவர்கள் கேட்ட துஆ பிரதிபலித்தது.பாதியைக் கொடுத்தாலும் மீதியை வைத்து முழுவதும் இருந்தால் எப்படி வாழ்தார்களோ அதே போன்று தான் வாழ்ந்தார்கள்.
*பரகத்தை அடைய என்ன வழி?
#ஹலாலான சம்பாத்தியம்..
எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில் அபிவிருத்தியைப் பெறமுடியும்.
நபி(ஸல்)அவர்கள்; யார் செல்லவத்தை உரியமுறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் கிடைக்கும்;. யார் செல்வத்தை தவரான முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் சாப்பிட்டுவிட்டு வயிரு நிரம்பாதவனைப் போல என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுசயீதில் குத்ரி நூல் : முஸ்லிம் 1742
நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெறவேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது இஸ்லாம் அனுமதித்த முறையில் திரட்ட வேண்டும்.அவ்வாறு நாம் திரட்டினோம் என்றால் அவனின் பரகத்தை அடைய முடியும்.இல்லாவிட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதைக் கொண்டு நம்முடைய தேவைகள் நிறைவடையாது என்பதை இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சாப்பிட்டும் வயிரு நிரம்பாதவர்போல என்று குறிப்பிடுகிறார்கள்.எனவே முதலில் நம்முடைய வாழ்கையில் பரகத் கிடைக்க வேண்டுமானால் நம்முடைய தொழிலில் நாம் இஸ்லாம் தடுத்த விஷயங்களை சேர்த்துள்ளோமா என்பதை கவணிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதிகமானவர்களுக்கு பரகத் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தங்களின் வியாபரத்தில் வட்டி போன்ற மார்கம்அனுமதிக்காத காரியங்களை செய்வதுதான்.நமக்கு குறைவாக கிடைத்தாலும் சரி இஸ்லாம் அனுமதித்த முறையில் தான் கிடைக்கவேண்டும் என்று உருதியாக இருந்தால் அவனுடைய பரகத்தை பெறமுடியும்.
#பேறாசை படாமல் இருத்தல்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான்.
உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன். ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1472
இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் செல்வத்தை பெறாசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெறமுடியும். பெறாசையுடன் செல்வத்தை அடைந்தோமேயானால் பரகத்தை அடையமுடியாது.அதிகமானவர்கள் செல்வத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் இப்படிப்பட்வர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் பரகத்தை வழங்கமாட்டன்.அதுமட்டும் இல்லாமல் சிலர் காசு பணத்துக்காக கொள்கையைவிட்டுக் கூட தடம்புரளக்கூடிய நிலைமையை பார்கமுடிகிறது இப்படி இருந்தால் எப்படி பரகத்தை அடையமுடியும்.
இன்னும் நம்மில் சிலர் ஒரு பொருள் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் அதற்கு சண்டை இட்டுக் கொண்டு தன்மானத்தை விட்டு செல்வதை பார்கலாம்.இவர்களுக்கு தன் மானத்தை விட செல்வம் பெரிதாக தெரிகிறது.இஸ்லாமிய மார்கம் தன்மானத்துடன் வாழச்சொல்லக்கூடிய மார்கம்.தன்மானத்தை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு செல்வத்துக்கு அடிபணிந்து இருந்தால் அல்லாஹ்வின் பரகத்தை எப்படி அடையமுடியும்?சிந்தித்துப்பார்கவேண்டும்! ஏற்றத் தாழ்வை பொருத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய அடியானை அவன் வழங்குவதைக் கொண்டு சோதிப்பான் யார் அவன் பிரித்துக் கொடுத்ததை பொருத்துக் கொள்கிறானோ அவனுக்கு அதிலே பரகத்தை ஏற்படுத்துவான் விசாலமாக வழங்குவான்.யார் அதை பொருத்துக் கொள்ளவில்லையோ அவனுக்கு பரகத்தை வழங்கமாட்டான்.
அறிவிப்பவர்: பனூ சுலைம் குலத்தைச் சார்ந்த ஒருவர். நூல் : அஹமத் 19398
அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைவரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க மாட்டான்.ஏற்றத்தாழ்வுடன் தான் படைத்து இருப்பான். வசதியில்லாதவர்கள் வசதியானவர்களைப் பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மையும் அவர்களைப்போன்று வைக்கவில்லையே என்று நினைத்துவிடக்கூடாது. அதை நாம் பொருத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பொருத்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியும்.அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை குறைவாக கொடுத்து இருப்பான்
அதை நாம் பொருத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய பரகத்தை அடைய முடியாது.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதி குறைந்தவனைத் தான் பார்கவேண்டும் அப்படி பார்பதின் மூலம் நமக்கு செல்வத்தின் மேல் உள்ள மோகம் குறைந்துவிடும்.
நம்மை விட வசதி அதிகமானவனைப் பார்த்தால் அவன் அளவுக்கு நாம் எப்படி வசதியாகுவது என்று தான் நம்முடைய சிந்தனை இருக்குமே தவிர இருப்பதை வைத்து நாம் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம்.இஸ்லாம் இதற்கு அழகிய வழி முறையில் கற்றுத்தருகிறது. நூல்: புகாரி 6490
நம்மை விட குறைந்தவர்களை நாம் பார்த்தோம் என்றால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் அருளை விளங்க முடியும்.நம்மை விட மேலானவர்களை நாம் பார்த்தோம் என்றால் நமக்கு இருப்பது குறையாகத்தான் தெரியும்.குறைவாக இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் இன்று இருக்க வேண்டும். இவ்வாறு நாம் நமக்கு கிடைப்பதை பொருத்துக் கொண்டோமென்றால் அல்லாஹ்வின் பரகத்தைப்பொற முடியும்.
#வியாபரத்தில் உண்மை..
அடுத்து நாம் வியாபாரம் செய்யும் போது இன்னொரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம் அல்லஹ்வின் அபிவிருத்தியைப்பெறமுடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமரிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்சொல்ரியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 2079
வியாபாரம் செய்யும் பொது பொருளை வாங்குபவர் மற்றும் பொருளை விற்பவர் ஆகிய இருவரும் பிரிந்து செல்லும் வரை இருவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அந்ந உரிமையுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.அதிகமான இடத்தில் பொருள் மீது கையை வைத்து விட்டாலே அந்த பொருளை வாங்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவார்கள்.நிர்பந்தத்தின் காரணமாக பொருளை வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.
இதற்கு மார்கத்தின் அனுமதியில்லை அது மட்டும் இல்லாமல் உண்மையைப் பேசி பொருளில் உள்ள குறைகளை கூறி வியாபாரம் செய்ய வேண்டும். இப்படி நாம் நடந்து கொண்டோம் என்றால் நமக்கு பரகத்தைப் பெற முடியும்.ஆனால் இன்று நடை பெரும் அதிகமான வியாபாரங்களில் இந்த முறைகள் நடையபெறுவதில்லை வெறும் பொய்யும் பித்தளாட்ங்களும் தான் நடை பெருகிறது.எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படி வியாபாரம் செய்தால் நமக்கு அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியாது.
#திருமணத்தில் எளிமை..
குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரகத் பொருந்தியதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: அஹ்மத் 23388
திருமணம் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டும் அவ்வாறு நடத்தப் படுவதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும்.நம்முடைய சமூதாயம் இன்று திருமணத்திற்கு செலவு செய்வதைப்போன்று வேறு எதற்கும் செலவு செய்வது கிடையாது.கொள்கை சகோதரர் கூட இந்த திருமணவிஷயத்தில் மடங்கி விடுகிறார்கள்.வீண்விரயம் இஸ்லாம் கற்றுத்தராத அனாச்சாரங்கள் மலிந்து கிடப்பதைப்பார்க்கலாம்.இஸ்லாம் கற்றுத்தரகூடிய முறையில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலம் நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும். எனவே இவைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக..!!!!

தீனுல்இஸ்லாம்- சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்…

Posted: October 22, 2012

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓ…

தினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம். அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.இறை வாக்குகள்1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.நபி மொழிகள்1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம் இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்இதோ நபி(ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.2. நான் ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது.அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம் மேற்கண்ட நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும். 3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி, தாரமிமேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

Posted: October 21, 2012

“ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மா…

றுபட்ட தன்மையைக் கொண்டதாகும். ஹஜ் கடமை:- மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ் கடமைக்காக மக்காவில் அணி திரள்கின்றனர்.தியாகம்:- இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் சமுதாய விழிப்புணர்வு எனும் தாகத்துடன் கூடிய தியாகச் சிந்தனை ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களைக் காணலாம்.கொள்கை உறுதி:- இப்றாஹீம், இஸ்மாயில், அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ பணம் படைத்தவர்கள் தமது செல்வத்தை அநாகரிக அரசியலுக்காகவும், ஆபாசம் நிறைந்த “கலை-கலசாரம்” என்ற பெயரில் நடக்கும் கலாசாரக் கொலை நிகழ்ச்சிகளுக்கும் வாரி வழங்குவதைப் பார்க்கின்றோம். குர்ஆன்-ஸுன்னாவுக்கு எந்நிலையிலும் கட்டுப்படுவேன். அதற்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் உதவ மாட்டேன் என்ற உறுதி எமது செல்வந்தர்களிடம் உருவாக வேண்டும்.இரக்கம் பிறக்கட்டும்:- “ஹஜ்” என்பது மனிதனிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவேதான் அம்மாதங்களில் யார் தன் மீது ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டாரோ அவர் ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம்! தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.சமூகத்தில் பெரும் பெரும் குற்றச் செயல்களை சமூக அந்தஸ்த்து மிக்கவர்கள் துணிவுடன் செய்கின்றனர். பணம் இருக்கிறது என்ற திமிரில் அடுத்தவர்களை ஆள் வைத்து அடிப்பது, சட்டத்தையும் அரசியல் பலத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலவீனமானவர்களைப் பழி தீர்ப்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர்.ஹஜ் செல்வந்தர்களின் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்மை விடக் கீழானவர்கள் மீது அன்பையும், கருணையையும் பொழியும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டும்.ஈகை மலரட்டும்:- ஹஜ் பெருநாளை “ஈகைத் திருநாள்” என்று கூறுகின்றோம். இப்றாஹீம் நபி தனது மகனை அறுக்கத் துணிந்ததை நினைவூட்டும் முகமாகக் கால்நடைகளை அறுத்து வறியவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த ஈகைக் குணம் ஹஜ்ஜாஜிகளிடம் ஏற்பட வேண்டும். தமக்கு அல்லாஹ் வழங்கிய அருளில் வறியவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் பக்குவம் பிறக்க வேண்டும்.உள்ளத்தின் கண்கள் திறக்கட்டும்:- முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் பல. முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலை இஸ்லாத்தையும், முஸ்லிம் உம்மத்தையும் தப்பும் தவறுமாகப் பிற மக்கள் கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.இந்த சமுதாயத்தின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. சமூகத்தின் பண்பாடுகளும், பழக்க-வழக்கங்களும் மாறிக்கொண்டு செல்கின்றது. வறுமை சமூகத்தை வாட்டி வதைக்கின்றது. பாரிய பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள அடி மட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஏழைகளின் நடத்தைகளில் வறுமை பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைக்கும், ஆபாச சினிமாவுக்கும் அடிமைப்பட்ட இளம் சமூகம் உருவாகி வருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் முஸ்லிம் உம்மத்தின் அத்திவாரங்கள் ஆட்டங்கண்டு வருகின்றன; ஆணிவேர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையை நீக்கப் பாரிய சமூகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.குர்ஆன்-ஸுன்னா எனும் சத்தியப் பிரசாரம் சமூகத்தின் அடி மட்டம் முதல் அழுத்தமாகப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கல்வி விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். கல்விக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். கற்கும் ஆற்றலும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.விதவைகள், அநாதைகள் போன்ற பலவீனமானவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தச் சமய-சமூக மாற்றத்திற்கும் நல்ல மனம் கொண்ட செல்வந்தர்களின் பணம் அர்ப்பணமாக வேண்டும். பணம் படைத்தவர்கள் தமது உள்ளத்தால் சமூகத்தைப் பார்க்க வேண்டும். உள்ளத்தின் கண்கள் திறந்தால் சமூகத்தின் அவலநிலை அவர்களுக்குப் புரியும். அதை நீக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவர்கள் இதயத்தில் பிறக்கும்.இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்:- இல்லாதவன் தன் வறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி வாழ வேண்டும். “இருப்பவன் இல்லாதவனுக்குப் “பொறுமையுடன் வாழ வேண்டும்!” என்று புத்தி சொன்னால் மட்டும் போதாது. இருப்பதில் கொஞ்சம் கொடுத்துப் பொறுமை பற்றியும் கூற வேண்டும்” என்று குர்ஆன் சொல்கின்றது.இல்லாதவன் பொறுமையைக் கடைப்பிடிப்பதும், இருப்பவன் இரக்கம் காட்டுவதும் சுவனம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே பணம் படைத்தவர்கள் இதயத்தில் இரக்கம் பிறக்க வேண்டும். அந்த இரக்கம் சமூகத்தில் உறக்கம் களைத்து உயர்வைத் தர வேண்டும்.ஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.எனவே இந்த ஹஜ், ஹாஜிகளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தின் உயர்வுக்கு அடித்தளமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போமாக

தீனுல்இஸ்லாம்- பிரார்த்தனை….

Posted: October 19, 2012

”பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் ‘எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது’ எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)

அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்குஎன்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.)ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில்எவரேனும்பிரார்த்தித்தால் நீநாடினால்என்னைமன்னிப்பாயாக!என்றுகேட்கவேண்டாம். (உங்கள்) கோரிக்கையைவலியுறுத்திக்
கேளுங்கள்.மகத்துவம்மிக்கதைக்கேளுங்கள்.ஏனெனில்அல்லாஹ்வழங்கியஎந்தஒன்றும் அவனுக்குப்பெரிதாகத்தெரிவதில்லைஎன்றுஅல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்..

அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் ‘எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது’ எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)

அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்குஎன்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.)ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில்எவரேனும்பிரார்த்தித்தால் நீநாடினால்என்னைமன்னிப்பாயாக!என்றுகேட்கவேண்டாம். (உங்கள்) கோரிக்கையைவலியுறுத்திக்
கேளுங்கள்.மகத்துவம்மிக்கதைக்கேளுங்கள்.ஏனெனில்அல்லாஹ்வழங்கியஎந்தஒன்றும் அவனுக்குப்பெரிதாகத்தெரிவதில்லைஎன்றுஅல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்1துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது அவனுடைய மிககப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய அந்த நாட்களாவன:-
1. ரமளான் மாதம்,
2. ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.
3. ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4. ஜும்ஆவுடைய நாள்.
5. ஜும்ஆவுடைய நாளில் இமாம் மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்;நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல்பஜ்ர் 89:1-2)
1.துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும். இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை
2.அடியார்கள் தன்னை குறிப்பிட்ட நாட்களில் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறிய நாட்களும் இந்த துல்ஹஜ் பத்து நாட்களில் தான் வருகிறது.
இறைவன் திருமறையில் கூறுகிறான்:

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ

‘அவர்கள் தங்களுடைய (இம்மை,மறுமைப்) பேறுகளை பெறுவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காகவும்,குறிப்பிட்டநாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்,( ஹஜ்ஜுக்கு வருவார்கள்) 22:28.
இவ்வசனத்தில் ‘குறிப்பிட்ட நாட்கள்’ என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என்பது பெருமபாலான் அறிஞர்களின் கருத்தாகும். இப்னு உமர் (ரலி)இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
3. துல்ஹஜ்ஜு பத்து நாட்களும், உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததா? என நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும் விடவும் இது சிறந்தது.ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள் போர் ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர’ எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ,ஆதாரம்: புகாரி)
4. அரபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது
அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.)
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.
5. துல்ஹஜ் பத்துநாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதைவிடவும் மேலானது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும.; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹு என்றும்,அல்லாஹு அக்பர் என்றும்,அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்! (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூலகள் : முஸ்னத்அஹ்மத்,தப்ரானி.)
பத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிகக் கவனம் செலுத்துவது சிறப்பாகும் :-
இந்நாட்களை நாம்சிறப்பிப்போம்.
நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையான தாகவும் இருக்கவேண்டும்! பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்கு கின்றன!
நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது அன்பையும், அருளையும் பெறமுயல் வோமாக!

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;

1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் – புகாரி முஸ்லிம்.

2- நோன்பு
இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும்., நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும். (9 நோன்புகளை நோற்கவேண்டும்)
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் – புகாரிமுஸ்லிம்]

3-உபரியான தொழுகைகள், உபரியான தர்மங்கள், குர்ஆன் ஓதுவது, பாவமன்னிப்பு தேடுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, உறவினர்களுக்கு உதவுவது, போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.


4- அரஃபா நோன்பு :-
அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

5- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புஹாரி.

6- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

7- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புஹாரி.

தீனுல்இஸ்லாம்- இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!

Posted: October 16, 2012

எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)
ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

‘மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும். கல்வி அகற்றப்படும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ஹர்ஜ் என்பது கொலையாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), அபூ மூஸா (ரலி) நூல்-புகாரீ 7063.
உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும்.(புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)
‘(மறுமைநாள் நெருங்கும் போது) காலம் சுருங்கும் செயல்கள் குறையும், மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாகும் குழப்பமே தோன்றும், கொலை பெருகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் – புகாரீ 7061.
முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)
‘மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் – புகாரீ 7066).
நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 6496.
எனது உயிரை தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, உங்கள் இமாமை நீங்கள் கொன்று, சண்டை செய்து கொண்டு உங்களின் உலகத்தை உங்களில் கெட்டவர் ஆட்சி செய்யும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) நூல்-இப்னுமாஜா.

தீனுல்இஸ்லாம்- மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!

Posted: October 14, 2012

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)

மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!… (அல்குர்ஆன்11 :3)

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக (தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன் 66:8)

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும் அதிகமாக அல்லாஹுத் தஆலாவிடம் பிழை பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்து மீளுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மனிதர்களே! அல்லாஹுத் தஆலாவிடம் தவ்பாச் செய்யுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரே நாளில் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன் என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்தார்கள் என்றால்! ”நாம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்”? என்பதை எண்ணிப்பாருங்கள்.

சிறந்தவர் யார்?

எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)

நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்ல அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)

உலகத்தில் நாம் யாருக்காவது தவறிழைத்து விட்டால் அவர்களைவிட்டும் ஒளிந்து தூரமாகி விடுகின்றோம். ஆனால், பாவம் செய்த தன் அடியார்களைப் பார்த்து அவனின் பக்கம் திரும்பி பாவமன்னிப்புத் தேடும்படி அந்த வல்ல அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான். இதைவிட தயாளத் தன்மை வேறு என்னதான் இருக்க முடியும்? தனக்கு மாறு செய்தவர்களை இறக்கத்தோடு அழைக்கின்றான். ஆகவே உங்களின் பாவங்களை உடன் நிறுத்திவிட்டு அவன் பக்கம் மீண்டு தவ்பாச் செய்யுங்கள்.

இன்னும் பாவங்களை தொடரத்தான் போகின்றீர்களா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொண்டு தவ்பாச் செய்ய போகின்றீர்களா? ஆம்! உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்பாகவே, உடனடியாக அந்த ரஹ்மானிடம் உங்களின் தவறுகளுக்காக மனம் கலங்கி! கதறி! கண்ணீர் வடியுங்கள்! வல்ல அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவன். மீதியுள்ள காலத்தையாவது அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஏவியவைகளையே செய்யுங்கள், அவ்விருவரும் தவிர்த்தவைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஈருலக வெற்றியாளர்கள்.

அல்லாஹ்வின் திருப்திதான் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)

மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.

அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார் ; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிப்படுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!” என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது ”அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன்(பயபக்தியுடையவர்)களில் ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், ”(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (பதில் கூறப்படும்) ”மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (அல்குர்ஆன் 39:54-59)

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)

(மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

மேலே கூறப்பட்ட இறைவசனங்களையும், நபிமொழிகளையும், கவனமாகப் படித்தீர்களா? மீண்டும் பல முறை படித்துப்பாருங்கள். அமல்களில்லாமலும், தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிப்பவர்கள் தங்களின் ”சக்ராத்” நிலையில் கதறக்கூடிய கதறலுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எத்தனையோ நமது சகோதரர்கள் அவர்கள் மரணிக்கும் போது தாங்கள் உலகத்தில் செய்த தவறுகளைப்பற்றி கவலை அடைந்தவர்களாக அவர்களின் உயிர் பிரிந்ததை பார்த்திருக்கின்றீர்கள், கேள்விப்பட்டும் இருக்கின்றீர்கள். உங்களின் உயிரும் அப்படிப் பிரியக்கூடாது என்பதற்காக இப்போதனையை உங்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!

யார் உடனடியாக பாவமன்னிப்புத் தேடாமல் மரணம் வரும்வரை பிற்படுத்துகின்றார்களோ அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மரணம் வரும் வரை தவ்பாவைப் பிற்படுத்துவதென்பது மரணத்தின் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதல்ல. இன்று தவ்பாச் செய்வோம், நாளை தவ்பாச் செய்வோம் என்று தவ்பாவை யார் அலட்சியப் படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு திடீர் என மரணம் வரும்போது அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வார்கள் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதாகும். ஆகவே உடனடியாக தவ்பாச் செய்து கொள்ளுங்கள். காரணம் நாம் எப்போது மரணிப்போம் என்பது யாருக்குமே தெரியாது.

பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகள்

மனிதர்களின் உரிமைகள் சம்பந்தப்படாது, அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் மாத்திரம் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் அவர் அதிலிருந்து தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும், மூன்று நிபந்தனைகள் உள்ளன.

முதலாவது, தான் செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலுமாக நீங்கி விடுவது.

இரண்டாவது, தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதப்படுவது.

மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என உறுதிகொள்வது.

மனிதனுக்கு, மனிதன் செய்த குற்றமாயின் மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது யாருக்கு நாம் அநியாயம் செய்தோமோ அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். உதாரணமாக பிறரது பொருளை அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

உண்மையான தவ்பா

இப்படி செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல் தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று முஸ்லிம்களில் பலர் தவ்பாவை ஒரு விளையாட்டாக கருதுகின்றார்கள். அதாவது அன்றாடம் பல பெரும் பாவங்களை செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சினிமா மற்றும் ஆபாசக் காட்சிகளைப்பார்ப்பது, சூதாடுவது, லாட்டரியில் பங்கு கொள்வது மற்றும் வட்டி போன்ற பெரும் பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தொழுகைக்கு வரக் கூடியவர் அத்தொழுகைக்கு முன்னால் செய்த பெரும்பாவத்துக்காக தவ்பாச் செய்கின்றார். தவ்பாச் செய்யும் போதே அதே பாவத்தை மீண்டும் செய்யலாம் என்ற எண்ணத்துடனேயே தவ்பாச் செய்கின்றார். தவ்பாவை முடித்து விட்டு தன் வீடு சென்றதும் அதே பாவத்தையே திரும்பவும் தொடருகின்றார். அடுத்த தொழுகையின் நேரம் வந்து விடுகின்றது , மீண்டும் தொழுகைக்கு வருகின்றார். தொழுகையை முடித்துவிட்டு தவ்பாச் செய்கின்றார், மீண்டும் அதே பாவத்தையே செய்கின்றார். இப்படி ஒவ்வொரு தொழுகைக்குப் பின் தவ்பாவும் பாவமுமாகவே தொடருகின்றன. இது எப்படி உண்மையான தவ்பாவாக இருக்க முடியும்? ஆகவே சற்றே சிந்தித்து, தான் செய்யும் தவறுகளை முற்றாக விட்டு விட்டு முன் சொல்லப்பட்ட நிபந்தனைகளோடு, தவ்பாச் செய்யுங்கள். நிச்சயம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான். இதுவே உண்மையான தவ்பாவாகும்.

தவ்பாச் செய்வதின் சிறப்புக்கள்

தவ்பாச் செய்வதினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அல்லாஹ் நம்மை நேசிக்கிறான். அவனுடன் நம்முடைய தொடர்பு அதிகரிக்கின்றது. அவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது.

நிச்சயமாக பச்சாதப்பட்டு மீளுகின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)

உங்களில், ஒருவரது வாகனம் அதில்தான் அவருடைய உணவும், குடிநீரும் உள்ளது;அது காணமால் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவ்வாகனம் அவர் முன் திடீரனெத் தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்வடைவாரோ, அதனைவிட (பன்மடங்கு) அதிகமாக தன் அடியான் தன்னளவில் தவ்பாச் செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்வடைகிறான். அவர் தனது வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக, இறைவா! நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறிவிடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாவு தடுமாறி இவ்வாறு தவறாகக் கூறிவிடுகிறார். (இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியைவிட பன் மடங்கு அதிகமாக தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுத் தஆலா மகிழ்வடைகிறான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)

மரணிப்பதற்கு முன் உண்மையான தவ்பா செய்து, பாவமற்றவர்களாக மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.

நன்றி-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

தீனுல்இஸ்லாம்- துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

Posted: October 11, 2012 in Uncategorized

“என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 040:060)

என்று இறைவன் தனது திருமறையில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினைக் குறித்து கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்களும் கூட, “பிரார்த்தனையே வணக்கமாகும்” எனக் கூறியுள்ளார்கள்.

இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் “பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சில கீழே:

இரவின் மூன்றாவது பகுதி.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், ‘என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்’ என்று கூறுகின்றான்” (ஸஹீஹ் புகாரி : ஹதீஸ் குத்ஸி)

அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அத் திர்மிதி, அந் நஸாயீ, அல் ஹாக்கீம் ஸஹீ)

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் அல்லது ஒரு பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருளுகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது.” (முஸ்லிம் : 757)

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துவாக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.” (அஹ்மத், அபு தாவூத் # 521, அத்திர்மிதி # 212, ஸஹீஹ் அல் ஜாமி # 3408, அந்நஸாயி மேலும் இப்னு ஹிப்பான் ஸஹீஹ்)

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம்.

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி பேசும் போது கூறினார்கள், “வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உள்ளது; அதை ஒரு முஸ்லிம் தனது பிராத்தனையில் பெற்றுக்கொண்டு ஏதேனும் அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் அந்த பிராத்தனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான். மேலும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளினால் அதன் சிறிய அளவு நேரத்தை சைகை மூலம் காட்டினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

ஜம் ஜம் நீர் குடிக்கும் போது.

ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது.” (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)

இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

ஸஜ்தாவில் இருக்கும் போது.

அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து தமது தேவைகளை கேளுங்கள். (முஸ்லிம், அபு தாவுத், அந்நஸாயி மற்றும் ஸஹீஹ் அல் ஜமீ # 1175).

இரவில் விழித்தெழும் போது.

உபைதா பின் அஸ் ஸமித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எவர் ஒருவர் இரவில் விழித்து எழுந்து லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதிர். அல்ஹம்துலில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

(இதன் பொருள்: வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் இல்லை அல்லாஹ்வைத்தவிர. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணைகள் எவரும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் அவனுக்கே எல்லாப்புகழும். எல்லா கண்ணியமும் அவனுக்கே . மேலும் அவனைத் தவிர எவரும் வணக்கத்திற்குரிய தகுதியுடையவர்கள் இல்லை. மேலும் அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் எவ்வித வல்லமையும் சக்தியும் அல்லாஹ்வையன்றி இல்லை)

இதைக் கூறிய பிறகு அல்லாஹும்மக்பிர்லி (எனது இறைவனாகிய அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக) என்று கூறி அல்லாஹ்வை அழைத்துப் பிராத்தித்தால் அல்லாஹ் பதிலளிப்பான். அவன் உளுச் செய்து தொழுதால் அவனது தொழுகையும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். (ஸஹீஹுல் புகாரி)

நோன்பாளியின் துவா அவன் நோன்பை விடும் வரை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துவா; நோன்பாளியின் துவா; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துவா.” (அல் பைஹகி, அத் திர்மிதி – ஸஹீஹ்)

நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள், “மூவரின் துவாக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளர்; (அநியாயமாக)பாதிக்கப்பட்டவர்.” (அஹமத், அத்திர்மிதி)

-சகோதரி-இல்முனிஸாநிஸா-

தீனுல்இஸ்லாம்- திருமணத்தில் தீய பழக்கங்கள்..

Posted: October 10, 2012 in muhasabanet.

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?

சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமைக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.

கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.

வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.

என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.

சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்

தீனுல்இஸ்லாம்- இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?

Posted: October 9, 2012 in muhasabanet.

தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!

யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.

எவ்வித இயக்கங்கங்களையும் சாராமல் அல்லாஹ் நமக்கு இட்டபெயராகிய முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியினைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குழுச்சண்டைகளே என்றால் அது மிகையாகாது! ஷிர்க், பித்அத்திலே உழன்றுக் கொண்டிருப்பவர்களிடையே அதன் தீமைகளை உணர்த்த முற்படும் போது அவர்கள் முன்னிருத்துவதோ நமது குழுச்சண்டைகளைத்தான்!

எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!

தமக்கும் தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்! அறிவாற்றலில், விவாதத் திறமையில் தம்மை விஞ்சியவர்கள் யாருமில்லை என்று நினைப்பது நம் அகந்தையின் காரணமாக அன்றோ?

‘கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்’ (12:76) என்ற திருவசனத்தை நாம் மறந்துவிட்டோமா? அல்லது

‘அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்-குர்ஆன் 5:100) என்ற உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தானா?

தாம் சார்ந்த இயக்கம் தான் தலைசிறந்தது என்ற நினைப்பும், தம் இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது தம் இயக்கத்தைச் சாராதவர்கள் எல்லாம் தடம் புரண்டவர்கள் என்ற இறுமாப்பும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் அல்லவா? இந்த இயக்கங்களைப் பற்றிக்கூட கேள்விப்பட்டிராத கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனரே! அவர்களும் தடம்புரண்டவர்கள் தானா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

அன்பு சகோதரர்களே! தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்ற போர்வையில் தனிநபர் விமர்சனங்கள் அல்லவா நாம் செய்து கொண்டிருக்கிறோம்! சமுதாயத்தில் தீமைகள் நடைபெறும் போது அவற்றைச் சுட்டிக் காட்டி திருத்துவது அவசியமாகும். ஆனால் அந்தப் போர்வையிலே தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்க தவறுகளையும், அவர் தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளையும் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவருடைய மானத்தோடு விளையாடி அவருடைய மாமிசத்தையல்லவா சாப்பிடுகின்றோம்?

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் என்றால் என்ன? என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை குர்ஆன் ஹதீஸ் போதிக்கின்ற நமக்கு கிடையாதா?

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.

எனவே நாம் நம்முடைய பிறசகோதரர்களை கீழ்தரமாக எண்ணுவதையோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கூறுவதையோ தவிர்க்கவேண்டும். அதை மீறி செயல்பட்டால், நாம் மறுமை நாளின் மீது உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருந்தால், நம்மால் பாதிப்புக்குள்ளான சகோதரர்கள் நம்மை மன்னிக்காதவரை நாம் ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்பட்டடுள்ள பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம். அதில் ஒன்று தான் ஒவ்வொருவரும் தம்மையும், தம் குடும்பத்தார்களையும் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது! அல்லாஹ் கூறுகின்றான்:

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று தமது வாயினால் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் பண்புகளையும், சிஃபத்துக்களையும் அவனுடைய சிருஷ்டிக்களான அவுலியாக்களுக்கும், நபிமார்களுக்கும், இறை நேசர்களுக்கும் வழங்கி அவர்களை அழைத்து, உதவிகோரி அவர்ககளிடம் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களை வணங்கி வழிபட்டு அவர்களையும் ‘வேறு இலாஹ்களாக’ ஏற்படுத்திக்கொண்டு, ஷிர்க் என்னும் மாபெரும் பாவமாகிய இணை வைப்பைச் செய்து நிரந்தர நரகத்தின் படுகுழியை நோக்கி வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதைவிட வேறு முக்கிய செயல்கள் நமக்கு இருக்கின்றனவா? இதற்கல்லவா நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

ஆம்! தாம் சார்ந்த இயக்கப்பற்றின் காரணமாக தாம் செய்வது தவறு என்பதை உணராமல் செயல்படுபவர்களைத் திருத்துவது நமது கடமைதான்! இல்லையென்று கூறவில்லை! அவர்களைத் திருத்துகின்ற நம்முடைய செயல்பாடுகள் எரிகின்ற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல அவர்களுடைய இயக்கவெறியை அதிகப்படுத்துவதாக அமையக்கூடாது! மாறாக, அவர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி இவ்வித இயக்கங்களினால் சமுதாயத்திற்கு சீர்கேடுகளே அதிகம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறி உண்மையை உணர்த்துதாக அமையவேண்டும்! அதே நேரத்தில் இயக்கத்தை எதிர்ப்பதாகக் கூறுகின்ற நம்முடைய செயல்பாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இணைவைப்பாளர்களுக்கு ஆதரவாகப் போய்விடக்கூடாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் உண்மை என்னவெனில், இயக்கங்களைச் சார்ந்தவர்களாயினும் சரி, அல்லது இயக்க எதிர்ப்பாளர்களாயினும் சரி! நமக்கு நாமே குறைகூறி, புறம் பேசித் திரிகின்றோமே தவிர இறைவனால் என்றென்றும் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க்கை நமது சமூகத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபடுவதில் வெகு சொற்பமாகவே கவனம் செலுத்துகின்றோம்.

ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று, ஷிர்க் மற்றும் பித்அத்துகளை தவிர்ந்து வாழும் எனதருமை ‘முஸ்லிம்’ சகோதர, சகோதரிகளே! நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை எதிர்ப்பவராகவோ இருந்தாலும் சரியே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்புபவராக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நமது ஒவ்வொரு செயல்களுக்கும் அல்லாஹ்விடம் பதில்கூறியே ஆகவேண்டும் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்! நாம் ஒவ்வொரு முறையும் பிறருக்கு போதிக்கின்ற இறைவனின் எச்சரிக்கையை நமக்கு நாமே கூறிக்கொண்டு நம்மை சீர்திருத்திக்கொள்வோம்!

“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)

சகோதரர்களே!

ஒருவர் பூமி நிறைய பாவங்கள் செய்திருப்பினும் இறைவனுக்கு இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்தித்தால் அல்லாஹ் அவன் பாவங்களை மன்னிப்பதாக இருக்கின்றான்’ என்ற நபிமொழியை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே நம்முடைய செயல்களிலேயே தலையாய செயலாக, ‘பூமி நிறைய பாவங்களை விட மிகப்பெரிய பாவமாகிய ஷிர்க்’ என்பதை விட்டும் நம் சகோதர, சகோதரிகளை மீட்டெடுப்பதையே அமைத்துக்கொள்ள வேண்டும்! அதற்கே நாம் அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

யா அல்லாஹ் சத்தியம் எங்கிருந்து வந்தாலும், அதை யார் கூறினாலும் அந்த சத்தியத்தை ஏற்று நாங்கள் தவறு செய்திருப்பின் எங்களைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

உள்ளங்களைப் புரட்டுபவனே! உன்னிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம்! ஷைத்தானின் தூண்டுதல்களினால் துண்டு துண்டாகச் சிதறுண்டு தனித்தனிக் குழுக்களாக, இயக்கங்களாக செயல்படுபவர்களின் உள்ளங்களை ஒன்றினைத்து நாங்கள்

அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதற்கு உதவி செய்திடுவாயாக!

யா அல்லாஹ்! ஷைத்தானின் தீய சூழ்ச்சிக்கு உட்பட்டு முஸ்லிம்களுக்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் குழுச்சண்டைகளிலே எங்களின் சக்திகளை, நேரங்களை வீணடிக்காமல் அவைகளை நிரந்தர நரகத்திற்கு வழிகோலுகின்ற ஷிர்க் மற்றும் வழிகேட்டிற்கு இட்டுச்சென்று அதன் மூலம் நரகத்திற்கு வழிவகுக்கும் பித்அத் போன்ற செயல்களைச் செய்பவர்களைச் சீர்திருத்துவதில் திருப்புவதற்கு உதவி செய்வாயாக!

நன்றி-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

தீனுல்இஸ்லாம்- கணவன்மார்களே! தெறிந்து கொள்ளுங்கள்…

Posted: October 8, 2012 in muhasabanet

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றத.. 01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும்.02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.08) நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.11) பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.12) இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.14) குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..18) திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.21) அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.
நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்))

-சகோ.நிழ்பர்-சவூதிஅரேபியா-

தீனுல்இஸ்லாம்- அழகிய முகமன் அஸ்ஸலாமு அலைக்கும்…

Posted: October 6, 2012 in muhasabanet..

மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ‘ஏசுவுக்கு ஸ்தோத்திரம்’ என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் ‘ஏசுவுக்கு ஸ்தோத்திரம்’ என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ‘ராம் ராம்’ என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக ‘ராம் ராம்’ என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் ‘நமஸ்தே’ என்றோ ‘நமஸ்கார்’ என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் ‘நமஸ்காரம்’ என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி ‘வணக்கம்’ என்கின்றனர். இவை அனைத்தும் ‘நான் உங்களை வணங்குகிறேன்’ என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? ‘வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்’ என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் ‘வணக்கம்’ என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் ‘வணக்கம்’ கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் ‘வ அலைக்குமுஸ் ஸலாம்’ (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

-அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா-

தீனுல்இஸ்லாம்- உலகம் பின்னடைந்து உள்ளதற்கு முதல் காரணம்..

Posted: October 5, 2012

ஒழுக்க வாழ்வில் மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்து உள்ளதற்கு முதல் காரணம், பெண்ணின் ஒழுக்க வாழ்வில் மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்து உள்ளதற்கு முதல் காரணம், பெண்ணின் அரைகுறை ஆடைகளும் ஆன்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே ஆகும்…!!

அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதையெல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புவானோ, அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும்..!! காரணம் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும்…!! முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது…!!! இவ்வுலக வாழ்வில் பெண்கள் இவ்விஷயத்தில் வரம்பு மீறினால் அவர்களின் மறுமையின் நிலையை பின் வரும் ஹதீஸில் பாருங்கள்…!!

நூல் : முஸ்லிம் 4316.
அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

“இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்”…

“இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்!.. இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்!.. தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்!.. அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும்!.. எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்!.. ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்!”….

தீனுல்இஸ்லாம்- சுவர்க்கத்தில் பெண்களின் நிலை..(தொடர்ச்சி)

Posted: October 4, 2012

6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம். (2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.Photo: Assalamu Alaikkum Varahmathullahi Vabarakathuhu>.  suvarkaththil pengalin nillai..6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ''சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்'' அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ''உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.''2- இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.3- இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ''ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.'' (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.6- கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ''ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.'' ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ''நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்."7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ''எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.''8- சில ஸஹாபாக்கள் ''உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.'' எனவும் கூறியிருக்கின்றார்கள்.9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ''அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.''இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ''நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.'' என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ''ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் 'மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக' என அவளுக்கு கூறப்படும்.'' என நபி (ஸல்) கூறினார்கள்.தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ''(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். '' (4:89.)எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”2- இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.3- இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.6- கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.”7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.
-சகோதரி-இல்முனிஸாநிஸா-

தீனுல்இஸ்லாம்- ஹஜ் செய்வோர் பேணவேண்டியவைகள்!

Posted: October 3, 2012 in muhasabanet.

1) இறையச்சத்தைக் கொண்டு உபதேசித்தல்: ஒரு முஸ்லிம் உம்ராவுக்கோ ஹஜ்ஜிற்கோ பயணம் மேற்கொள்ளும்போது தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தக்வாவைப் பற்றி வஸிய்யத் செய்ய வேண்டும். தக்வா என்றால் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பதாகும். மேலும் கடன் சம்பந்தமான கொடுக்கல் – வாங்கல்களை எழுதி வைத்து அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

(2) தவ்பாவில் ஈடுபடுதல்: ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தங்களின் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடும் வகையில் கலப்பற்ற தவ்பா செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து மீளுங்கள்! அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (24:31). தவ்பா என்பது, பாவங்களிலிருந்து விலகி அதை விட்டுவிடுவதும் நடந்துவிட்டதை நினைத்து வருந்துவதும் இனி அதைச் செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுப்பதுமாகும். மக்களிடம் பொருள், உடல், மானம் மரியாதை தொடர்பான ஏதேனும் அக்கிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பயணம் மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றைப் பரிகாரங்கள் மூலமாகவோ, மன்னிப்பு மூலமாகவோ தீர்த்துக்கொள்ள வேண்டும்.

(3) ஹலாலான பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ராவில் ஆகும் செலவுகளுக்குரிய பொருளாதாரம்: ஹலாலானதுதானா? என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ‘அல்லாஹ் நல்லவன், நல்லதைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை’| என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).ஹஜ் செய்வோர் பேணவேண்டியவைகள்!

(4) மனத்தூய்மை: ஹஜ், உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகவும் மறுமைக்காகவும் புனித இடங்களில் சொல்லாலும் செயலாலும் மேற்கொள்கின்ற அமல்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற வேண்டும் என்கிற கலப்பற்ற எண்ணத்துடனும் செயல்பட வேண்டும். அத்துடன் இந்த உலகாதாயத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ, புகழுக்காகவோ, பெருமைக்காகவோ இவற்றை மேற்கொள்வது என்ற நிலையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் அமல்களைப் பாழாக்கும் காரணங்களாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘யார் இவ்வுலக வாழ்க்கையையோ, அதன் அலங்காரத்தையோ நாடுகின்றாரோ அவர்களுக்கு இவ்வுலகிலேயே அவற்றைக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் எந்தக் குறைவும் ஏற்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவுமில்லை. உலகில் அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன. அவர்கள் செய்துகொண்டிருந்தவை அசத்தியமாகும். (11:15,16). மேலும் நான் அனைத்துக் கூட்டாளிகளைவிட்டும் தேவையற்றவன். யாரேனும் ஓர் அமலைச் செய்யும்போது என்னுடன் வேறெவரையும் கூட்டாக்கினால் நான் அவனையும் அவனது அக்காரியத்தையும் விட்டுவிடுவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

(5) சிறந்த நண்பனைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ரா செய்பவர்கள், தங்களின் பயணத்தோழர்களாக தக்வாவுடையவர்கள், மார்க்க ஞானம் உடையவர்கள், கட்டுப்பாடுள்ளவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விவரமில்லாதவர்களையும் பாவமிழைப்பவர்களையும் தவிர்க்க வேண்டும்.

(6) ஹஜ் – உம்ராவின் சட்டங்களைக் கற்றல்: ஹஜ், உம்ராவில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி கற்றுக்கொள்வதுடன் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணமாகும்போது பயண துஆக்களை ஓதிக்கொள்ள வேண்டும்.

(7) திக்ர், இஸ்திக்ஃபார்களை அதிகமாக்கிக்கொள்ளல்: பயணத்தின்போது திக்ர், இஸ்திக்ஃபார், பணிவுடன்கூடிய துஆ, குர்ஆன் ஓதல், அதன் அர்த்தங்களைப் பற்றி சிந்தித்தல் ஆகியவற்றை அதிகமாக்குவதுடன் ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றவும் வேண்டும். ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறுதல், பொய், கோள், புறம், பரிகாசம் போன்றவற்றிலிருந்து நாவைப் பேணவும் வேண்டும்.ஹஜ் செய்வோர் பேணவேண்டியவைகள்!

தீனுல்இஸ்லாம்- சுவர்க்கத்தில் பெண்களின் நிலை..(தொடர்ச்சி)

Posted: October 2, 2012 muhasaba.

3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என ஆண் பெண் இரு பாலரையும் சேர்த்தே குர்ஆன் கூறுகின்றது. மற்றோரிடத்தில் ”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (4:124) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

4- பெண்கள் சுவனத்தில் நுழைந்தால் எங்கிருப்பார்கள்? என்ன செய்வார்கள்? இப்படியாக சுவர்க்கத்தில் அவர்களின் நிலை பற்றி அதிகமான கேள்விகளைக் கேட்டு இதிலேயே தங்கள் சிந்தனையை எப்போதும் மூழ்கடித்து விடக்கூடாது.

உலகில் நாம் காணும் இழிவு, கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் நுழைவதன் மூலமே இல்லாது போய்விடும். அந்த சுவர்க்க வாழ்க்கை முடிவே இல்லாத முழு இன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். இதனையே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ”அவற்றில் (சுவர்க்கங்களில்) அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.” (15:48.)

மற்றுமோர் இடத்தில் ”இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கணகளுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும் ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” (என அவர்களிடம் சொல்லப்படும்.)” (43:71.) இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றே போதுமானதாகும். ”அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான், அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” (5:119)

5- சுவர்க்கத்தில் உள்ளம் ஆசை கொள்ளும் அம்சங்களாக அல்லாஹ் குறிப்பிடும் உணவு வகைகள், கண் கவர் காட்சிகள், அழகான படுக்கையறைகள், பலவிதமான உடைகள் இவை அனைத்தும் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதே. எல்லோரும் இவ்வின்பங்களை அனுபவிப்பார்கள்.

அதிகமாக பெண்கள் தரப்பிலிருந்து வினவப்படும் ஓர் அம்சம்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை மக்களுக்கு ஆசையூட்டும்போது அங்கு ஆண்களுக்கு ‘ஹூருல் ஈன்’ பெண்கள் சுவர்க்கத்தமிலிருப்பதாகவும் இன்னும் அழகான பெண்கள் இருப்பதாகவும் கூறுகிறான் ஆனால் இது போல் பெண்கள் சம்மந்தமாக ஏதும் கூறவில்லையே, பெண்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதாகும்.

இதற்குரிய விடையை இப்படி நாம் பார்க்கலாம்.

(1) அல்லாஹ் ”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.” ஆனால் ஏன் அல்லாஹ் இந்த வியத்தை இப்படி வைத்திருக்கிறான் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுக்குள்ளே இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில் குற்றம் ஏதும் இருக்காது.

(2) எல்லோரும் ஏற்றுக் கொள்வது போல் பெண்களிடம் காணப்படும் இயற்கையான ஒரு அம்சம்தான் வெட்கம். இதனால் இறைவன், பெண்கள் வெட்கப்படும் ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டவில்லை.

(3) பெண்கள் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆண்கள் மீது பெண்கள் ஆசை கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஆண்கள் மிக ஆசை கொள்ளும் இவ்வம்சத்தின் மூலம் ஆண்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் ”எனக்குப் பின் நான் உங்களில் அதிகம் பயப்படும் விஷயம் பெண்களால் ஏற்படும் பித்னாக்களைத்தான்” என்று கூறியிருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் மீது ஆசை கொள்வதை விட அழகு, ஆபரணங்கள், அலங்காரம் போன்றவற்றில் மிக மிக ஆசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களின் சுபாவமாகும்.

(4) இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அல்லாஹுதஆலா ஆண்களுக்கு மனைவிமார்கள் (சுவர்க்கத்தில்) உண்டு எனக்கூறியது, எப்போதும் ஆண்களே பெண்களைத் தேடுவார்கள் (ஆசையோடு அழைப்பார்கள்) எனவே சுவர்க்கத்தில் மனைவிமார்கள் உண்டு எனக்கூறி பெண்களுக்கு கணவன்மார்கள் பற்றி கூறவில்லை. ஆனால் இதனால் சுவர்க்கத்தில் பெண்களுக்கு கணவர்மார்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கும்(பெண்களுக்கு) மனிதர்களிலிருந்தும் கணவன்மார்கள் அங்கிருப்பார்கள்.

6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அது என்ன?

தொடர்ந்து வாசியுங்கள்-

-தொடரும்-
சகோதரி-இல்முனிஸாநிஸா

தீனுல்இஸ்லாம்- சுவர்க்கத்தில் பெண்களின் நிலை..

Posted: October 1, 2012 in muhasabanet

சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கரு…

த்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன். அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போதுAssalamu Alaikkum Varahmathullahi Vabarakathuhu,....  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது மனைவிமார் மீதும் மற்றும் நல்லவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன். அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போதுஅதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் "சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்". மற்றுமொரு சந்தர்ப்பத்தில் "எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?" என ஸஹாபாக்கள் கேட்டதற்கு "அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்" என நபியவர்கள் கூறினார்கள்.2- மனித உள்ளங்கள் - அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் - சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்" (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள்  .....thodarum..
அதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்”. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு “அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்” என நபியவர்கள் கூறினார்கள். 2- மனித உள்ளங்கள் – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் – சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள் …..
-தொடரும்-
சகோதரி-இல்முனிஸாநிஸா

தீனுல்இஸ்லாம்- அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிந்திக்க வேண்டாம்.

Posted: September 30, 2012 in muhasabanet..

எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திரு…

க்கிறான். (அல் குர்ஆன் 33: 57) அல்லாஹ்தஆலாவுக்கு அதிருப்தியான காரியத்தைச் செய்பவர்கள். அவன் பொருந்தாததைச் செய்பவர்கள் என்பது அதன் கருத்து. ஈமான் கொள்ளாதிருத்தல், அவன் கட்டளைகளுக்கு மாறு செய்தல், தங்களது இச்சைகளைப் பின்பற்றுதல், இறைவனுக்கு மக்களிருப்பதாகவும், அவனுக்கு இணை துணை இருப்பதாகவும் கருதுதல், அவனது ஆற்றலை மறுத்தல், காலத்தைத் திட்டுதல், அல்லாஹ்வின் வலிமார்களை நிந்திப்பது அல்லாஹ்வை நிந்திப்பதாகும். அவ்வாறானவர்களை தன்னுடன் போரிட வருமாறு அல்லாஹ் அழைக்கின்றான். அல்லாஹ்வின் சின்னங்களை பழிப்பதும், ஏளனமாகக் கருதுவதும் அல்லாஹ்வை நிந்திப்பதாகவே கருதப்படும்.பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள் பண்பு, குடும்பம், மார்க்கம் என்பனவற்றில் குற்றம் குறை காண்பது, நபியவர்களின் தரத்தினை மரியாதைக் குறைவாகக் கருதுவது அவர்களைப் புலவர், சூனியக்காரர் பைத்தியக்காரர் என்று கூறுதல், நபியவர்களின் அருமை மனைவிமார்களைப் பழித்தல், ஸஹாபாக்களை அவமதித்தல், இவற்றைத் தவிர புண்படும்படியான காரியங்களைச் செய்த யாவரும் அல்லாஹ்தஆலாவின் ரசூலை நோவினை செய்தவர்களாகவே கருதப்படுவார்கள்.எனது குடும்பத்தினரை கோபிக்காதீர்கள். இன்னும் எனது ஸஹாபாக்களைப் பழிக்காதீர்கள். அவ்வாறு அவர்களைப் பழிப்பதும் கோபிப்பதும் என்னைப் பழிப்பதற்குச் சமனானதாகும் என்றும் நபியவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.நபிகள் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சொல்லாலோ செயலாலோ நோவினை செய்வது ஹராமாகும் என்பதை எல்லா அறிஞர்களும் ஏகமனதாகக் கூறியிருக்கின்றனர். பெருமானார் அவர்கள் அணிந்த ஜுப்பாவை ஒரு முஸ்லிம் வேண்டுமென்று அண்ணளாரை அவமதிக்கும் எண்ணத்தில் அது அசுத்தமாக இருக்கிறது என்று கூறினால் கூட அது அவனை மதம் மாற்றத்திற்குத் தள்ளிவிடும்.நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எவர்கள் எதிர்க்கின்றார்களோ அவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் (அல்குர்ஆன் 58:20)
எனவே, அல்லாஹ் ரசூலுடைய விடயங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் மேற்கொள்வது எவ்வாறு அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் நிந்திப்பதாகக் கருதப்படுமோ அவ்வாறே அவ்விருவருடைய ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்வதும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்வதாகவே கருதப்படும்.

கண்கள் குளமாகின்றன, நம் நேசமிகு இறைத் தூதரின் இறுதி வேளையை நினைத்து. மரணத்தின் கடைசி மணித் துளிகளில் நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கண்களின் நீரோட்டத்தை நம்மால் அடக்கிக் கொள்ள முடியாது.உங்களின் நினைவலைகளை ஓரிரு நிமிடங்கள் பின்னோக்கி நகர்த்தி, பெருமானார் வாழ்ந்த காலத்திற்கு சென்று இதை படியுங்கள்.அவர்களுக்கே இந்த நிலை என்றால்…….நமக்கு????

நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ஷசாஃ| கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)

வாழ்வின் இறுதி நாள்

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்| என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்’ என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும், ‘அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா’ என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ‘எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!’ என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.

முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். ‘ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

“யா அல்லாஹ் இந்த மரண வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”

இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.’ (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)

தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

‘நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ‘நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?’ என்று கேட்டபோது, ‘ஆம்!’ என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ‘நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?’ என்று கேட்டேன். தலை அசைத்து ‘ஆம்!’ என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.’

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ‘நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ‘லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன’ என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

நபி (ஸல்) அப்போது ‘இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி ‘நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை’ என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஃபாத்திமா (ரழி) ‘எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே’ எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஷசுன்ஹ்| என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். ‘என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்’ என்றும் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ஷகர்ஸ்| என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) ‘இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’ என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

‘இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.’

இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)

நபி (ஸல்) அவர்களின் இறுதி கட்ட வேளையில் (மரணத்திற்கு முன் 4×5 நாட்களுக்குள்) அவர்கள் பேசிய இறுதி வாக்கியங்கள்:

அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு ‘மக்களே! என்னிடம் வாருங்கள்’ என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. ‘யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.’

எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)

தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும்.

அப்போது ஒருவர் எழுந்து ‘எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்’ என்று கூறவே, ‘ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

‘அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.’

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: ‘தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன்.

மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி ‘வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்’ என்று கூறினார்கள்.

அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்:

1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார்.

நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.’ (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)

‘லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன’ என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

எம்பெருமானாரின் கடைசி….. கடைசி வார்த்தைகள்:

நபி (ஸல்) அப்போது ‘இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள்.

உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

-தொகுப்பு: குலசை சுல்தான்-

தீனுல்இஸ்லாம்- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும்…

Posted: September 19, 2012 in Uncategorized

நபி (ஸல்)அவர்களின் அங்க அமைப்புகள்
அனஸ்(ரலி)அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ,முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர். நடக்கும் போது(முன்புறம்)சாய்ந்து நடப்பார்கள். (நூல் – ஸூனன் திர்மிதி)
பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை. அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும். இரண்டு தோள் புஜங்களுக்குஇடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்). அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை. (நூல் – ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ,இப்னுமாஜா)
அலி (ரலி)அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக)இருக்கும். தலையும்,மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடுகள்)போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்குஇறங்கும் போது அடிஎடுத்து வைப்பது போல் அடிஎடுத்து நடப்பார்கள் (கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்). இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை. (நூல் – ஸூனன் திர்மிதி)
ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும்,பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களின் முகம் பௌர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும்.நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர். தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அவர்களின் முடி சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாகவகிடுபடிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.இல்லையெனில்(வகிடு எடுப்பதை) பிராதனப்படுத்துவதில்லை. முடியை வளரவிட்டுருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு.மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும்.படர்ந்த நெற்றி,அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது.இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும். அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்குநீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும். தாடி அடர்ந்திருக்கும்.கன்னங்கள் மிருதுவாயிருக்கும்.வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளிவிட்டவையாக இருக்கும். அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போலஅழகாயிருக்கும். அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும்சதைப்பிடிப்புள்ளதாகவும் இருக்கும்.வயிறும் நெஞ்சும் சமமானதாகவும் இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும். இரண்டு தோள்புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும். மூட்டுகள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசமாயிருக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும்மத்தியில் கோடுகள் போன்ற நீண்ட முடியிருக்கும். மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும். கை,கால்,விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும்.பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை. நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும்.யாராவது அழைத்தால் முகத்தை மட்டும் திருப்பாமல் முழுமையாக திரும்புவார்கள். அவர்கள் பார்வை பூமியை பார்த்தே இருக்கும். ஒரு சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல்பார்ப்பார்கள். தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால்வருவார்கள். தன்னைச் சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.
ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் வாய் அகன்றதாக இருக்கும். கண்களின் வெண்மையில் செவ்வரி படர்ந்திருக்கும். குதிங்கால் சதைப் பிடிப்பில்லாததாக இருக்கும். (நூல் -ஸூனன் திர்மிதி, அஹமத், முஸ்லீம்)
ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நிலா ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கக் கண்டேன். நபியவர்கள் சந்திரனை விட அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள். (நூல் -ஸூனன் திர்மிதி,தாரமீ)
அபுஹூரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் உருவாக்கப் பட்டவர்களைப் போல் வெண்மையாகஇருப்பார்கள். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டைவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்

நபிமொழிகள்

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

விளக்கம்: எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கும்படி அல்லாஹுவும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறுவது ஒருபுறமிருக்க, மேல்கூறும் பாடல், ஷாஹுல் ஹமிது வலியுல்லாவிடம் (அல்லாஹ் மிக நன்கறிந்தவன்) தேவையை கேட்டு போகச் சொல்லுகின்றது, அல்லாஹுவிற்கு மாத்திரம் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்ட வணக்கத்தை, அல்லாஹுவின் படைப்புக்கும் செலுத்தும்படி கூறுவது, அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது. அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்..

1. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். 35: 13,14

2. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. 22: 73

3. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7: 194

4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:4,5

5. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 40: 20

விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் ஏதாவது ஒரு தேவையைக் கேட்டு பிரார்த்தித்தால் அல்லது ஒரு ஆபத்திலிருந்து பாதுகாப்புத் தேடினால், நாம் அவர்களிடம் கேட்கும் எந்த விஷயத்தையும் அவர்களால் செவிமடுக்கவோ, உணரவோ முடியாது என்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நாம் கப்ரில் உள்ளவர்களிடம் பிராத்தித்தால் அதை அவர்களால் செவிமடுக்கவும் உணரவும் முடியும் என்று மேற்கூறும் பாடல் கூறுகின்றது,

மனமுறண்டாக சொல்லப்படுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அவர்களால் நமக்கு எந்த உதவியையும் கியாம நாள் வரை செய்ய முடியாது. அவர்களால் அல்லாஹ்வின் அற்ப படைப்பாகிய ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது, அவர்களிடமிருந்து “ஈ” எதையாவது எடுத்துச் சென்றால் அதை அவர்களால் மீட்டவும் முடியாது, இப்படிப்பட்ட இயலாதவர்களிடம் கேட்பவர்களைவிட முட்டாள் யாரும் இருக்க முடியமா? போன்ற பல உதாரணங்களைக்கூறி சிறுவர்களும் விளங்குமளவிற்கு அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியிருக்கின்றான். அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததையும் அந்த நல்லடியார்கள் நாளை மறுமையில் மறுத்துவிடுவார்கள் என்ற கருத்துக்களை பொதிந்துள்ள எத்தனையோ இறை வசனங்களுக்கு இந்தப் பாடல் முரண்படவில்லையா?

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் தடுக்கவும் முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்

1. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ”அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக ”அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக ”அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.” 39: 38

2. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவே யாகும். 27:62

3. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். 10:107

4. ”(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 6:17

5. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். 10:107

விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களால் நாம் கேட்கும் ஒன்றை கொடுக்கவும் முடியாது அல்லது நமக்கு வரும் எந்த ஆபத்தையும் அவர்களால் தடுக்கவும் முடியாது என்பதை மேற்கூறப்பட்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. இதற்கு மாறாக நமது சமுதாயத்திடம் அதுவும் பல பெண்களிடம் மொழியப்படக்கூடிய ஒரு வார்த்தைதான் ‘யா முஹ்யித்தீன்’ என்னும் வார்த்தை. அதாவது தன் கையில் இருக்கும் ஒரு பொருள் விழும்போது அல்லது கால்வழுக்கி கீழே விழப்போகும் போது அல்லது தனது பிள்ளை விழப்போகும் போது அல்லது இது போன்ற நிலைகள் ஏற்படும் போது திடீரென்று ‘யா முஹ்யித்தீன்’ என்று கூறிவிடுவார்கள். இந்த வார்த்தையின் கருத்து என்னவென்றால், எங்களுக்கு நிகழப்போகும் இந்த ஆபத்திலிருந்து முஹ்யித்தீன் என்றழைக்கப்படும் பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் காதிர் ஜைலானி அவர்களே! எங்களை பாதுகாத்திடுங்கள் என்பதாகும். பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நல்லடியாரான அப்துல் காதிர் ஜெய்லானி(ரஹ்) அவர்கள் நாம் இவ்வளவு தூரத்திலிருந்து பலர் பல மொழிகளில் அழைப்பதை அவர்களால் கேட்க முடியுமா?

இப்படி அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவன் அல்லாதவர்களிடம் பிரார்த்திக்கக்கூடாது, அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் பிரார்த்தித்து கேட்டாலும், அவர்களால் எந்த நன்மையையும் நமக்குச் செய்யவும் முடியாது, ஒரு ஆபத்திலிருந்து நம்மை அவர்களால் தடுக்கவும் முடியாது என்ற தெளிவான இறைவசனங்களையும் நபிமொழிகளையும் நாம் கேட்டபின்பும் முற்றிலும் இத்தனை வசனங்களுடனும் நபிமொழிகளுடனும் மோதக்கூடிய பாடல்களை, எப்படி இஸ்லாமிய பாடல் என்று கேட்பது?

இப்படியான நம்பிக்கை ஒரு முஸ்லிமிடம் இருக்கத்தான் முடியுமா? அப்படி இருந்தால் அவருடைய ஈமானின் நிலை என்ன? இந்த நம்பிக்கை மேற்கூறப்பட்ட இறைவசனங்களுடன் மோதுகின்றதே? இன்னும் இதுபோன்றே பல கேள்விகளுக்கு உள்ளாகின்றதே? மேற்கூறப்பட்ட இறைவசனங்களும் நபிமொழிகளும் இப்படிப்பட்டவர்களுக்கு விடை தருகின்றது.

மிகப் பழைய பாடல்கள் தான் இவ்வாறு இருக்கிறதென்றால், சமீப காலத்தில் பாடப்பட்ட பாடல்களிலும் கூட இணைவைக்கும் கருத்துக்கள் காணப்படுவதை உணரலாம்.

உதாரணமாக. ‘சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்சஷவாயி நாகூரா’ என்றொரு பாடல் பாடப்படுகிறது. சஞ்சலம் என்றால் துன்பம் துயரம் என்று பொருள். சஞ்சலம் தீர்ப்பவன் அல்லாஹ்வை தவிர வேறெவராலும் முடியாது.

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62).

-ஜஸாகல்லாஹ்-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்-

(தொடர்ச்சி.இன்ஷாஅல்லாஹ் நாளை.)

தீனுல்இஸ்லாம்- இஸ்லாமும் பாடல்களும்..02

Posted: September 17, 2012 in Uncategorized

நேற்றைய தொடர்ச்சி…

நபி(ஸல்) அவர்கள் அகழ் தோண்டப்படும் இடத்திற்கு சென்றபோது, முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களின் கஷ்டத்தையும் பசியையும் பார்த்த நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் கவிதைகளை பாடினார்கள்)

இறைவா! உண்மையான வாழ்க்கையென்பது, மறுமை வாழ்க்கையாகும் அன்சாரிகளுக்கும் முஹாஜிரீன்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!

நபி(ஸல்) அவர்களுக்கு விடை கொடுக்கும் முகமாக நபித்தோழர்கள் பின்வரும் கவிதைகளை பாடினார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருக்கின்றோம்
உயிர்வாழும் வரை ஜிஹாத் செய்வதற்கு. (புகாரி)

(பின்வரும் கவிதைகளை) கூறிய நிலையில், அகழ்போர்களத்தில் நபி(ஸல்) அவர்கள் மண்ணை சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன், மண், அவர்களின் வயிற்றின் வெண்மை நிறத்தை மூடியிருந்தது,

நீ இல்லையென்றால், நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். இன்னும் தர்மம் செய்திருக்கவும் மாட்டோம் தொழுதிருக்கவும் மாட்டோம். ஆகவே எங்கள் மீது அமைதியை இறக்கி வைப்பாயாக!

நாங்கள் எதிரிகளை சந்தித்தால் (எங்களின்) கால் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! …. என சில வரிகளை நபி(ஸல்) பாடினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ (ரலி), ஆதாரம் : புகாரி

மேல் கூறப்பட்ட ஹதீதுகளின் மூலம், நல்ல கருத்துக்களுள்ள பாடல்களை படிப்பதும் கேட்பதும் ஆகுமென்றும், தவறான கருத்துள்ள பாடல்லகளை படிப்பதும் கேட்பதும்தான் தவறு என்பதும் தெளிவாகின்றது.

ஷிர்க்கான கருத்துள்ள பாடல்களை படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று, நான் குறிப்பிட்டதைப்பற்றி உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஆம், நமது பாடகர்கள் பாடும் பல பாடல்களில் ஷிர்க்கியத்தான வார்த்தைகள் மிகத் தெளிவாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை பார்ப்போம்.

பாடகர் நாகூர் E.M. ஹனீபா அவர்கள் பாடும் ஒரு பாடலில், தெளிவாக கூறப்படும் ஷிர்க்கான ஒரு வார்த்தை பின்வருமாறு:

நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே.. .. ..

என்று பாடுகின்றார்.

நாகூர் தர்ஹாவில் நமனை விரட்ட மருந்து விற்குதாம். அன்பு நாணயம் கொண்டு சென்றால் பெறலாம் குரு நாதர் பதப் பூவிலே என்று பாடகர் பாடியுள்ளார்.

நமன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு தமிழ் அகராதி நூற்களில் காணப்படுகிறது. எமன் என்றால் உயிரை பறிப்பவன். உயிரை பறிப்பவர்கள், மலக்குகள் வானவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள். உயிர் பறிக்க வரும் மலக்குகளைக் கூட விரட்டிவிட அங்கு மருந்து விற்கிறது என்றால், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அங்கே நிகழ்ச்சி நடக்கிறது என்பது தானே பொருள்.

உண்மையில் நாகூர் மீரானே நமனால் கைப்பற்றப்பட்டு இறந்தபின் தானே நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்? அவரிடம் போய் நமனை விரட்ட மருந்து கிடைக்கும் என்றால் எப்படிபட்ட பொய்? ஆனால் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும் வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 34)

ஒருவரின் உயிர் கைப்பற்றப்படும் நேரம் வந்துவிட்டால், கொஞ்ச நேரம் முற்படுத்தப்படவுமாட்டாது, கொஞ்ச நேரம் பிற்படுத்தப்படவுமாட்டாது என திருமறை குர்ஆன் தெளிவாக கூறும் போது, இந்தப்பாடல் அதற்கு முற்றிலும் மாற்றமாக கூறுகின்றது. இவ்வாறு அல்லாஹ்வால் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டு விட்ட மரணத்தை யாரும் தள்ளி வைக்கவோ அல்லது நீக்கிவிடவோ முடியுமா? இது குர்ஆனுடன் நேரடியாக மோதவில்லையா? அல்லாஹ்வின் ஆதிக்கத்தில் இன்னுமொரு அல்லாஹ்வின் படைப்புக்கு பங்கு வைத்துக் கொடுக்கும் இணைவைப்பில்லையா? இதை ஒரு முஸ்லிம் இஸ்லாமிய பாடல் என்று கூறி கேட்கலாமா? சிந்தியுங்கள்..

நமன் என்றால் எமன் என்ற பொருளல்ல. மாறாக நோய் என்று தான் பொருள் எனவும் சிலர் கூறுகின்றனர். நோய் என்று பொருள் கொண்டாலும் கூட தவறு தான்.

நோயை விரட்ட மருந்து நாகூர் தர்ஹாவில் விற்கிறது என்றால் தமிழகத்திலுள்ள எல்லா மருத்துவமனைகளையும் மூடிவிடலாமே! ஏன் அரசாங்கத்திற்கு வீண் செலவு. மக்களுக்கு வீண் செலவு. பேசாமல் நாகூர் தர்ஹாவிற்குப் போய் மருந்தையாவது அல்லது நோயையாவது வாங்கிக் கொண்டு வரலாமே?

அல்லாஹ் தான் நோய் நிவாரணம் அளிப்பவன் என்பது தான் இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படை.

‘நான் நோயுற்றால் அவனே எனக்கு சுகமளிக்கிறான்’ (அல்குர்ஆன் 26: 80)

என்று இப்ராஹிம்(அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே நமன் என்பதற்கு எமன் என்று பொருள் கொண்டாலும் நோய் என்று பொருள் கொண்டாலும் தவறு தான் என அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் ஒரு பாடலையும் கேளுங்கள்.

‘எங்கே எங்கே எங்கள் நாகூர் மீரானே உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹ் மீரானே’

என்று துவங்கும் பாடலை மற்றொரு முறை ஆழ்ந்து சிந்தனையுடன் கேட்டுப் பாருங்கள். இந்த அடிகளுக்குப் பின்னால் நாகூராரிடம் பலவிதமான உதவிகளைக் கேட்டு பாடகர் பாடியுள்ளார்.

என்றோ இறந்து போனவரிடம் நம் தேவைகளைக் கேட்கலாமா? கூடாதன்றோ? நாகூர் வலி (அவர் வலியுல்லாஹ்தானா என்பதை அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன்) உயிரோடு உள்ள போதே நாம் கேட்பதை எல்லாம் தர முடியாது. அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் தர வல்லவன். அவர் இறந்து போன பின்பு எப்படி நம் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும்? பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று திருமறை கூறுகின்றது. அல்லாஹ் தனக்கு மாத்திரம் செய்யும்படி கட்டளையிடும் ஒரு வணக்கத்தில் அல்லாஹ்வின் படைப்பை சேர்த்துக் கொள்வது அல்லாஹ்விற்கு இணையில்லையா? (ஷிர்க்கில்லையா) பின்வரும் வசனங்கள் அதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

1. உங்கள் இறைவன் கூறுகிறான்; ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ 40: 60

2. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுதவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2: 186

-ஜஸாகல்லாஹ்-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்-

(தொடர்ச்சி.இன்ஷாஅல்லாஹ் நாளை.)

தீனுல்இஸ்லாம்- இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு..

Posted: September 13, 2012 in Uncategorized

மனிதன் எல்லா நிலைகளிலும் நன்மை களை செய்து, தீமைகளை களைந்து வாழ இறைவனின் கொள்கை கோட்பாட்டுகள் வேண்டுமா ? அல்லது மனசாட்சிக்கு கட்டுபட்டாலே போதுமா ?
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்(21:1) இவ்வுலக வாழ்வோடு அனைத்தும் முடிவடைகிறது, இறப்புக்கு பின் ஒரு வாழ்வு கிடையாது அது வெறும் மாயை என வாதிடும் சக நண்பர்களுக்காக இங்கு சில விளக்கங்கள்,ஏனைய மதங்களில் இறப்பிற்கு பிறகுண்டான சொர்க்கம்,நரகம் குறித்து கூறப்பட்டாலும் அத்தகைய வாழ்வு குறித்து இஸ்லாம் மிக தெளிவாகவும், விரிவாகவும் கூறியுள்ளது.இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்கு வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால் அவருக்கு வெகுமதியாக சுவர்க்கமோ,அதுவல்லாது,தனது மனோ இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வாராயின் அதற்கு தண்டனையாக நரகமோ இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் என்பதே இஸ்லாம் வரையறுக்கும் மறுமை வாழ்வு
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் (செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர்( (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப (இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185) பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். (23:16)மறுமை அல்லது மறுஉலக வாழ்வை ஏற்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை சற்று அறிவோம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே போதுமானது, கடவுள் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்பதே கடவுள் மறுப்பாளர்களின் பொதுவான கருத்து.இதனடிப்படையில் அணுகும் போது ஒரளவிற்கு தனிமனித ஒழுக்கத்தை சரி காணலாமேயோழிய ஒட்டு மொத்த சமுதாய நலனையும் சீர் செய்யமுடியாது ஏனெனில் மனிதனின் மனசாட்சியானது, , எண்ணங்களின் அடிப்படையில் வீட்டு சுழலின், பெற்றோர்கள் வளர்ப்பின், வாழும் இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடும். திருட்டு என்பது தவறென்று அனைவரும் அறிந்திருந்தாலும் திருடனின் மனசாட்சி அது சரி என நியாயம் கற்பிக்கிறது..அதுபோலவே மது, புகை பழக்கம் மற்றும் விபச்சாரம் போன்ற ஏனைய தவறுகளும். பிறரால் நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் போதும் ஒரு தவறு சரியெனபடுகிறது இவைகள் தவறென்று ஏற்று கொள்வோரின் தனிமனித வாழ்வு வேண்டுமானால் மேம்பாடு அடையலாம். (சமுகம் முழுவதும் நிலையான நன்மையே ஏற்படுத்த முடியாது) எனினும் மனசாட்சி